வெளியாகி இருப்பது தேர்வு முடிவு மட்டுமல்ல! அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பாடம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2014

வெளியாகி இருப்பது தேர்வு முடிவு மட்டுமல்ல! அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பாடம்!!


மேனிலைப் பள்ளித் தேர்வு முடிவுகளில் வழக்கம்போல மாணவியர் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதும், சென்ற ஆண்டைக் காட்டிலும் 2.5% தேர்ச்சி அதிகரித்து இருப்பதும் வெளிப்படையாகத் தெரிபவை.
இருப்பினும் இந்த தேர்வு முடிவுகள் சொல்லாமல் சொல்லும் தகவல்கள் மிகவும் கவலைக்கு இடமளிப்பவை.முதலாவதாக, தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள 133 மாணவர்களில் (94 மாணவிகள், 39 மாணவர்கள்) ஒருவர்கூட அரசுப் பள்ளியைச் சேர்ந்தவர் அல்ல.

இரண்டாவதாக, தேர்ச்சிவிகிதம் அதிகரித்துவிட்டதாக கூறிக்கொண்டாலும், கூட்டுமதிப்பெண் 60 விழுக்காடு (அதாவது 720 மதிப்பெண்களுக்கும் அதிகமாக) எடுத்துள்ள மாணவர்கள்56 விழுக்காடு மட்டுமேஆக, அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் மிகவும் குறைந்துகொண்டே போகிறது என்பதைக் காணுறும் அதேவேளையில், தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களில் 54% பேர் 720 மதிப்பெண்களுக்கும் குறைவாக, விடைத்தாள் மதிப்பீட்டாளர்களால் கருணை மதிப்பெண் தரப்பட்டு, ஜஸ்ட் பாஸ் ஆனவர்களே அதிகம் என்பதைக் காட்டுகிறது.சென்ற ஆண்டு அதிகளவில் மாணவர்கள் 100% மதிப்பெண் பெறமுடியாதபடி வினாத்தாள் கடினமாக இருந்தது என்று பலரும் புகார் கூறியதால் இந்த ஆண்டு வினாத்தாள் எளிமையாக இருந்தது. அதனால்தான் சென்ற ஆண்டு 36 பேர் மட்டும் 100% எடுத்த இயற்பியல் தேர்வில் இந்த ஆண்டு 2,710 பேர் 100%மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கணிதம் தவிர அனைத்து பாடங்களிலும் இந்த ஆண்டு 100% மதிப்பெண் பெற்றோர் அதிகம். இந்த அளவுக்கு வினாத்தாள் எளிமையாக இருந்தபோதிலும், 720 மதிப்பெண்களுக்கு குறைவாக பாதி பேர் தேர்ச்சி பெற்றிருப்பார்கள் என்றால், அவர்களின் கதி என்ன?ஆசிரியர் நியமனங்களில் தகுதி மதிப்பெண்களுக்கு எதிராக போராட்டங்கள், வழக்குகள் தொடுத்து, அரசை நிர்பந்தப்படுத்தி, மதிப்பெண்களில் தளர்வு பெற்றிருக்கும் இந்த வேளையில், அரசுப் பள்ளியில் ஒரு மாணவர்கூட இந்த 133 பேரில் காணப்படவில்லை என்கின்றபோது, தகுதி மதிப்பெண் மிகவும் தளர்த்தப்பட்டு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களால் அரசுப் பள்ளிகளில் எத்தகைய கல்வித்தரம் இருக்கப்போகிறது என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.இந்த தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ள மாணவி சுஷாந்தியின் தந்தை ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் என்றாலும், அவரும்கூட ஒரு தனியார் பள்ளி மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார். அப்படியானால் சாதாரண மக்களின் நிலைமை என்னவாக இருக்கும்? அவர்களின் தேர்வு எதுவாக இருக்கும்? தன் மகள் முதலிடம் பெற்றதற்காக அந்தத் தந்தை பெருமைப்படக்கூடாது. தனியார் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்ததற்கு வெட்கப்பட வேண்டும்.

அவர் மட்டுமல்ல, தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் அத்தனை அரசுப் பள்ளி ஆசிரியர்களும்!அரசுப் பள்ளிகளில் நன்றாகப் படிக்கும் மாணவர்களை சலுகைகள் அளித்தும் இலவச உணவு உறைவிடம் அளித்தும் தனியார் பள்ளிகள் கொண்டுபோய் தங்கள் நிறுவனத்தின் மூலம் அவர்களை அதிக மதிப்பெண் பெறச்செய்து, தங்கள் வணிகத்தை பெருக்கிக்கொள்கிறார்கள் என்பது அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வாதம். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் கற்பித்தலில் ஈடுபடுவதில்லை என்பதைக் கண்ணெதிரே காண்பதால்தான் பெற்றோர்கள் அதற்கு இணங்குகிறார்கள் என்பதும் நிஜம்தானே?தனியார் பள்ளிகள் பிளஸ் 1 ஆண்டிலேயே பிளஸ் 2 பாடத்தை நடத்தி, மாணவர்கள் மனதில் பாடங்களை உருவேற்றி விடுகிறார்கள். இதையே அரசுப் பள்ளிகளும் செய்வது இயலாது. இதற்கு ஒரே மாற்று, பிளஸ் 2 படிப்பை, நான்கு பருவத் தேர்வுகளாக மாற்றி, நான்கு பருவத் தேர்வுகளின் மொத்த மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் படுத்தினால், அரசுப் பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டியிட வாய்ப்பாக அமையும். மாணவர்களும், அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளை எழுதும் திறன் பெறுவார்கள்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் ஒரு சிறப்பு உறைவிடப் பள்ளியை உருவாக்கி,மாவட்ட அரசுப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் 90% மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அனைவரையும் அதில் சேர்த்து, திறமையான ஆசிரியர்களைக்கொண்டு இந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்தால், தனியார் பள்ளிகளுக்கு இணையான இலக்குசார்ந்த போட்டியை சந்திக்கவியலும்.வெளியாகி இருப்பது தேர்வு முடிவு மட்டுமல்ல, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பாடம். மக்கள் நம்பிக்கை இழக்கும் முன்பாக களத்தில் இறங்கியாக வேண்டிய கட்டாயம்அரசுப் பள்ளிகளுக்கும் கல்வித் துறைக்கும் உள்ளது. இறங்கினால் மேன்மை; இல்லையேல் எய்துவர் எய்தாப் பழி.

12 comments:

  1. dear sir govt school il 350 eduthal science and maths group koduthu agavendum illana complaint pogum

    private school il 450 kuthan maths group 400 total irunthal than admission
    melum 11th std mark parthu continues aga fail students ku kattaya tc koduthu anupi viduvargal avan private school il than padika vendum
    govt school il ipadi seyya mudiyuma
    athuthan private school nalla mark vanga karanam

    ReplyDelete
    Replies
    1. sorry private school illai private studies i mean tutorial college

      Delete
    2. anbu mam ann TER newsku comnt pantrathillai?

      Delete
    3. anbu mam ann TET newsku comnt pantrathillai?

      Delete
  2. epr;rakhf Kjy; kjpg;ngz; vLj;j me;j khztpapd; mg;gh muRg;gs;sp Mrpupau; ntl;fg;gl;Nl Mf Ntz;Lk;


    Bamini Font

    ReplyDelete
  3. மாணவர்களை கண்டிக்கக்கூடாது, அடிக்கக்கூடாது, திட்டகூடாது, வீட்டுப்பாடம் கொடுத்து மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் இருக்கும்போது தேர்வு முடிவு இபடித்தான் இருக்கும். மேலும் தனியார் பள்ளியையும் அரசுப்பள்ளியையும் ஒப்பிடுவது என்பது வெள்ளக்காரியையும் நம்நாட்டுப்பெண்களையும் ஒப்பிட்டு கலர் குறைவு என்று புலம்புவதைப்போன்றதாகும்.

    ReplyDelete
  4. Govt.tr mattum kutram sollathiga...avagalum mathavagala pola parrnts tha avagalukum avaga pasaga athigama mark vaganumnu asa irukatha....govt trsa publicka paruga...yal parents pasagalayum first govt schoolsla admission poduda...apparam intha mathiri article eluthuga.....aana ahavana theriyatha pasagaluku all pass scheme kondu vara govt kita keluga....pasagala kandika kudathunu solra parents, media,public kita first govt plan schemesa matha solluga....apparama govt tra kutram sollalam....

    ReplyDelete
  5. Govt.tr mattum kutram sollathiga...avagalum mathavagala pola parrnts tha avagalukum avaga pasaga athigama mark vaganumnu asa irukatha....govt trsa publicka paruga...yal parents pasagalayum first govt schoolsla admission poduda...apparam intha mathiri article eluthuga.....aana ahavana theriyatha pasagaluku all pass scheme kondu vara govt kita keluga....pasagala kandika kudathunu solra parents, media,public kita first govt plan schemesa matha solluga....apparama govt tra kutram sollalam....

    ReplyDelete
  6. (for the complete comment visit: http://teacherpedagogue.blogspot.in/வாயிலோயே வாயிலோயே ஆசிரியர்கள் மீது பழி சுமத்துவதை நிறுத்துவாயே!
    வாயிலோயே வாயிலோயே

    அறிவிப்பாயே அறிவிப்பாயே
    அரசுப்பள்ளிகளின் நிர்வாகச் சீர்கேட்டிற்கும், அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுப்பதற்கும், மக்களுக்குஅரசுப்பள்ளிகளின் மீது உள்ள நம்பிக்கையின்மைக்கும் நிலையான வேலையில் நிரந்தர, பெரும்பாலான தனியார்பள்ளிகளைவிட அதிக சம்பளம் பெறும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்தான் காரணமாம், கண்டுபிடித்துவிட்டார் டௌசர் பாண்டி தினமணி ஆசிரியர்.
    நிரந்தரமற்ற, பெரும்பாலான தனியார் பள்ளிகளில் சொற்ப சம்பளத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் தான் தனியார் பள்ளிகளின் வெற்றிக்கு காரணம் என்று சொல்லாமல் சொல்கிறார்.....
    ஆசிரியர்கள் எப்போதும் எல்லோருடைய வெற்றிக்கு மட்டுமே காரணமாக இருப்பார்கள். வீழ்ச்சி என்றால் தீமையின் வீழ்ச்சிக்கு மட்டுமே காரணமாக இருப்பார்களே தவிர ஒருபோதும் தீமைக்கு அடிபணியவோ துணைபோகவோமாட்டார்கள்.


    தினமணி ஆசிரியர் உண்மைகளை மறைத்து பொய்கதைகளுக்கு பொட்டு வைத்து பூ வைத்து, முட்டாள்களுக்கு கொம்புசீவிவிடுகிறார்....

    (“உண்மை தெளியா மன்னனே! சொல்லுகிறேன் கேள். தேவர்களும் வியக்கும்படி ஒரு புறாவினது துன்பத்தை நீக்கின சிபி என்னும் செங்கோல் மன்னனும்; தனது அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியை இடைவிடாது அசைத்து ஒலித்த ஒரு பசுவின் துயரைப் போக்க எண்ணி, அப்பசுவின் துன்பத்திற்குக் காரணமான தனது அரும்பெறல் மகனைத் தானே தனது தேர்ச் சக்கரத்திலிட்டுக் கொன்றவனான செங்கோல் வேந்தன் மநுநீதிச் சோழனும் அருளாட்சி செய்த பெரும் புகழை உடைய புகார் நகரம் என்னுடைய ஊராகும்.
    தேரா மன்னா செப்புவது உடையேன்
    எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
    புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
    வாயிற் கடைமணி நடுநா நடுங்க
    ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
    அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
    பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர்
    ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
    மாசாத்து வாணிகன் மகனை ஆகி
    வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
    சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு
    என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்
    கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி)


    ஒவ்வொரு முறையும் ஆசிரியர்கள் மீது சிலுவைகளை சுமத்தும் போதும் கண்ணகியின் கோபம்தான் கண்களில் எரிமலையாய்வெடிக்கிறது:
    மக்களும் பத்திரிக்கையாளர்களும் எந்த அளவுக்கு அறியாமையில் மூழ்கியிருக்கிறார்கள் என்பதற்கு இந்தஒரு தலையங்கமே சாட்சி. எனக்கு ஒன்று மட்டும்புரியவே இல்லை, எதர்க்கெடுத்தாலும் தனியார்பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளையும் ஒரே தராசில்வைத்துப் பார்க்கும் மடமைத்தனம் என்று ஒழியுமோ!
    இந்த தலையங்கத்தை எழுதியவனுக்கு கல்வி கற்பித்தவர்கள் தான் தலைகுனியவேண்டும்.எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறை கூறுவது, அரசுப்பள்ளிகள் சரி இல்லை என்று கும்மியடிப்பதேஒரு சிலரின் பிழைப்பாக உள்ளது. குறைகளுக்கான காரணங்களையும், அதற்கு காரணமானவர்களையும்மறைத்து ஆசிரியர்களை மட்டுமே குறைகூறும் கூட்டம், உண்மைகளை மறைத்து இதற்குகாரணமானவர்களுக்கு ஜால்ட்ரா அடித்து பிழைப்பு நடத்தும் உங்களைப் போன்ற அடிவருடிகளுக்கு பாடம்சொல்லித்தந்தவர்கள் தான் வெட்கித்தலை குனிய வேண்டும். -contd

    ReplyDelete
  7. Continuation of the previous comment…… (for the complete enlightenment visit: http://teacherpedagogue.blogspot.in// …..மதிப்பெண் தான் ஒருவனை அறிவாளியாகஅடையாளப்படுத்த அளவுகோல் என்றால் B.Ed., D.T.Ed பட்டங்களை கொடுத்து ஆசிரியர்கள் என்றுசொல்லி TET லொட்டு லொசுக்குன்னு சொல்லி ஆசிரியர்களை முட்டாளாக்கும் உங்கள் புத்திசாலித்தனம்மிகவும் அருமை. பதிலை நீங்களே தேடுங்கள்:
    1. தனியார் பள்ளியில் பணிபுரியும் ஒவ்வொரு ஆசிரியரிடமும் கேள்வி கேளுங்கள்: அரசுப்பள்ளியில்அல்லது தனியார்பள்ளியில் பணிபுரிவது, எதை தேர்ந்தெடுப்பீர்கள்?
    2. அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஒவ்வொரு ஆசிரியரிடமும் கேள்வி கேளுங்கள்: உங்கள் குழந்தை அதிகமதிப்பெண்கள் பெற அரசுப்பள்ளியில் படிக்க வைப்பீர்களா அல்லது தனியார் பள்ளியிலா?
    3. ஆசிரியர்களின் மீது எல்லாப் அண்டப்புளுகுகளையும் சுமத்தி, உண்மைகளை மூடி மறைத்து இந்தத்தலையங்கத்தை எழுதி முடித்து கல்வியில் ஏற்படும் எல்லாஅசம்பாவிதங்களுக்கும் ஆசிரியர்களையேசுட்டிக்காட்டி தப்பித்துக்கொள்ளும் மானங்கெட்டஒவ்வொருவருக்கும் இந்த கேள்வி: (i) உங்கள்பிள்ளைகள் படிப்பது தனியார் பள்ளியிலா, அரசுப்பள்ளியிலா?
    (ii) அறிவாளிகள், வெற்றிபெற்றவர்கள் என்று நீங்கள் சொல்லும் ஒவ்வொருவரின் மதிப்பெண்ணையும் ,தங்களின் மதிப்பெண்கள் உட்பட பிரசுரிக்க நீங்கள் ரெடியா?
    (iii)TET கதை- விக்ரமாதித்தன் வேதாளம் கதையைப் போன்றது. தகுதியான ஆசிரியர்கள் வேண்டும், இதைநிர்ணயம் செய்வது இந்தத் தகுதித்தேர்வின் மதிப்பெண்கள் என்றால், தற்போது நடந்த மக்களவைத்தேர்தலில் வெற்றிப்பேறப்போகிறவர்களும் இதுவரைவெற்றிபெற்று மாநிலங்களையும், நாட்டையும்கொள்ளையடிப்பவர்களும், கொள்ளையடித்தவர்களும் தகுதியானவர்களா?
    * எனக்கு கல்வி கற்பித்த ஒவ்வொரு ஆசிரியரும் எனக்குத் தெய்வம்.
    வாயிலோயே வாயிலோயே

    அறிவிப்பாயே அறிவிப்பாயே

    ஆசிரியரை இழிவுபடுத்தும் ஒவ்வொருவனும் முட்டாள்!
    முட்டாள்களின் சாம்ராஜியத்தில் அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும் இடமில்லை....
    பதவியையும், ஆட்சிஅதிகாரத்தையும் முட்டாள்களிடம் கொடுத்து கல்வியை கெடுத்து,
    ஆசிரியர்களை குறை சொன்னால்.... என்ன நியாயம்?



    கணவனை இழந்த கண்ணகி அரண்மனை வாயிலை அடைந்தாள்; அங்கிருந்த காவலனை நோக்கி, “வாயில் காவலனே! வாயில் காவலனே! நல்ல அறிவு அற்றுப் போன, தீய நெஞ்சத்தால் செங்கோல்முறையினின்றும் தவறிய கொடுங்கோல் மன்னனுடைய வாயில் காவலனே! பரல்களையுடைய இணைச்சிலம்புகளுள் ஒரு சிலம்பினை ஏந்திய கையை உடையவளாய், தன் கணவனை இழந்தாள் ஒருத்திஅரண்மனை வாயிலில் உள்ளாள் என்பதை உன் மன்னனிடம் சென்று அறிவிப்பாய்” என்று கூறினாள்.
    வாயிலோயே வாயிலோயே
    அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து
    இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே
    இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்
    கணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று
    அறிவிப்பாயே அறிவிப்பாயே
    (வழக்குரை காதை : 24-29)



    (அறிவு அறை போதல் = அறிவு சமயத்தில் உதவாமல் போதல்;இறைமுறை = செங்கோன்மை)
    B.Ed, D.Ted சிலம்புகளுக்கு சொந்தக்காரர்களை திருடர்கள், தகுதியற்றவர்கள் என்று சொல்லும் முட்டாள் யார்?
    வாயிலோயே வாயிலோயே!

    அறிவிப்பாயே அறிவிப்பாயே!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி