கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2014

கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை.


தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு முடிந்ததும் கோடை விடுமுறை விடப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை விடுப்பில் மாணவர்கள் உள்ளனர்.
கோடை விடுமுறை விடப்பட்டாலும் சில பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக கடந்த ஆண்டு புகார்கள் வந்தன.இதையடுத்து கோடை விடுமுறை விடப்படாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது. இருப்பினும் தற்போது தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

நெல்லை மாநகரிலும் தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சிறப்பு வகுப்புகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி சீருடையிலேயே சென்று வருகின்றனர்.9–ம் வகுப்பு தேர்வான மாணவர்களுக்கு 10–ம்வகுப்பு பாடமும், 11–ம்வகுப்பு தேர்வான மாணவர்களுக்கு 12–ம் வகுப்பு பாடமும் சிறப்பு வகுப்புகளில் நடத்தப்பட்டு வருகிறது. அரசு விதிமுறையை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது மாணவர்களின் பெற்றோர் களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பெற்றோர் தரப்பில் கூறியதாவது:–பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரசு உத்தரவை மீறி பல்வேறு பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றன. ஒவ்வொரு பள்ளியும் அரசு தேர்வில் முதலிடம் பிடிப்பதற்காகவும், 100 சதவீத தேர்ச்சிக்காகவும் இந்த சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றனர். இது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.மேலும் நெல்லை மாநகரின் பல்வேறு பள்ளிகளில் 9 மற்றும் 11–ம்வகுப்பு படிக்கும் மாணவர்கள்பலர் பெயிலாக்கப்பட்டுள்ளனர். இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டால், பெயிலான மாணவர்கள் சரியாக படிக்கவில்லை.

அவர்கள் 10, 12–ம்வகுப்புக்கு சென்றால் தேர்ச்சி பெறமாட்டார்கள். இதனால் எங்கள் பள்ளியில் தேர்ச்சி சதவீதம் குறைந்து விடும் என்கின்றனர்.மேலும் தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் தந்து விடுகிறோம். ஆனால் அந்த மாணவர்களை எங்கள் பள்ளியில் சேர்த்து கொள்ளமாட்டோம். வேறு ஏதாவது பள்ளியில் சேர்த்து படிக்க வையுங்கள் என்கின்றனர். இது போல் பல்வேறு பள்ளிகளில் 150–க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு டி.சி.யை கொடுத்து அனுப்பியுள்ளனர்.இதனால் அந்த மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே இது குறித்து கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகளை கண்காணித்து அந்த பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். நெல்லை மாநகர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் கோடை சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி