பணம் கொடுத்துப் பெறப்படும் இடம் மாறுதல்கள்... கோபத்தில் தென்மாவட்ட ஆசிரியர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2014

பணம் கொடுத்துப் பெறப்படும் இடம் மாறுதல்கள்... கோபத்தில் தென்மாவட்ட ஆசிரியர்கள்.


சிலர் பணம் கொடுத்து வேண்டிய பள்ளிகளுக்கு இடமாறுதல்களைப் பெற்றுக் கொள்வதால், மற்ற ஆசிரியர்கள் பெருமளவில் பாதிக்கப் படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும். இதில் பல ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் அல்லாமல் வெகுதூரம் உள்ள பள்ளிகளில் பணி இடம் மாற்றம் செய்யப்படுவதால் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இதில் ஏகத்துக்கும் பணம் புகுந்து விளையாடுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்பட தென்மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் பலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த மாவட்டத்துக்கு வரமுடியாமல் தவியாய் தவித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களில் பலருக்கு சீனியாரிட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் அவர்கள் பலமுறை ஏமாற்றத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து தென்மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘தமிழக பள்ளி கல்வி துறை ஊழல் நிறைந்ததாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கவுன்சிலிங்கில் காலி பணியிடங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. அல்லது முழுமையாக காண்பிக்கப்படுவதில்லை. தூத்துக்குடி மாவட்டதில் கடந்த ஆண்டு எந்த பாடத்திற்கும் ஒரு இடம் கூட காண்பிக்கப்படவில்லை. பணம் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் முடிந்ததும் அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகே உள்ள பள்ளிகளில் இடமாறுதல் உத்தரவு வழங்கப்படுகிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும் சில குறிப்பிட்ட ஆசிரியர்களே பணம் வாங்கி கொடுக்கும் புரோக்கர்களாக செயல்பட்டு வருகின்றனர். ஒரு பணியிட மாற்றத்துக்கு அமைச்சர், உயர் அதிகாரிகள் என ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை விலை பேசப்படுகிறது. குறிப்பாக குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு மாறுதலாகி வருவதற்கு தான் அதிக பணம் கொடுக்கப்படுகிறது. பண வசதி இல்லாத ஏழை, எளிய ஆசிரியர்கள் கவுன்சிலிங்கையே நம்பி பதிவு மூப்பில் இடம் இருந்தாலும் இடமாறுதல் கிடைக்காமல் குடும்பத்தை பிரித்து பல வருடங்களாக வாடி வருகின்றனர். இவ்வா்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பலர் வெறுப்பில் இருக்கின்றனர். இப்படி இருந்தால் அரசு பள்ளி மாணவர்கள் பொது தேர்வில் எப்படி சாதிப்பார்கள். ஆசிரியர்கள் சங்கங்களை சேர்நதவர்கள் தங்கள் சுய தேவைகளுக்கு மட்டுமே அவற்றை பயன்படுத்தி கொள்கின்றனர். இந்த பிரச்சனையை ஆராய்வதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை' என இவ்வாறு அவர்கள் தெரிவிக்கி்ன்றனர்.

5 comments:

  1. இந்தப் பிரச்சனை பல ஆண்டுகளாகத் தொடர்ந்துவருவது வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம் ஆகும். இதில் புரோக்கர்களாக செயல்படும் ஆசிரியர்கள் வேறு தொழில் செய்துகொண்டு போய் விடலாம்.இந்தப் புனிதமான ஆசிரியப் பணியில் இருந்து கொண்டு இந்த வேலை செய்வது வெட்கக்கேடான விஷயம் ஆகும்.நேர்மையான ஆசிரியர்கள் மட்டுமே இதனால் பாதிக்கப்படுகின்றனர்.இடம் மாறுதல் விசயத்தில் பள்ளிக்கல்வித்துறை மிகுந்த கவனிப்புடன் செயல்பட்டு பணம் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும்,பணம் பெறுபவர்களுக்கும் குறிப்பிட்ட வருடங்களுக்கு இடம் மாறுதல் அளிக்காமல் தண்டனை அளிக்க வேண்டும்.எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் இவர்கள் ஊழல் பெருச்சாளிகளாக உலவுவதை பள்ளிக் கல்வித்துறை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே பல நேர்மையான ஆசிரியர்களின் விருப்பம்.

    ReplyDelete
    Replies
    1. Sir dont blame teachers, they are only mediators.The total FAULT AND AMOUNT going directly to authorities like DEO,CEO,AEO,J.D,DIRECTOR,MINISTER. very little only for mediator.moreover mediator is not a deciding authority too.

      Delete
  2. நிர்வாக காரணம் என்பதை தவறாக பயண்படுத்தி சில உயர்அதிகாரிகள் பல லட்சங்களை சுவாக செய்கிறார்கள்

    ReplyDelete
  3. ஊழல் செய்யும் அதிகாரிகள் ஒழிக

    ReplyDelete
  4. Sangkam nenacha itha thadukka mudiatha... Sangkatthal thavarukalai velikonduvanthu, neyayattha nilainiruttha mudiatha. Sangkatthin aanmayai ithil kaattungkal...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி