குறைவான தேர்ச்சி சதவீதம்: தலைமை ஆசிரியர்கள் தற்காலிக பணி நீக்கத்திற்கு கடும்கண்டனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2014

குறைவான தேர்ச்சி சதவீதம்: தலைமை ஆசிரியர்கள் தற்காலிக பணி நீக்கத்திற்கு கடும்கண்டனம்


தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநில தலைவர் எத்திராஜூலு நேற்று வெளியிட்ட அறிக்கை:
மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் கூட்டு முயற்சி மற்றும் கடின உழைப்பால் பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 2.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர்.ஆனால், 60 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி வீதம் வந்துள்ள மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. சுமார் 30 சதவீதம் வரை ஆசிரியர் பணியிடங்கள், 60 சதவீதம் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் காலியாக உள்ள நிலையில், எஞ்சியுள்ள ஆசிரியர்களை வைத்தே அரசின் 14 வகை நலத் திட்டப் பணிகள் பள்ளி வேலை நாட்களில்நிறைவேற்றப்படுகின்றன.

அதுமட்டும் அல்லாமல் டிஎன்பிசி, டிஆர்பி, டிடிஎட் தேர்வுகள், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் கணக்கெடுப்பு பணி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி உள்ளிட்டபல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.இவற்றை கணக்கில் கொள்ளாமல் தலைமை ஆசிரியர்களை மட்டுமே பொறுப்பாக்குவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. இருந்தும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது. எனவே அந்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு எத்திராஜூலு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

2 comments:

  1. Computer teachers termination kooda oru reason than
    oru sila palliyil 10 nabargal kooda computer science subject il endha varudamum illamal fail aagi ullanar

    ReplyDelete
  2. There are so many factors and stakeholders contributing to the plus2 result.Punishing one of them will not be the sole remedy to satisfy the authorities and rulers,Instead analysing the unproductive and negative factors and seeking expert opinion to overhaul the system in this regard is the need of the hour,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி