வேலைவாய்ப்பக பதிவு எளிய நடைமுறை கடைபிடிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2014

வேலைவாய்ப்பக பதிவு எளிய நடைமுறை கடைபிடிப்பு.


பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவ, மாணவியருக்கு, அவர்கள் படித்த பள்ளியிலேயே, மதிப்பெண் சான்று வழங்கும்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு, வேலைவாய்ப்பு ஆணைய வெப்சைட்டில் இணைக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளிக்கும், பிரத்யேக, "யூசர் ஐடி' மற்றும், "பாஸ்வேர்ட்' வழங்கப்படுகிறது. பதிவு எண்ணை குறிப்பிட்ட வெப்சைட்டில் பதிவு செய்யும் போது, மாணவர் பற்றிய முழு விவரமும் அதில் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவரின், ரேஷன் கார்டு எண், ஜாதி விவரம், மதிப்பெண் சான்று ஆகியவற்றை பரிசோதித்து, பள்ளி நிர்வாகம் மூலம், வேலைவாய்ப்பக பதிவேட்டில், இன்டர்நெட் மூலம் பதிவு செய்து, அட்டை வழங்கப்படும்.பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரிகளுக்கு, வேலைவாய்ப்பு பதிவு குறித்து பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அதிகாரி கூறியதாவது: வரும், 21ம் தேதி, பிளஸ் 2வில் வெற்றி பெற்றவர்களுக்கு, மதிப்பெண் மற்றும் மாற்றுச்சான்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பள்ளியிலேவேலைவாய்ப்பக பதிவை நிறைவு செய்யும் வகையில், அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மதிப்பெண் சான்று வழங்கும் தேதியில் இருந்து, 15 நாட்களுக்கு, ஒரே சீனியாரிட்டியில் பதிவு செய்யப்படும். பள்ளியில் வேலைவாய்ப்பு பதிய முடியாதவர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்யலாம். ஆன்-லைன் வசதியில்லாத பள்ளியில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் உதவியுடன், அருகில் உள்ள பள்ளியில், பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி