அரசுப் பள்ளிகளைப்புறக்கணிக்கும் கல்வி அதிகாரிகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2014

அரசுப் பள்ளிகளைப்புறக்கணிக்கும் கல்வி அதிகாரிகள்!


மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளியன்று காலை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் விடுப்பில் சென்றிருந்ததால், மாவட்ட வருவாய் அலுவலர் மாணவ,மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார். இதில் கொடுமை என்னவென்றால், அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் யாருமில்லை என்பது தான். தேர்வில் வெற்றியடைந்த மாணவ,மாணவியர் குறித்த தகவல்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. முதன்மை கல்வி அலுவலர் தற்போது ஊரில் இல்லாத நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) சுவாமிநாதன், மாவட்ட கல்வி அதிகாரி ஜெயமீனாதேவி ஆகியோர் இப்பணிகளைச் செய்தனர்.முதலில் அவர்கள் வழங்கிய விபரங்கள் என்பது மதுரை மாவட்டத்தில் முதலிடம் பிடித்தவர்கள் என ஒரு பட்டியலைத் தந்தனர்.

மூன்று பக்கங்களில் தயார் செய்யப்பட்ட அந்த செய்தி முழுவதும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் பட்டியலாகவே இருந்தது. அரசுப்பள்ளி குறித்த விபரங்களைக் கேட்டதற்கு அவர்கள் தரவில்லை. இதன் பின் விரிவான செய்தி தரப்படும் என பத்திரிகையாளர்களுக்கான பேட்டி பிற்பகல் 11.45 மணிக்கு என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிற்பகல் 12.45 மணி வரை பேட்டி துவங்கவில்லை. ஒரு மாணவருக்காக காத்திருக்கிறோம் என கல்வித்துறைஅதிகாரிகள் கூறினர்.அவர் வந்த பின், முதலிடம் பிடித்த மாணவ,மாணவியருக்கு மாவட்டவருவாய் அலுவலர் லோ.சிற்றரசு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.அப்போது அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் குறித்த விபரங்களைக் கேட்டதற்கு, மாவட்ட அளவில் தயார் செய்யப்பட்ட பட்டியல் செய்தியாளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. அதில் சாதனைப்படைத்த அரசுப்பள்ளிகளின் மாணவ,மாணவியர்களின் எந்த விபரங்களும் இல்லை. எந்தப்பள்ளியில் எவ்வளவு பேர் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றார்கள் என்ற விபரமே வழங்கப்பட்டது.

அதில் மெட்ரிக் பள்ளியில் இருந்து எவ்வளவு பேர் தேர்வெழுதினார்கள் என்ற விபரங்கள் இருந்தது. ஆனால், மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கான முதலிடம் பிடித்தவர்களின் பட்டியல் தனியாக தயாரித்து கல்வித்துறை அதிகாரிகளால் வழங்கியதன் நோக்கம் புரியவில்லை.மதுரை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 90.54 சதவீதம் என கல்வித்துறை தயாரித்துக்கொடுத்த பட்டியலில் இருந்தது. ஆனால், மதுரை மாநகராட்சியில் இருந்து ஒவ் வொரு பள்ளியும் பெற்ற மதிப்பெண் விபரங்களுடன், 94.48 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்ற விபரம் தரப்பட்டது.இதில் யார் கொடுத்த புள்ளி விபரம் சரி எனத் தெரியவில்லை. அரசுத்துறையில் பணியாற்றிக் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு விளம்பர வெளிச்சத்தைப் பாய்ச்சும் கல்வித்துறை அதிகாரிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இதுதான் நிலை. அரசுப்பள்ளிகளின் சாதனைகளை வெளியில் சொல்லக்கூட கல்வி அதிகாரிகள் தயங்குகிறார்கள்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Its true. Muthalil ivargalai panic neekkam seyyavendum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி