தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையா? அல்லது பிறருக்கான அறிவுரையா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2014

தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையா? அல்லது பிறருக்கான அறிவுரையா?



ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் சலுகை கேட்கும் ஆசிரிய நண்பர்களுக்கு.... எனக்கு ஒரு சந்தேகம்.... தயவு செய்து விளக்கம் அளிக்கவும்....

பள்ளியில் படிக்கும் மாணவ செல்வங்களில் யாரும் இடஒதுக்கீட்டு பிரிவினர் இல்லையா? தங்களுக்கு 35 மதிப்பெண்களில் இருந்து தளர்வு வேண்டும் என்று அவர்கள் ஏன் கேட்பதில்லை?

மாணவர்களாகிய அவர்களுக்கு தங்கள் திறமை மேல் முழுநம்பிக்கை உள்ளது என நான் கருதுகிறேன்....
அதனால் தான் அவர்கள் மதிப்பெண் சலுகை பற்றி பேசுவதும் இல்லை... வழக்கு போடுவதும் இல்லை.. ஆனால்.... ஆசிரியர் பணிக்கு செல்லவிருக்கும் நாம் எந்த நிலையில் இருக்கிறோம்? 90 மதிப்பெண்கள் கூட எடுக்க திறமை இல்லாத ஆசிரியர்களாகிய நாம் அப்பணியில் சேர ஆர்வம் கொள்வது ஏன்? 
ஒரு ஆசான் மாணவர்களுக்கு எடுத்துகாட்டாக விளங்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.... பணியும் பணமும் மட்டுமா நமது குறிக்கோள் .... ஆசிரியர் பணி அறப்பணி என்று நினைப்பவர்கள் மதிப்பெண் சலுகை எதிர்பார்ப்பது தவறா? சரியா?

நான் இவ்வளவு பேசுகிறேனே... எனது மதிப்பெண் எவ்வளவு என்று நீங்கள் கேட்கலாம்... மூன்று தேர்வுகள் முறையே எனது மதிப்பெண்கள் 46, 65, 81...இதன் மூலம் எனது திறமை வளர்ந்து கொண்டுதான் செல்கிறது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.. ஆனால் இம்முறை முழுநம்பிக்கை, திறமையுடன் தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.. இம்முறை 120 மதிப்பெண்களுக்கு மேல் நான் பெற்று முழு ஆசானாக மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக செல்லவே விரும்புகிறேன்... 

இன்னும் ஒரு விஷயம் கூறிக்கொள்ள விரும்புகிறேன்... எனக்கு தந்தையில்லை... sc வகுப்பை சேர்ந்த நான் உடல் நலக்குறைவால் இருக்கும் எனது தாய் , புகுந்த வீட்டில் பிரச்சினை காரணமாக வாழாமல் வந்து எங்களுடன் இருக்கும் என் அக்கா மற்றும் அவர்களின் குழந்தை .... இவர்களின் ஒரே நம்பிக்கை நான்.. நானில்லை என்றால் இவர்களில் யாருமே இருக்க மாட்டார்கள்.. இது என் குடும்ப சூழ்நிலை... இவற்றை எல்லாம் விட விருப்ப பட்டு படித்த ஆசிரியர் பணி ஒன்றே எனது குறிக்கோள் ... எனக்கு எந்த சலுகையும் வேண்டாம்.. என்னுடைய நம்பிக்கையும் திறமையும் நான் பட்ட அனுபவங்களும் என்னிடம் பயிலும் மாணவ மாணவிய செல்வங்களுக்கு அவர்கள் சிறந்த மாணவர்களாக வளர கண்டிப்பாக உதவும்... 

யாரெல்லாம் சிறந்த ஆசிரியராக மலர விரும்புகிறீர்கள்? உடலில் ஊனம் இருந்தால் மனம் சாதிக்கும்... மனதிலே ஊனம் இருந்தால்?... சலுகை என்பது ஒரு வித இயலாமையின் வெளிப்பாடு தானே?.... தன்னால் முடியாது என்று நினைக்கும் மனிதன் (ஆசிரியர்) மற்றவர்களுக்கு (மாணவர்களுக்கு) முடியும் என்ற நம்பிக்கையையும் வாழ்வில் வெற்றிக்கான வழியையும் எவ்வாறு கற்பிக்க இயலும்?............ (எனது கருத்தில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் ஆசிரிய நண்பர்களே)

125 comments:

  1. மனுசன்யா நீ !

    ReplyDelete
    Replies
    1. விஜய் 1987 ல் பிறந்தீர்களா ? உங்கள் வயது27 ஆ? இவ்வளவு முதிர்ச்சியை நான் எதிர்பார்க்க வில்லை . உங்கள் உண்மையான வயது என்ன நண்பரே

      Delete
    2. விஜய் . உங்கள் பதிலுக்கு காத்து இருக்கிறேன்

      Delete
    3. நான் பிறந்த வருடம் 1987 தான் நண்பரே... என் கருத்துக்களை பாராட்டியவர்களை விட கேலி செய்தவர்களே அதிகம்..
      பிறந்ததிலிருந்து நான் பட்ட அவமானங்களும் அடிகளும் தான் என் மனதை பக்குவபடுத்தியன...

      Delete
    4. நான் பிறந்த வருடம் 1987 தான் நண்பரே... என் கருத்துக்களை பாராட்டியவர்களை விட கேலி செய்தவர்களே அதிகம்..
      பிறந்ததிலிருந்து நான் பட்ட அவமானங்களும் அடிகளும் தான் என் மனதை பக்குவபடுத்தியன...

      Delete
    5. நல்ல விளக்கம் . தங்களது TET REG no வெளியிட முடியுமா ?

      Delete
    6. நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை என்று வைத்து கொள்வோம் திரு.விஜய்.. நீங்கள் உண்மையிலே விஜய் தானா? என்பதை அறிய உங்கள் பதிவு எண்ணை கூறுங்கள்,

      Delete
    7. mr. basha , munbaila ennava irunthina , ethana peru pathivu ennai vanki irukinga , vangi enna panapara , muthalla pesara un pathivu enna velli idu , appurAM KETKALAM MATHAVANGA PATHIVU ENNAI

      Delete
    8. ITHU KARUTHUKALUKKU MATTUMAY , KARUTHU NALLA IRUNTHA PUTTICHIRUKKU NU SOLLUNGA , NALLA ILLAYA PUDIKALA NU SOLLUNGA ,

      Delete
    9. கருத்து சொல்பவன் யோக்கியனா இருந்தால் ஏற்கப்படும் . கண்ட நாய் சப்போர்ட் கு வரும் போது மேலும் சந்தேகம் அதிகரிக்கிறது .
      VIJAY ur TET reg update பன்னுங்ஙக

      Delete
    10. Vaanga Mr. Alwin una than ethirparthen.. Nowentaum vambilukq vantingala.. naa mumbai'la ena panengarathu irukatum.. ne kalviseithi'la ena panringa.. Elaraum wanted poaivambilutu asinga padrathu than unga work'ah? Nana post panen, vijay thane post panaru.. na avarta kekuren ithula nee enga vantha

      Delete
    11. I think vijay also one of ur name'ah? Na pass paniten cv atnd paniten enoda reg num post pana prb varalam varama irukalam..but vijay than pass agala'e.. cv'um atnd panalaye.. avar num reg panrathula ena prb vanthura poguthu... oru vela num post pana unmai'ana name terinjurum'nu bayapadringala... epdium inum 30min'la intha cmnd'a orutar delete paniruvaru.. athukula padichu terinjukonga....

      Delete
    12. mr.vijay 1987 , u know very wel u r not me aswel i am not u , i am already involve in this matter , sry for it , nw mr. basha , 1.comment pannura ellaruma avunga avenga real name la pannuranga ,2.(real name) intha mathiri ethanaperu irukanga 3. ninga kuda jailani basha nu potu irukinga , how can i belive u r basha 4. aduthu tamil nadula ethanaio katuraikal varuthu , antha katurai ellam yaro thana eluthi irubbanga , athelam poiee avunga vidu address venum kirathu entha vagai il niyayam
      melay mr. vijay1987 pottu irukkura katturaikku ellam reg no ketta neega ungalai pola santheyga piranee yarum illa , nambanum athu than valgai
      atha vitu kittu adichiruven uthachiruven veliya vada patthulam naayae peyaee antha paiya intha paiya innu pesu vathu antha pesura name than aasingappatuth thu thu , nannum kallai pen enakkum aanal aasiriyanukku limit irukku , athu muthalla kavaniga , avrum kallaikkirar nanum kaliikiren entru limit i thantum pothu than moothal kal varukintra na
      nan ithu varai intha site a entha aasiriyaraium antha paiyen intha paiyen entru thidiyathu illai , kindal than seiven
      ennakum kai irukku type addikka , ennakkum vai irukku assingama ka pesa aanal appadi pesuvathu illai , u should know ur limit , emotion il thitinal kuda limit thandamal thita palakik kol
      finally i am not mr. vijay1987 , avaroda reg. no thevail illai entralu athai ketpathu thavaru , athu avar istappattal oliya

      Delete
    13. vijay Sir வணக்கம் . என் பெயர் M.செங்கோடன் -( Physics -1989 may10 - Sc) எனது மதிப்பெண்கள் முறையே 58, 86, 110.( Reg No:13TE34201849 ) எனது மனநிலையையும்.எனது குடும்ப சூழலையும் அப்படியே பிரதிபலிக்கும் உங்களை பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கும், இயலாமையை மறைத்து இடஒதுக்கீட்டை முன்வைக்கும் பலருக்கும் உங்களின் முயற்சியும், சிந்தைனயும் அவர்களை வெட்கப்பட வைக்கும்........தன்னம்பிக்கையும்,கடின உழைப்பும் என்றும் தோற்றுப்போகாது.

      Delete
    14. Well said Mr. alwin.. neenga sonathu correct than na accept panikuren.. But 1thnk.. Na Mr. Vijay kita q ketapa neenga involve aanathu tappu.. 2nd yethuta yedupulaye Nee Vaa Poa'nu pesunathu.. A teacher should learn to give respect to others..
      Then Mr. Vijay post panathu ivlo periya argument 'ku idam tanthuruku.. so matavanga kekura q'ku avar kandipa ans paniye aaganum.. And then ithuvarai na yaraum da potum pesunathu ila,ena tapa pesuna anonymous 'a tavira.. ungala insult pananum'nu enaku aasaum ila.. Oru smal advice, inimelavathu namaku thodarbu ilayha matter'la involve aagathinga... K thank you..
      Last but not least, enoda name jailani basha than.. doubt iruntha facebook page'la vanthu search pani parunga.. enoda profile patha terium..

      Delete
    15. 109மார்க்பெற்ற செங்கோடரே வாழ்த்துக்கள் . .அதிக மார்க் எடுத்த காரணமாக நீநீங்கள். சலுகையை எதிர்க்கலாம்.
      ஆனால் விசய் எதிர்ப்பதே வியப்பூட்டுகிறது .
      இங்கு சில வண்டுஉருட்டி தலையர்கள் உருவாக்கிய கற்பனை கதாபாத்திரமே இந்த விசய்

      Delete
    16. hello Mr. vijay ithana varusam naga padichathula ungaluku nambikai illaya

      syllabus set pannavan muttal eaxm ealuthunavan muttal pass panavan muttal thiruthunavan mutala aparam eathuku bed la oru exam vaikaranga direct ah tet vaikalam la thapu panara institution keaka mudiyala keta lanjam ahtlam keaka thupu illa tet la relaxation keta thapa

      Delete
    17. Mr.ஜிலானி பாஷா.. மாற்றுகருத்தை சொல்லும் போது அதை ஆசிரியருக்குரிய முறையிலிருந்தும் தகுதியிலிருந்தும் தன்னை தரம் தாழ்த்தாமல் சொல்லவேண்டும். நீங்கள் அதை நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள்..

      நீ வா போ என்று ஒருமையில் பேசுவதை மாணவர்களிடம் கூட தவிர்க்கவேண்டும்.எனேட்ரால் முன்னுதாரணமாக நம்மை நினைப்பவர்களிடம் நாமே முன்னுதாரணமாக இல்லாமல் தாழ்ந்துவிடக்கூடாது.ஆசிரியரான பிறகு இது தானாகவே ஒவ்வொருவருக்கும் வருவது இயல்பு அதற்க்கு முன் எப்படியோ அது தேவையில்லை என்றே நினைக்கின்றேன்...

      அடுத்து நீங்கள் சொல்லியது போல நமது பெயரை கொண்டு நாம் பதிவிடும் போது நாம் நமது கருத்துக்களுக்கு பொறுப்பாகின்றோம் நமது பெயரை வேறு ஒருவரின் பெயராகவோ இல்லை வேறு ஒருவரின் முகமூடிக்குள்ளே ஒளிந்து கொண்டு சொல்ல வேண்டிய அவசியமில்லை..

      உண்மையில் நமது பதிவுகளுக்கு நாம் தான் பொறுப்பு... கருத்தை தெரிவிப்பது நமது உரிமை என்பது எப்படியோ அப்படிதான்..அதற்க்கு நாமே பொறுப்பு...

      ஆனால் Mr.விஜய் தனது கருத்தை நம்மைப்போல கருத்தை வெளியிட்டார்.. அதை பற்றி கேக்க நமக்கு உரிமை உண்டு அனால் அவர் இங்கே இதை ஒரு கட்டூரையாக வெளியிடவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்...

      Delete
    18. ஒரு சராசரி மனிதனையும் மிருகமாக்க ஒரு பிறவி மிருகமால மட்டுமே முடியும் . Sri புரிகிறதா ?????

      Delete
    19. அந்த மிருகத்தை அனுசரித்து செல்வதா? இல்லை தடவிகொடுத்து செல்வதா? இல்லை அதனைவிட்டு விலகிச்செல்வதா? என்பதை ஒரு ஆசிரியரால் நன்கு புரிந்து கொண்டு செயல்பட முடியும் நண்பரே...

      Delete
    20. ஒரு சராசரி மனிதனையும் மிருகமாக்க ஒரு பிறவி மிருகமால மட்டுமே முடியும் . Sri புரிகிறதா ?????

      Delete
    21. திருவாளர். SRI அவர்களே. நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நானும் ஏற்றுக் கொள்கிறேன்.
      But na avarta reg num ethuku ketena Niraya per fake id'la than comment panranga. Apdi cmnt panra elarum tappa than pesuranga. Yaru namala kandu pidika poranga'nu thairiyatula..Na Vijay'oda reg num just keten avarida reply epdi irukum'nu terinjuka.. but ithuvarai oru reply'um varama irukurathu than konjam doubt.. anyway na tappa ethum ketruntha sorry... Mr. Vijay u carry on all the best for your bright future..:):):)

      Delete
    22. Antha mirugam ungal veet
      tu pennai asinga paduthinal ipdi paesuveera nanbare?

      Delete
    23. நண்பர்களே .அதிக மார்க் எடுத்த காரணமாக நீநீங்கள். சலுகையை எதிர்க்கலாம். ஆனால் விசய் எதிர்ப்பதே வியப்பூட்டுகிறது .இந்த நிமிடம் வரை அவரின் TET reg no தர மறுப்பது ஏன் ஏன் ஏன் . இங்கு ஒரு வண்டுஉருட்டி தலையன் உரு வாக்கிய கற்பனை கதாபாத்திரமே இந்த விசய்1987 .அந்த கற்பனை கதாப்பாத்திரத்திற்கு உயிர் ஊட்டிய பெருமை திரு .மணி அவரையே சாரும் .மற்றவர்களும் வந்தது வாட்ச்மென் ஆ உயர் அதிகாரி யா னு யோசிக்காமல் சல்யூட் அடிக்கிறீர்கள்.கண்ணால் காணும் அனைத்தும் உண்மை என நம்பி கும்பிடு போடாதீர்கள்ram ramMay 27, 2014 at 10:01 PMநண்பர்களே .திரு . மணி உயிர் ஊட்டிய அந்த கற்பனை கதாபாத்திரம் விசய் 1987 பக்கத்தை தற்போது போய் பார்வை இடவும் . உங்களின் அறியாமையை உணரலாம் . A T உன்னுடைய கபட நாடகம் ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ .Reply

      SRI ITHARKU UNGAL PATHIL ENNA

      Delete
    24. Vijay 1987 pondra pala santhekathirku idamanavargal thangal tet reg no therivikamal ASIRIYAR MUGAMUDI yodu ungalaium oru murai asinga paduthum pothu idaiel naan cmt pottathu ean? Unarveera? Umaku undana mariyaathai ennidam undu. Aanal MIRUGANGALUKU kaatta thevai illai.
      Engalai 82 to 89 kullanari, karadi,pitchai entra pothu enge poneer? Antha MIRUGANGALIN paechai rasitheeraa?

      Delete
    25. என் கணிப்புப்படி உறுதியாக விஜய் 1987 ம் ஏஞ்சல் தாமெஸ் இருவரும் ஒன்றாக இருக்க வாய்ப்பே இல்லை.. அது உங்களுக்கும் நன்றாக தெரியும்...

      Delete
    26. This comment has been removed by the author.

      Delete
    27. Mr.ஜிலானி பாஷா நீங்கள் மன்னிப்பு கேட்க்குமளவிற்கு தவறாக் எதையும் இங்கு பதிவிடவில்லை.. ஆனால் பதிவிற்கான பதில் கொடுக்கவும் காலம் தேவை...அவர் இதை பார்க்கும் வகையில் இப்போதுள்ள பகுதியில் கொடுங்கள் அவரிடமிருந்து பதில் கிடைகலாம்.. அவர் இதை பார்க்கவே இல்லை என்றால் அல்லது கணிணி அவர் வீட்டில் இல்லாத நிலை என்றால் ...?

      Delete
    28. En 10.30 cmt ku ungal pathil

      Delete
    29. Mr.ராம் நீங்கள் சொன்னபடி எனக்கு எதிராக நிறைய பதிவுகள் வந்த போதும் நான் இதுவரை மேலே சொன்ன முறையை தான் அதிகமாக் கடைபிடிதிருகிறேன் என்று நினைக்கின்றேன்... நீங்களும் சில நண்பர்களும் எனக்காக பதிவுகளை கொடுத்த போது உங்களிடம் எனக்குள்ள மரியாதை புரிந்தது அனால் நான் அவர்களை எதிர்த்து அவர்கள் வழியிலேயே பதில் சொல்லி உங்கள் அனைவரிடமும் எனது மரியாதையை குறைத்துக்கொள்ள விருப்பமில்லை..

      உண்மையில் நான் தகாத வார்த்தைகளில் என்னை பற்றி தவறாக வசைபாடியவர்களுக்கு மீண்டும் தாகாத வார்த்தைகளில் பதிலளிப்பதால் எனது தராதரத்தை தாள் குறைத்துக்கொல்வேனே தவிர அவரை உண்மையில் நான் அவமான படுதியதாகாது.. உண்மையில் அப்படி நடந்து கொண்டால் என்னை நானே அவமானபடுத்திகொண்டது போல்தான் ஆகும்..என்னுடைய வார்த்தைகளுக்காக நான் தானே பொறுப்பெற்க்கவேண்டும்..

      அது மட்டுமில்லாமல் நாம் நமது முகத்தை அடையாளமாக கொண்டு பதிவிடுகின்றோம்... எனது முகத்தில் நானே கரியபூசி அசிங்க படுத்திக்கொள்வோனா...

      Delete
    30. பேசியிருக்க மாட்டேன்.. அதற்க்கு அவ்வளவு தான் அறிவு அதுவே மிருகம் என்று அதை ஒரு பொருட்டாகவே எடுத்துகொள்ள மாட்டேன்..நீங்கள் ஏற்க்கனவே அதை மிருகம் என்றீர்கள் அதற்க்கான பதிலை நான் மேலே சொல்லிவிட்டேன் நீங்கள் மறுபடியும் கேட்கின்றீர்கள்...

      Delete
    31. இதுவே முன்பக்க அனைவரு பார்வையிடும் பகுதியாக இருந்திருந்தால் இன்னுமதிகமான விளக்கங்கள் உங்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு கருத்து சண்டைகூட வந்திருக்கலாம்..

      Delete
    32. Ungal 10.40 cmt i yaarum yearka maatargal sri sir.
      10.49 mendum pathividaum.

      Delete
    33. 10.49 இல் உள்ள பிழைகளை நீக்கி அதில் பதில் உங்களுக்கானது என்பதற்கு உங்கள் பெயரை முதலில் கொடுக்காமலிருந்தேன் அதை சரி செய்து மீண்டும் 10.56 ல் கொடுத்துள்ளேன்...

      10.40 கருத்து மிக சரியானது என்று சொல்லவில்லை ஆனால் எனது கணிப்பு இது.. காரணம் சொல்லிய முறையும் தன்மையும்.. பதிவை கொடுத்த வாக்கிய அமைப்பு ..

      Delete
    34. Mun pakkathilum pathivitu ulkean. Ethirpugal sila varalam. Pala varathu. Yenna nira peruku A T patriya vilipunarvu undu.
      Oru murai SOLLUNGA ANNA ,ANNA nu anyms la by A T nu vanthathu, yaarum A T a santhega padala. Bt marunaalea athe mathiri A T yoda blger cmt vanthathu. Marantheera?

      Delete
    35. எனக்கு தந்தையில்லை... sc வகுப்பை சேர்ந்த நான் உடல் நலக்குறைவால் இருக்கும் எனது தாய் , புகுந்த வீட்டில் பிரச்சினை காரணமாக வாழாமல் வந்து எங்களுடன் இருக்கும் என் அக்கா மற்றும் அவர்களின் குழந்தை .... இவர்களின் ஒரே நம்பிக்கை நான்.. நானில்லை என்றால் இவர்களில் யாருமே இருக்க மாட்டார்கள்..

      Intha valiyodu irupavan .1 mark koda yeduthu iruntha naamum velai ku poi irukalaamea nu than ninaipaan. Idu than iyarkai.
      Vijay in cmt il VETHANAI YA VIDA NADIPPEA ATHIGAM ULLATHU.

      Mani en 8.00 pm rpy clmt kadaisi vari padithaal nambum padiyaga va ullathu?

      Delete
    36. மறக்க மாட்டேன்.. அங்கு சொந்த பெயர் கொண்டு பதிவை கொடுக்காமல் ஒரு முகமூடிக்குள் கோழையாய் ஒளிந்து கொண்டு பதிவிடும் சிலரால் ஏற்படும் சில சங்கடங்கள்... அவர்கள் செயலால் அவருக்கு பாதிப்பில்லை என்ற நிலையில் வந்த கோழைத்தனம்..

      Delete
    37. Mani en 8.00 pm பதிவு எங்கு உள்ளது..

      Delete
    38. ராம் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள்...

      Delete
    39. This comment has been removed by the author.

      Delete
  2. Tet yeluthiya palarin aathangathaium migavum arumaiaga samoogathukku eduththu sonnatharku nandri mani sir...aanal silar ithai satru yosiththal vidivu pirakkumo yennamo?

    ReplyDelete
    Replies
    1. ரம்யா madam இதை நான் எழுதவில்லை.சும்மா publish பண்ணியிருக்கேன்.அவ்வளுவுதான் madam

      Delete
    2. நீங்களே எழுதியிருந்தாலும் வாழ்த்துக்கள். பணிநியமனத்தில் இட ஒதுக்கீடு நிச்சயமாக கொடுக்க வேண்டும். மதிப்பெண்ணில் சலுகை ஏற்புடையது அல்ல. ஏனெனில் மற்ற அரசு பணி அல்ல இது. அரசு பள்ளி இப்போதைக்கு அருமை என்ற பேச்சு பரவலாக பேசப்படுகிறது சந்தோசம். நாளைய சமுகத்தை செதுக்கும் ஒப்பற்ற பணி ஆசிரியர் பணி . யோசியுங்கள் நண்பர்களே. வாழத்துக்கள்

      Delete
  3. Excellent vijay when u started to improve urself u r a teacher equal to radha krishnan. I surely say u will win national award for best teacher. Hats off to ur will power.

    ReplyDelete
  4. sir me too in your situation

    ReplyDelete
  5. Vijay in thagavalai thunichaludan veliyita maniku nanri, anal sevidan kadhil oothiya sangu

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Anbulla Mr.Vijay 1987 How are you? Unkal ennam nitchayam ennal mathikkapada koodiyathe, Analum unkal kootrai chellamaga Ethirkiren.
    1. Neengal school or college padippil SC scholarship vangiyathunda?
    2. Yen government (some states) sila pirivinarukku relaxation tharukirathu?
    3. Neengal 82 mark last tetla Eduthirunthal ungal ennam ennavaga irunthirukkum? manasatchiyodu sinthikkavum.
    4. Relaxation kodukka vendum endra ennam Ellorukkum yen muthal tet examl elavillai?
    5.2012 candidateskku relaxationand job koduthuvittuthan 2013 tet pass pannina anaivarukkum velai ena govt arivithal unkalukku tharpothu possitive comment eluthum sahothararkalin ennam ennavaga irukkum?
    6.1.30 maninerathil 82-89 eduthavarkalai kattilum 82-89(2013) candidates entha vagaiyil thaguthiudaiyavarkal(All are same isn't it?)
    7.Oru silaral mattume munbu karkappatta kalvi indru anaivaralum karkamudikirathe eppadi?
    Yosithu parunkal Vijay yanai than mele mannai varipottukolvathu ungalukku purium?

    ReplyDelete
    Replies
    1. வசந்தன் சார் நீங்கள் சொல்லியது சில தகவல்கள் மறக்கமுடியாதவை ( என்பார்வையில் )
      உங்கள் கேள்விகளில் ஒருசிலவற்றிர்க்கு என்னுடைய பதில்கள் என்னவாக இருக்குமென்றால்...

      1 ம் கேள்விக்கு என்னுடைய பதில் நீங்கள் கல்வி கற்க உதவித்தொகை கொடுங்கள்...பள்ளியில் கல்லூரியில் கட்டண சலுகை கொடுங்கள் முடிந்தால் இலவசமாக கொடுங்கள்...அது வரவேற்க வேண்டியது...

      2.கேள்வியில் நீங்களே சொல்லியிருகின்றீர்கள் சலுகை ஒரு சில மாநிலங்களில் என்று நம் மாநிலத்திலும் கொடுத்துள்ளார்கள்...அனால் அது காலம் தாழ்ந்ததாக இருக்கிறது சரியான நேரத்தில் சரியான முறையில் உள்ளதா?

      3. நீங்கள் 100 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் உங்கள் எண்ணம் என்னவாக இருந்திருக்கும்? உங்கள் மனசாட்சியுடன் சொல்லுங்கள் அதுவும் உங்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்காது என்ற நிலையில்...

      4. இதிலிருந்துதான் பிரச்சினை தொடங்கியது செய்வனவற்றை திருந்தசெய்...உங்கள் கேள்விக்கு பதில் உங்களுக்கே ஓரளவு தெரிந்திருக்கும்.. கணிப்பில் தான்...

      5. இப்போது கொடுத்தது சரியென்றால் சென்றமுரைக்கும் கொடுத்திருக்க வேண்டுமல்லவா? அவர்கள் சமூக நீதி பெற தகுதியானவர்கள் இல்லையா? அவர்களுடையது உழைப்பில்லையா?

      6. இதற்க்கு மீண்டும் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை மேலே சொல்லியதுதான்...

      7. அருமையான கேள்வி .. அனால் இதே முறை எல்லா காலங்களுக்கும் பொருந்துமா இப்போதுள்ள நிலையில் ஒரு கோடீஸ்வரன் இந்த சலுகை மூலம் வாய்ப்பு பெறுகிறான் ஒரு ஏழை மாணவன் அதிக மதிப்பெண் பெற்றும் வாய்ப்பை இழக்கும் நிலை என்பது சரியான ஒன்றா...

      Delete
    2. ஒரு வேளை நான் 82 மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் என்னை அப்பொழுதும் திறமை இல்லாதவன் என்றே தான் கூறுவேன்... ஆசிரியர் என்பவர் அரை மனிதராக இருக்க கூடாது என்பதே என் கருத்து.. ஒரு ஆசிரியர் தனது திறமைகளை வளர்த்து கொண்டால் மட்டுமே மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க முடியும் என்பதே நான் கூறும் கருத்து....

      Delete
    3. மற்ற மாநிலங்களில் சலுகை இருப்பதையே கூறுகிறீர்களே... சலுகை அவசியமா? இயலாமையின் வெளிப்பாடு தான் சலுகை என்றே கூறிவிட்டேனே... சலுகை எதிர்பார்த்து தன திறமையை வளர்த்து கொள்ள மறந்து விடாதீர்கள் நண்பர்களே...இலவசம் , சலுகை இவையெல்லாம் மனிதனை சோம்பேறியாக மாற்றும் என்று நம்மை போன்ற ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய ஒன்று... சிந்தியுங்கள் நண்பர்களே...........

      Delete
    4. சபாஷ்..... சரியான பதில் ஸ்ரீ.....

      Delete
    5. Mr. Vijay ivlo naal engay irundhinga nanba

      Delete
    6. Vijay sir ..
      First I salute u..2007-08 ug trb Mark 98.mbc cutoff -102....2008-09ug trb mark 102..cutoff 106....
      that time others 45,55...trbgive them job .
      Appoluthu sollirukkalame...

      Delete
    7. இந்த வருடம் தான் நான் பல விஷயங்களையும் கணினியில் தனது தகவல்கள், கருத்துகளை பதிவு செய்வது பற்றி நான் அறிந்து கொண்டு இவற்றை பதிவு செய்துள்ளேன்.. (காலம் கடந்து விட்டது என்பதிற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் நண்பரே....)

      Delete
  8. Arumai arumai....migavum nalla murayil sonnirgal...ivargal suyanalavaathigal samuga nalan patriya sindhanai ilatha ivargal ellam ean intha paniyil sera virumbigirarkal....padithu mark eduka mudiyamal athilum salugai endra peyaril oorai emathura ungala ena solradhu...oru vaarthayil sola ponaal ivargal kaiyalagathavargal ...

    ReplyDelete
  9. ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் சலுகை ....

    கொடுத்துதால் எதிர்பார்ப்பு ...

    ALL THE BEST UR FUTURE mr VIJAY1987

    ReplyDelete
  10. உண்மையான ஆசிரியனின் தற்போதைய உள்ளக்குமுறல்கள் ஐயா இவை...
    தங்களின் முயற்சி என்றும் உங்கள் குடும்பத்தை வாழவைக்கும்..

    Friend நீங்கள் முதல் வரியில் கேட்ட சந்தேகத்திற்கான..,.
    பள்ளிப்படிப்பில் சலுகையளித்தால் மாணவர்களுக்கு சம்பளம் கிடைக்காது.
    ஆனால் TET exam அப்படி இல்லையே...அதனால் தான் ஐயா இவ்வளவு போராட்டம் ...

    ReplyDelete
  11. Nangal vetripetral tet ai neekuvom endru pracharam seidhar DMK Nehru endru seithi veliyitirgal pass ana engal idhayam punanadhu , vijay in thagavalai veliyitu idhaya kayathirku marundhu potulirgal Mani avargalin unmaiyana thunichaluku nanri , pass seidha nanbargale iniavadhu ondru patu namadhu velai urimaiyai petredupom

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. புரளி தானே அப்போ நானும் ஒன்னு சொல்றேன். நாகமுத்து judgement விரைவில் (28-05-) அன்று GO ஆகவும் weightge ஆகவும் வரப்போகிறது.

      Delete
    2. Surya Narayanan கொழுத்தி போடுங்க ...

      இதைக்கேட்டு இங்கு பலபேர் அடிச்சிகிட்டும் திட்டிகிட்டும் சண்டைபோடட்டும் அதை வேடிக்கை பார்க்கலாம் என்று தானே இந்த வேலைய பார்த்தீங்க...

      Delete
    3. Sri sir.. Mannikanum.. Indha news angutu oru pakkam paravikittu irukudhu... adhan sonnen.. Yaarum namba venam..

      Delete
    4. நண்பரே நாம் புரளி என்ற ஒன்றை தெரிந்தும் நம்பவேண்டாம் நம்பாதீர்கள் என்று சொல்லும் கருத்தே ஒரு விளம்பரமாக அது வேகமாக பரவ வழி செய்துவிடும்...தவறாக நினைக்கவேண்டாம் மன்னித்துவிடுங்கள்...நன்றி..

      Delete
    5. Oru awareness kaga sonnen sri sir... Sory... Deleted..

      Delete
  13. Excellent Vijay sir.. big salute to ur hope..ur post will be a hit on their head those who are expecting relaxation...

    ReplyDelete
  14. Mr vijay you are unlucky.we know your grivences.....god bless you........but dont hurt anybody....

    ReplyDelete
  15. Really salute mr. Vijay... engalin ennathai kuriyatharku .. ithu epdiruku therima foot ball match mudinju winners announcementku apro goal podalatiyum paravalla goal postla kampathula patta kuda goalnu kanaku pannikalanu solra mari iruku.... ivanga eppa tha thiruntha porangalo....

    ReplyDelete
  16. (Dear admin,

    Publishing individual comment in ednl website as news is not fair. If admin agrees to publish the total blog supports the single thought of a single person.)

    Relaxation is not a rich man's jam. It is a poor man's bread. Indian Constitution given right to every person to claim what they needed as a right.

    Even reservation in all communities including OBC, SC, ST is reserved for those candidate by law to sum up equality in society.

    Likewise, reservation is allowed as law allows. That's y ncte allowed 5% relaxation. Some states increased the % like andhra upto 40% as their policy matter. Even ncte mentioned relaxation only if the state govt policy allows.

    Pressure frm all before mp election, made tn govt to relax. But they announced as relax frm tet 2013.

    While tet 2013 82-89 written exam wit 3 hrs enjoying relaxation, 2012 tet candidates also hav a right to ask govt to consider for them. Cancelling 2013 relax or giving relaxation frm 2012 is the only solution. Cancelling wil not happen. So govt would kindly resolve by giving 2012 relax soon.

    Some didn't need reservation & relaxation. But to the defected group indian constituency allows both.

    Only the candidate who come up with little knowledge but wit higher confidence, needs reservation.

    Even the FC poor brahmin candidates blames reservation, why richer SC candidates still enjoying reservation quota.

    Candidate frm FC poor roadside Brahmin family wit 198 marks loses MBBS free admission. But the candidate frm richer SC govt salaried family for 2 generation wit 190 marks enjoying free admission. This is allowed as per law but against social inequality.

    We r in need to change constituency law.

    (If 90 above & no reservation followed for forthcoming tet exam & followed in ALL GOVT JOBS, based on pure merit & no reservation -no MBC, SC, SCA, ST QUOTA & relaxation - all dept will develop as all hav equal skill.
    -my own thought)

    But society asks relaxation & relaxation til law allows since that is still in alive.



    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்திற்கு நன்றி சிரஞ்சீவி sir,

      தனி மனித கருத்தை பதிவிட கூடாது.TET குறித்து எழுத வேண்டுமென்றால் TRB தரும் அதிகாரப்பூர்வ தகவலைத் தான் publish செய்ய வேண்டும் என்றால்.இங்கு TET குறித்து ஒரு பதிவையும் publish செய்ய முடியாது.

      இதுவரை TRB என்ன தகவலை தந்துள்ளது?

      இதுவரை மொத்தமாக தேர்ச்சி பெற்றவர்வர்களின் எண்ணிக்கையை அதிக்காரப் பூர்வமாக வெளியிட்டுள்ளதா TRB? இல்லையே!

      நாளிதழ்கள் அவர் சொன்னார் இவர் இவர் சொன்னார். தேர்ச்சி பெற்றவர்கள் இத்தனை ஆயிரமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது என்று எழுதுவதை வைத்துதான் நாமே ஒரு யூகத்திற்கு வர முடிகிறது.

      இந்த ஆண்டு உள்ள காலி பணியிடங்கள் வெளியிடுவதில் சென்ற ஆண்டு காலி பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகாரப் பூர்வமாக TRB வலை தளத்தில் வெளியிட்டுள்ளார்களா? இல்லையே!

      இன சுழற்சி அடிப்படையில் தான் பணி நியமனம் நடைபெறுகின்றது என்றிருந்தும் கம்யூனிட்டி வாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் வெளியிட்டுள்ளார்களா? இல்லையே!

      இல்லை வேறு எந்த செய்தியைத்தான் இதுவரை அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுள்ளார்கள்?

      இப்படி எல்லாவற்றிற்கும் பதில் இல்லை என்று வருவதால் எந்த செய்தியைத்தான் வெளியிடுவது என்று நீங்களாவது கூறுங்கள்.இங்கு வருகை புரிபவர்களில் TET தேர்வு எழுதியவர்களே அதிகம்.

      அவர்களோடு தொடர்புடைய செய்தியை பதிவிட்டால்தான் வலை தளத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.

      கல்வி குறித்த வலைதளங்களியே அதிக வாசகர்களை பெற்று இருப்பதும்,அதிக comment வருவதும் இந்த வலைமனையில்தான்.நீங்கள் பிற website க்கு சென்றால் இது உண்மை என்று புரியும்.இதற்கு காரணம் தனித்துவம் வாய்ந்த உண்மையான தகவலை யார் எழுதினாலும் அதை ஆதரிப்பதுதான்.

      விஜய் எழுதிய பகுதியை மீனும் ஒருமுறை படித்து விட்டு பிறகு பதில் எழுதுங்கள்.
      அவரின் வார்த்தையில் எத்தனை வலி இருக்கிறது என்பது உங்களுக்கு புரியும்.

      Delete
    2. I had understood the true pain in above article. Its the fate of all striving in our country. If the govt arranged better edn for the parents of those who written tet exam, they got any govt job & definitely guide or give better edn. Then by hardwork they score high without asking any relaxation or reservation. Since inequality overhead all, the suppressed community or a candidate frm poverty line trying to touch the minimum pass. If he she loses by few mark they wil claim their community reservation & relaxation rights as per law allows.

      Some need no relaxation.

      Some needs relaxation.

      Its their wish.

      (Above article is not written or published if that candidate scored 89 before relaxation or 81 after relaxation.)

      I am a continuous reader of blogs like kalvisolai for last 3.5 yrs, padasalai for last 2.5 yr & kalviseithi for 1.5 yrs.

      Always in all above said blogs i had commented for last 3 yrs only in general-not supporting a single thought but reflecting the truth alone. Refer my lines above or go through any of the previous comments.

      My prayers for tet process to b end soon.

      Prediction:
      (I guess that tet 2012 relaxation too announced by tn govt in assembly with preference in appointment as without weightage as followed in tet 2012 for 82-89 of tet 2012 candidates alone. Else year wise slab of weightage marks upto 7 yrs for tet certificate calculated & added wit new weightage mode to b altered.

      Only after the following process tet issue wil get end.
      1. Cv list & cv for 82-89 of tet 2012 conducted first.
      2. Result of spl disabled tet published wit cv list & cv for them.

      To clear all problems, trb would merge all the subject wise posts of 2012 & 2013 & allot the community wise seats. Backlog vacancies of sc st & PH too tabled & cleared. So all this would took tet process upto july end & the appointment would b in aug 2014.)

      Delete
    3. there are so many good teachers in tn who have got below 82.... 90 and above doesnt decide the quality of a teacher

      Delete
  17. enge salugai kettu yarrum poradavillai.. salugai kettathu oru arasial vathi... eethai arintha arasu enge evargal per vangividuvargal endru salugai endra peyaril yarukum epothikku vellai illai.... kurivettathu anal namo salugai kidithavargal athi paaritti karuthu kuruvathum. salugaiyal bathikapatavargal akaruthukku ethiraga karuthu kuruvathumdhan mitcham... nam anaivarum asiriyargale. enge mathipen enge vanthathu 0-150 mathipen edutha or thervu eluthatha seela anaithu asiriyargalum samugathukaka padupada vendum nanum padupaduven. valga asiriyar samugam valarga india samugam.....

    ReplyDelete
  18. மதிப்பிற்க்குறிய Mr.Vijay 1987 அவர்களுக்கு
    உங்களுடைய மூன்று தேர்வுகள் முறையே மதிப்பெண்கள் 46, 65, 81. நன்று நன்று நண்பரே.
    2013-ல் படித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சலுகை வழங்கி 2012-ல் படித்தவர்களுக்கு வழங்கவில்லையென்றால். கண்டிப்பாக 2012-ல் படித்த மாணவர்கள் கேட்க மாட்டார்கள் என்று நிச்சயமாக உங்களால் சொல்ல முடியுமா?.
    2013-க்கு கொடுத்த மதிப்பெண் சலுகை ஏன் 2012-க்கு கொடுக்ககூடாது?. அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்.
    இது ஒரு கண்ணில் சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெண்ணை வைத்தது போல் இல்லையா?.

    ReplyDelete
    Replies
    1. ithellam antha Vijay ku theriya povutha....?
      avar sonnathu oru vagaila sarinu vachukitalum, ipdi unmaiya nadanthukitu iruntha intha samoogathula kandipa vazhkaiya otave mudiyathu..
      oru pechuku venum na ithu nallarukum, but nadaimurai vazhkaiku otthu varathu, so govt work avaruku kastam thaan.

      Delete
    2. இப்பொழுது கொடுத்த சலுகையே தவறு என கூறுகிறேன்... 2012 இல் தேர்வுக்கு சலுகை பற்றி நீங்களே யோசியுங்கள் .... சமூகத்தில் உண்மைக்கு மதிப்பில்லை என்று ஒவ்வொருவரும் நினைப்பதால் தான் இன்று உண்மை ஒரு மூலையில் நின்று அழுதுகொண்டு இருக்கிறது... ஒரு ஆசிரியரான நீங்களே இப்படி பேசும்போது.... சமூகம் எப்படி உண்மையுடன் இருக்கும்? உலகத்தில் உண்மையுடனும் நேர்மையுடனும் பணியாற்றக்கூடிய ஒரே வேலை ஆசிரியர் மட்டும் தான்... எவ்வளவு தடைகள் இருந்தாலும் நெறிபிறலாத வாழ்க்கையை ஒவ்வொரு ஆசிரியரும் வாழ முயன்றாலே இக்கால மாணவர்கள் பிற்காலத்தில் உண்மையை மட்டுமே நிலைநாட்டுவார்கள்... தங்கள் மேல் உள்ள குற்றத்தை சமூகத்தின் மீது போடாதீர்கள் நண்பரே.... ஒவ்வொரு மாணவனும் தனக்கென ஒரு ஆசிரியரை பின்பற்றி வாழ்கிறான்... தயவுசெய்து மாணவர்களுக்கு உண்மையையும் அறநெறிகளையும் போதியுங்கள்... நன்றி

      Delete
    3. சமூகம் என்பது தனிப்பட்டு அமைப்பு அல்ல நன்பரே அது அரசியல் அமைப்போடு சேர்ந்தது. எனவே அரசாங்கம் கொடுக்கும் சலுகையை ஏற்றுக்கொள்வதும், மறுப்பதும் உங்களுடைய சொந்த விருப்பு, வெறுப்பு. ஆனால் மற்றவர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது. இது அவரவர் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது.

      Delete
  19. vijay sir no problem next tet LA nenga thaan hero

    ReplyDelete
  20. தரமான விமர்சனங்கள் இவைகள் ..ஆரோக்கியமான விமர்சனங்கள் ..தொடரட்டும் ..நன்றி .

    ReplyDelete
  21. யாரையும் மதிப்பிடாதே; யாரையும் விமர்சிக்காதே;
    யாரையும் ஒப்பிடாதே; இது உன் வேலை அன்று. --- பழமொழி


    அனைவரும் வெற்றி பெற வாய்ப்பே இல்லை; ஆனால்,
    அனைவருக்கும் வெற்றி பெற வாய்ப்புகள் உண்டு. ---- பழமொழி

    ReplyDelete
  22. 82 மதிப்பெண் எடுத்திருந்தாலும் இதையேதான் பேசுவீரா CV சென்றிருக்க மாட்டீரொ 5% சலுகை யை பயன் படுத்துவீரா உண்மை யான உண்மையை சொல்லுப்பா விஐய்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக சான்றிதல் சரிபார்ப்பிற்கு சென்றிருக்க மாட்டேன்... 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருந்தால் மட்டுமே நான் ஆசிரியர் என்று என்னை கூறிக்கொண்டு தலை நிமிர்ந்து cv க்கு சென்றிருப்பேன்.. நன்றி..

      Delete
  23. rich gets rich,poor gets poor.....இந்திய மக்கள் ஒருவரையொருவர் ஏமாற்றி தான் வாழ்கின்றனர் தங்கள் சுய லாபத்திற்காக...அதற்காக படைக்கப்பட்ட ஒரு கருவி இந்த கம்யூனிட்டி எனும் வார்த்தை.....

    ReplyDelete
  24. Vijay sir tet ll90mark eduthavarkal thiramaiana aasiriar endrum 82-89eduthavarkal thiramai illatha asiriar endrum ethai vaithu koorukireerkal oruvelai RTE act leye pass mark55%(82mark)nirnayam seithu irundal ungalin nilaippadu enna?

    ReplyDelete
  25. சார் 10 வகுப்பு மாணவன் 34 மதிப்பெண் எடுத்தவன் எப்படி திறமை இல்லாதவர் என்று கூறுகிறார்கள்

    டிஇடி 82 மதிப்பெண் கிழ் உள்ளவர்கள் எப்படி திறமை அற்றவர்கள் என்று தீர்மானிக்கிறார்கள்

    ஒருவேளை அதுபோலதான் என்று நினைக்கிறேன் tet2013 சார்

    ReplyDelete
  26. மணியரசன் அவர்களே..
    நீங்கள் சொல்வது உங்கள் தனிப்பட்ட கருத்து.. அதற்கும் இட ஒதுக்கீட்டு மதிப்பெண் தளர்வுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை.. யு ஜி சி நடத்தும் நெட் தேர்வில் மட்டும் இந்த மதிப்பெண் தளர்வு இருக்கும் பொது ஏன் டி இ டி தேர்வில் இருக்க கூடாது.. யு ஜி சி என்ன முட்டாளா?.. மதிப்பெண் தரவு வழங்குவதற்கு? நீங்கள் வரலாற்றை புரட்டி பாருங்கள்.. இது சலுகை அல்ல.. உரிமை.. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. நெலின் sir,
      இதை நான் எழுதவில்லை.உங்களைப் போன்ற கல்விசெய்தி வாசகரின் கருத்து நன்றி.

      Delete
    2. உண்மையில் நீங்கள் ஏழை என்றால் உங்களுக்கு அளிக்கலாம் அப்படி இல்லையெனில் அடுத்தவன் உரிமையை தட்டிப் பரிக்க நீங்க யார்?உரிமை கேட்க ஏழைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு ...

      Delete
    3. mani sir pg case detail ethavathu therinja sollun ga pls.

      Delete
    4. லோகநாதன் என்பவர் RTI மூலம் எப்பொழுது final list வெளியிடுவீர்கள்? என்று வினவி இருந்தார்.அதற்கு பதிலளிக்க அவரை இன்று தொலைப்பேசியில் TRB அழைத்ததாம்.

      தொலைபேசியில் அவர் final list எப்போது வெளியிடுவீர்கள் என்று கேட்ட போது.அது processing ல இருக்கு இன்னும் சில நாட்களில் முடிவு பெற்று விடும்.என்று கூறினார்களாம்.

      பள்ளி திறக்கும் முன் வெளியிடுவீர்களா? என்ற கேள்விக்கு வாய்ப்பு அதிகம். மிக விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்களாம்.

      Delete
    5. School reopen june9 one week postpone panniirukkanga

      Delete
  27. சமுதாய ஏற்றதாழ்வுகளை நீக்கவேண்டுமானால் சலுகைகள் தேவை இதை நான் சொல்லவில்லை இந்திய அரசியலமைப்பு கூறுகிறது தோழர் விஜய் அவர்களே

    ReplyDelete
  28. மக்களே மக்களுக்கு மக்களே இந்த கம்யூனிட்டி எனும் பிரிவில் உண்மையில் பலன் பெற்றவர்கள் பலன் பெறப்போகிறவர்கள் யார்? ஏழை மக்களா,கண்டிப்பாக இல்லை...உண்மையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எத்தனை பேர் இத்தளத்தில் உள்ளனர? என்னிவிடலாம்..இதனால் பலன் அடையப்போகும் மற்றவர்கள் தான் அதிகம் .,அவர்களுக்கு ஒரு வேளை சாப்பாட்டிற்கே வழி இல்லையா...அதுவும் இல்லை பிறகு ஏன் இந்த பிரிவினை? கேட்டால் இந்தியன் ளா கான்ஸ்டியூவன்ஸி வன்கொடுமை என்று கூறுவார்கள்....நம்மை நாமே அடித்துக் கொள்கிறோம்....darwins survival of the fittest போல பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்களை மிதிக்கின்றனர் இதை யாராலும் மறுக்க முடியாது இதை எதிர்க்க என்ன செய்யப் போகிறார்கள் இந்த சுயநல அரசியல் வாதிகள் ஒன்றும் செய்ய முடியாது்

    ReplyDelete
  29. ஓ சி யில் போட்டியிட்டு உங்கள் திறமையை காட்டுங்கள்.சாதி சான்றை கிழித்தெரிந்திடுங்கள் சலுகை வேண்டாம்மென்றால்.

    ReplyDelete
    Replies
    1. we r social animal அடுத்தவனை அடித்து தானே முன்னேறுவோம்

      Delete
    2. அடித்தடித்து முன்னேறியவர்கள் காலம் மாறி இது அடிப்பட்டவர்களின் காலம் உங்களுக்கூ வேண்டாம் என்றால் ஒதுங்கி இருங்கள்

      Delete
    3. மன்னிக்கவும் சகோதரி இந்த தளத்திலேயே அடித்துக் கொள்கிறோம்.,பேருந்திலும் இடம் கிடைக்க அடித்துக்கொள்கிறோம்,ஏன் இலவசங்களுக்காகவும் அடித்துக்கொள்கிறோம்

      Delete
  30. Man (we the tntet candidates) proposes .God ( our leader) disposes . The value of hard work will be provided with good rewards .

    ReplyDelete
  31. onnume nadakka povathillai veruthu poiduchu
    tet examku apparam porantha en daughter nadakka poral....

    ReplyDelete
    Replies
    1. முதல் வரியிலேயே தவறாக சொல்லிவிட்டீர்கள்... உங்கள் மகள் நடக்க போகிறார்.. எவ்வளவு சந்தோஷமான விஷயம்.. ஆனால் நீங்கள் ஒண்ணுமே நடக்க போவதில்லை என்று சொல்கிறீர்கள்..

      Delete
    2. sri sir pg trb case detail edhavathu therinja sollunga pls

      Delete
  32. WE HAVE TO BELIEVE OUR SELF .

    ReplyDelete
  33. விஜய் சார் நல்லா வருத்தப்பட்டார் , தகுதித்தேர்வில் ் (82,)90,120,149எடுத்தவங்க தான் திறமையான ஆசிரியர் என்ற தங்கள் எண்ணம் முற்றிலும் தவறு அதனால் தான்
    நீர் 5% சலுகை வேண்டாம் என்கின்றீர் சிரஞ்சீவி சார் சொன்னது போல வருங்காலத்தில் தங்கள் மகனுக்கு 190 மதிப்பெண்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்ததால் வேண்டாம் 199 பெற்றால் தான் திறமையான மாணவர் என்று மீண்டும் +2 எழுத வைப்பீரா! இந்த தகுதி தேர்வு ஆசிரியரின் திறமையை நிர்ணயம் செய்ய வில்லை ஆசிரியர் ஆவதற்கு வாய்ப்பு வழங்குகிறது குத்துமதிப்பாக எதயாவது தேர்வு செய்து தகுதி தேர்வு வெற்றி பெற்ற ஆசிரியர்களும் இருக்க வாய்ப்பு உள்ளது
    நல்ல ஆசரியருக்கான தகுதி , நல்ல தரமான மாணவர்களை உருவாக்குவது அதற்கான வாய்ப்பை நமக்கு வழங்க தேர்வு வைக்கப்படுகிறது இதில் சலுகை வழங்குவது தவறுதலாக எனக்கு தெரியவில்லை
    இப்படிக்கு , முதல் தகுதித் தேர்வில் (2012)தேர்ச்சி பெற்ற(1.30hr) 1950 ஆசிரியர்களில் ஒருவர் செ.செந்தில் குமார் கரூர் மாவட்டம்

    ReplyDelete
    Replies
    1. அருமையான கமண்ட்

      Delete
    2. Sariyana pathil senthil sir...
      ithu oru vaippu mattume ...
      Selected persons go to gov.job...
      Otherwise go to any one aided school ...

      Delete
  34. ippothu veliyetta 10 result-la 5 % relaxation kodithirunthal peil ana manavarkal anaivarum pass agi iruupparkal.ean idhai yaarum keppathillai

    ReplyDelete
  35. Final list. When will release

    ReplyDelete
  36. @ 28-29 may la puli varum
    aasiriya nanbargaley then
    30-31may la counceling then
    june 2 job la join pananum @
    idhu matum nadakala ...
    Conform august only posting
    by s.s.k karur!

    ReplyDelete
  37. விஜய் என்றால் வெற்றி மணி என்றால் மணி ஓசை ஸ்ரீ என்றால் மங்கலமான அல்லது நல்ல என பொருள் . மணி ஓசை மட்டும் கேட்டால் நல்லா இருக்காது மாடு கூட கழுத்தில் மணி கட்டி இருக்கும் அந்த மணி ஓசை ஒன்னும் அவளவு நல்லா இருக்காது ஆனால் வெற்றி மணி ஓசை கேட்கும் போது நல்லா இருக்கும் . ஆனா நல்ல காரியம் செய்த ஓசையா இல்ல கெட்ட காரியம் செய்த ஓசையா என எப்படி தெரியும் , அதனுடன் ஸ்ரீ சேர்ந்தால் தானே தெரியும் . ஆனால் இன்று ஒலித்த ஒலியோ நிச்சயமாக மங்களகரமான வெற்றி மணி ஓசை தான் ! இந்த ஓசை களுடன் சில கைகளும் சேர்ந்து பல கை ஓசையாகி விண்ணை முட்டி தள்ளியதே ! மழை பெய்தது மனம் குளிர்ந்தது ! ஆனாலும் ஒரு வருத்தம் இன்னும் சில கைகள் வேடிக்கை பார்பதே வாடிக்கையாய் கொண்டிருப்பதேனோ ! அதுவம் இனைந்தால் விண்ணை முட்டிய ஓசை எதிரொலித்து மண்ணை முட்டாதோ ! இந்த ஓசை கேட்க வேண்டுமே என்பதே என் ஆசை ! பிரிவினை என்ற வீணை போன்ற ஓசையை இந்த மங்களகரமான வெற்றி மணி ஓசை மூலம் மாற்றலாம் இது தொடருமா ! என்ற மங்களகரமான வெற்றி மணி ஓசை சாரி ஆசையோடு !

    ReplyDelete
  38. My prayers for tet process to b end soon.

    Prediction:
    (I guess that tet 2012 relaxation too announced by tn govt in assembly with preference in appointment as without weightage as followed in tet 2012 for 82-89 of tet 2012 candidates alone. Else year wise slab of weightage marks upto 7 yrs for tet certificate calculated & added wit new weightage mode to b altered.

    Only after the following process tet issue wil get end.
    1. Cv list & cv for 82-89 of tet 2012 conducted first.
    2. Result of spl disabled tet published wit cv list & cv for them.

    To clear all problems, trb would merge all the subject wise posts of 2012 & 2013 & allot the community wise seats. Backlog vacancies of sc st & PH too tabled & cleared. So all this would took tet process upto july end & the appointment would b in aug 2014.)

    ReplyDelete
  39. இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டங்கள்!

    " ....

    இது தான்....... பெரும்பான்மையானவர்கள்,"இடஒதுக்கீட்டிற்கு"எதிராக வைக்கும் வாதம். இந்த குரலில் பொதிந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொணர விரும்புகிறேன்.

    " பள்ளியில் படிக்கும் போது தனக்கு, சாதி அமைப்பை பற்றி ஒன்றும் தெரியாது என்றும் சமூகத்தில் எல்லோரும் சமமாக இருப்பதாக தான் நம்பிக்கொண்டிருந்ததாகவும் (?), கல்லூரி படிப்பிற்கு தகுதி தேர்வு நடைபெறும்போது தான்,இந்த சாதியை பற்றி தெரிய வந்ததாகவும், அதுவும் ஒரு சிறந்த கல்வி நிறுவனத்தில் தாழ்த்தப்பட்ட மாணவன் தகுதியில் குறைவாக இருந்தும் இடஒதுக்கீட்டில் எளிதாக "சீட்" கிடைத்துவிட்டதாக அறிந்த போது தான் சாதி அமைப்பு பற்றிய உண்மையைத் தெரிந்துகொண்டதாக" குறிப்பிட்டுள்ளார்.

    பள்ளியிலிருந்து கல்லூரி செல்லும் வரை... சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களை இந்த சமூகம் நடத்தும் விதம் குறித்து தெரியாவிட்டாலும், காந்தி, அம்பேத்கர், பூனா ஒப்பந்தம், இந்திய சமூகத்தின் ஏற்றதாழ்வுகள் குறித்து படித்திருப்பார்கலல்லவா? ஆனால் எந்த பாதிப்பும் இன்றி இவர்கள் வளர்கிறார்கள் அல்லது வளர்க்கப்படுகிறார்கள்.

    இவர்களது வீட்டுக்கு உள்ளேயும், இவர்கள் வழிபடும் ஆலயங்களிலும் சாதி புரையோடிகிடக்கிறது, இவர்களுடன் படித்துக்கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள், இந்த நவீன காலத்திலும் எத்தனை ஒதுக்கப்பட்டு, மனிதன் என்ற அங்கீகாரம் இன்றி சமூகத்தில் தாழ்ந்த நிலையில் வைத்து, அவனது சுயமரியாதை இழிவு செய்யப்படுகிறது என்பதை அறிவார்களா ? அதை கண்டும் அதன் பாதிப்பு இவர்களுக்கு வருவதில்லை. ஏனெனில் இவர்கள் சமூகத்தில் உயர்ந்த சாதி, "அவனை தொடதே, வீட்டுக்கு அழைச்சுட்டு வராதேனு" அப்பா அம்மா சொல்வதை கேட்டு அதன் படியே வளர்ந்தவர்களுக்கு, அதில் ஒருவனது சுயம் அவமரியாதை செய்யப்படுகிறது எப்படி புரியும்?

    எத்தனையோ தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்களின் சாதீய மனப்பாங்கில் அடிபட்டு மேலெழுந்து வருகிறார்கள் என்பது தெரியாத அளவு சுயநலமாக உள்ளனர்.

    தாழ்த்தப்பட்ட மாணவன் ஒருவனுக்கு ஒரு பெரிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும் அளவுக்கு அவன் தகுதி பெற, இவர்களை விட பல மடங்கு உழைக்க வேண்டும். பலரது பெற்றோர்கள் கல்வி அறிவு இல்லாதவர்களாக இருப்பார்கள்.அதை விட அவனை சுற்றி அவன் திறமையை அவனது சாதியை கொண்டே குறைவாக மதிப்பிடும் சமூகம் அவனை இறுக்கும். பலருக்கு... எந்த வழிகாட்டிகளும் இருக்கமாட்டார்கள். ஒரு தாழ்த்தப்பட்டவன் கல்வியில் தன்னை நிரூப்பிக்க, உயர் சாதி மாணவனை விட பல மடங்கு உழைக்க வேண்டும். சாதியை வைத்து எடை போடும் ஆசிரியர்கள் அநேகம். சாதியினால் தாழ்த்தப்பட்ட மாணவர்களை வேண்டுமென்றே...மதிப்பெண்களை குறைத்து வழங்கும் உயர் கல்விநிறுவனங்கள் உண்டு. அதனால் தான் பள்ளியில் பொது தேர்வுகளில் அதிகம் மதிப்பெண்கள் பெரும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கூட, இந்த உயர் கல்வி நிறுவனங்களில் சாதி வெறியர்களுக்கு பலியாகிறார்கள்.

    ஆனால் இதையெல்லாம் சிறு வயதில் இருந்து பார்க்கவேண்டிய அவசியம் கூட இந்த உயர்ந்த சாதி என்று கூறிக்கொள்ளும் மாணவர்களுக்கு இல்லை. சுற்றி நடக்கும், சாதிப் பாகுபாடுகள் "அவர்களை" பாதிக்காத போது அது "சனதான தர்ம்மமாக" உள்ளது. பாதிக்கும் போது, அதுவும் அது பாதிப்பு அல்ல, சமூக தர்மம் ... பங்கீடு, சம உரிமை... அது தான் இட ஒதுக்கீடு. ஆனால் இவர்களுக்கு... தனக்கு கிடைக்கவேண்டிய "சீட்" பறிபோவதாக அர்த்தம். அப்போது தான் சாதீய சமுகம் தெரிகிறது. பாகுபாடு புரிகிறது, அதுவும் சாதியால்." தாங்கள் " பாதிப்படைந்ததாக கொதித்து எழுகிறார்கள்.

    இந்த சமுதாயத்தின் கடைகோடியில் ஒருவனை நிறுத்திவைத்து, அவன் வாழ்வாதாரத்தை,சாதியின் பெயரால் அபகரித்துக்கொண்டவர்கள், இட ஒதுக்கீட்டின் மூலம் தனது இடத்தை "அவன்" பறித்துக்கொண்டான் என்று கை நீட்டுவது ???... எந்த வகையில் நியாயம்?

    எப்படி எப்படி..." இடஒதுக்கேடு மூலம் எளிதாக இடம் கிடைத்துவிட்டதாக" அந்த தாழ்த்தப்பட்ட மாணவன் சொன்னான்னா? அவன் அந்த இடத்திற்கு வர எத்தனை கடுமையாக உழைத்திருக்க வேண்டும் என்று தெரியுமா? உங்களுக்கு படிக்க வேண்டியது மட்டும் தான் இருந்திருக்கும், அவனுக்கு பல தடைகள் இருந்திருக்கும். நண்பர்களே... அவர்களது "வலி" உங்களில் பலபேருக்கு புரியாது. ஏனெனில் தீண்டாமையும் , சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளும்... அவர்களது சுயத்தை சிதைக்கும் விஷயங்கள். அதை உணர மனித நேயம் வேண்டும்.

    அவை " செய்தியாக" கூட உங்கள் உள்ளே செல்லாத போது... சமூக நீதி குறித்தும்,சாதியற்ற சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு ஒரு தடை என்றும் பேசுவது "நவீன மனுதர்மம்."

    ReplyDelete
    Replies
    1. Sir ...yentha kalathula irrukkenga ...namma nattoda president aave ukkaravacachu ..palaya kalathu kathayave pesikkittu ...maarunga sir ..

      Delete

    2. ஒட்டுமொத்த இந்தியாவிலும் 10% குறைவாக இருக்கும் உயர் சாதியினருக்கு அமைச்சரைவில் 20 இடம்.. 50% மேல் இருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கு 13 இடம்.. 16% இருக்கும் தாழ்த்தப்பட்டவர் வெறும் 3 இடம்.. மற்ற மதத்தினர் 2 பேர். (ஒரு இஸ்லாமியர் ஒரு சீக்கியர்)
      # ஆரம்பமே அதகளமா இருக்குல.. போக போக இன்னும் டாப்பா வரும் பாருங்க இந்திய மக்களே..

      Delete
  40. சாதி தெரியாம இருக்கிற பிள்ளைகள்ட்ட "நீங்க என்ன சாதின்னு" கேட்டா பதில் தெரியாது!

    நாட்டில் நடக்கும் சமூக கொடுமைகளை மறச்சுட்டு , ஒரு விதத்தில தானும் அந்த கொடுமைகளின் கூட்டாளியா இருந்துட்டு வெக்கமே இல்லாம சொல்றோம் , எங்களுக்கு சாதியை அறிமுகப்படுத்தியது இடஒதுக்கீடு என்று.

    அப்ப 12 ஆம் வகுப்பு படிக்கிற வரை உங்க புத்திசாலி பிள்ளைகள் , வரலாறு படிக்கல , தன்னை சுற்றி இந்த சமுதாயத்தில் என்ன நடக்குதேன்னே தெரிஞ்சிக்கல , டிவில, பத்திரிக்கைல சாதி கலப்பு திருமணங்களால் நடக்கும் கவுரவ கொலைகள் , சாதயின் பெயரால் நடக்கும் கலவரங்கள் , கற்பழிப்புகள் எதுவும் பார்க்க மாட்டங்க , பார்த்தாலும் அவங்களுக்கு அது குறித்தெல்லாம் அக்கறை இல்லை. அது அவர்களை பாதிக்கவும் செய்யாது.

    ஆனால் உலக அளவில் நடக்கும் நிறவெறி தெரியும் , ஒபாமா தெரியும், மற்ற மதத்தல மதத்தின் பெயரால் நடக்கும் தீவிரவாதம் புரியும் ,அதன் பேரில் நடக்கும் பயங்கரவாதம் தெரியும் .... ஆனால் சாதி மட்டும் இடஒதுக்கீடு என்ற ஒன்றின் மூலமாக தான் தெரிய வருதாம்! இவர்கள் இந்த நாட்டில் தான் இருக்காங்களாம்!

    ஏன் பூணூல் போடறோம்னு தெரியாது , ஏன் நாம மட்டும் வித்தியாசமா பேசறோம்னு புரியாது, மடி , ஆச்சாரம்ன்னு சொல்றாளே அதெல்லாம் எதுக்குன்னு புரியாது , வீட்ல கல்யாணம் பண்ணா நம்ம ஆளான்னு பார்க்கிறது புரியாது. பக்கத்துக்கு வீட்ல , இல்ல வெளியில சாபிடரப்ப சைவம்னாலும் சாப்டாம தவிர்கறது ஏன்னு புரியாது , அதெல்லாம் விட கோவில ஏன் ஐயர் மட்டும் பூசை செய்யணும் ? மத்தவங்க வெளியில நிற்கணும்னு தெரியாது , ஒரு சிலரை கோயிலுக்குள் அனுமதிக்காம, அவங்க போராடிட்டு இருக்கறது தெரியாது .
    இப்படி சாதி தெரியாம இருக்கிற பிள்ளைகள்ட்ட "நீங்க என்ன சாதின்னு" கேட்டா பதில் தெரியாது!

    நம்பிட்டோம்

    ReplyDelete
    Replies

    1. நச் கமாண்ட், சூப்பர் சூப்பர் சூப்பர்.

      Delete
  41. விஜய் சொன்ன கருத்து நல்லாயிருக்கு யோசிக்க வேண்டியதுதான் ஆனா விஜய் ஏன் தன்னோட reg no சொல்லல. ஒருவேளை அவரு இத பாக்கலையா? ஓகே நானெல்லாம் 63 மார்க் தான் எடுத்தேன் .. இன்னும் அதிகமா படிக்கணும் ... அடுத்த டெட்எப்போ வரும்? ப்ளீஸ் சொல்லுங்க சார்.. எப்படி படிச்சா அதிக மார்க் எடுக்க முடியும். ப்ளீஸ் சொல்லுங்க சார்.

    ReplyDelete
  42. Mr. Vijay's letter reflects his views about quality education system in Tamilnadu.
    He strongly believes that a person getting 90 and above is a qualified teacher.
    He explains about his family in distress and he has not mentioned his present job or jobless(?) status.
    The family is only depending on him.
    But, he worries about the 5 % relaxation given to TET which would affect quality of education in Tamilnadu and not about his family.
    He deserves to become CM or PM.
    Because he worries about a problem which is no assigned to him and does not worry for the own family.
    He got 46,65 and 81 marks.
    According to geometrical progression,he will get 94,104,111,115,etc in future TET exams.
    I think he is not realistic about the situation.
    Evenif he gets 120 in the next TET,he will never get job for the next 10 years.
    For the present exam itself,there are no posts for all.
    People post in Kalvi seithi because they worry about the posts.
    I wish to ask Vijay (alias AT) some questions.
    1.In your studies,you have never got scholarships?
    2.After getting 120 in TET, will you only get job under OC category?
    3.Do you have community certificate?
    4.Did you pay full fees for TET exam in the past 3 attempts?
    Vijay's feelings is a narrated story by a person well known to all (AT) and it is given undue weightage by the administrator.
    These type of posts must be avoided and should not be given much weightage.
    Posts giving personal advantages to some sections should be avoided.
    It is also purposely motivated in a wrong direction.
    Dear administrator,kindly avoid these types of self disclosure.This could create unrest among different sections of people.






































































    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி