கன்னியாகுமரியில் இன்று கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதிக்கும் அபூர்வகாட்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2014

கன்னியாகுமரியில் இன்று கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதிக்கும் அபூர்வகாட்சி.




கன்னியாகுமரி : ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமியன்று, முக்கடலும் சங்கமிக்கும் திருவேணி சங்கமத்தில் சூரியன் மறையும் போது, சந்திரன் உதிக்கும் அபூர்வ காட்சியை காண முடிகிறது.
அதன்படி சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் இன்று சித்ராபவுர்ணமி கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று மாலை அந்த அபூர்வ காட்சியை பார்க்கலாம். இந்த அபூர்வ காட்சியை இந்தியாவிலேயே கன்னியாகுமரியில் மட்டுமே பார்க்க முடிகிறது. இதை காண பல மாநிலங்கள் மட்டுமின்றி,வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வரத் தொடங்கியுள்ளனர். இதனால் இன்று காலை முதலே கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டத்தை அதிக அளவில் பார்க்க முடிகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க,கன்னியாகுமரியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சித்ரா பவுர்ணமியையொட்டி இன்று கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி