நிகர்நிலை பல்கலைக் கழகங்களை ஆய்வு செய்க! உச்சநீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2014

நிகர்நிலை பல்கலைக் கழகங்களை ஆய்வு செய்க! உச்சநீதிமன்றம் உத்தரவு


நாடு முழுவதும் 44 நிகர் நிலை பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட நிகர்நிலைப் பல் கலைக்கழகங்கள் உள்ளன.நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் பலவற்றில் தரமற்ற கல்வி வழங்கப்பட்டு வருவதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2006–ம் ஆண்டு பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட் டது.இதையடுத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், பி.என். தாண்டன் குழு மூலம் மத்திய அரசு ஆய்வுகளை மேற்கொண் டது. அப்போது 44நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும், அதிக கட்டணம் வசூலித்து தரமற்ற கல்வியை வழங்குவதாகவும் கண்டறியப்பட்டது.இதன் அடிப்படையில் 44 நிகர்நிலை பல்கலைக்கழகங் களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத் தப்பட்டது.

இதை எதிர்த்து நிகர்நிலை பல்கலைக்கழகங் கள் மேல்முறையீடு செய்தன.இந்நிலையில், 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் தரம், உள்கட்டமைப்பு ஆகியன வற்றை ஆய்வு செய்து வரும் ஜூலை 30-க்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.44 நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் தமிழகத்தில் மட்டும் 17 நிகர்நிலை பல் கலைக்கழகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி