INDIA POST: அஞ்சல் துறை தேர்வுக்கு ஸ்பீடு போஸ்ட்டில் நுழைவுச் சீட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2014

INDIA POST: அஞ்சல் துறை தேர்வுக்கு ஸ்பீடு போஸ்ட்டில் நுழைவுச் சீட்டு

 வரும் 1-ம் தேதி நடைபெறவுள்ள அஞ்சல் துறை பல்செயல்பாட்டு ஊழியர் பணி நியமன தேர்வுக்கான நுழைவுச் சீட்டு துரித அஞ்சல் மூலம் அனுப்பப்படவுள்ளது.இது தொடர்பாக பத்திரிகைத் தகவல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு வட்டார தலைமை அஞ்சல் துறை பல்செயல்பாட்டு ஊழியர்களை நியமிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே பெறப்பட்டுள்ளன.வரும் ஜூன் முதல் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம்12 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுகான நுழைவுச் சீட்டை அஞ்சல் துறை அனைத்து தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கும் துரித அஞ்சல் மூலம் அனுப்பி உள்ளது.தகுதியுள்ள விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆகியவற்றின் நிலை குறித்த தகவல்கள் தமிழ்நாடு அஞ்சல் துறையின் இணையதளத்தில் (www.tamilnadupost.nic.in.) வெளியிடப்பட்டுள்ளன.விண்ணப்பதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்தி விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு வட்டார தலைமைப் பொது அஞ்சல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. 4 மாதங்களில் பெங்களூர் முழுவதும் இலவச வை-பை!
    ---ஒன்இந்தியா செய்தி

    Published: Wednesday, May 28, 2014, 13:09 [IST]
    பெங்களூர்: பெங்களூரின் அனைத்து பகுதிகளிலும் இன்னும் நான்கு மாதங்களுக்குள் அரசு இலவச 'வை-பை' இணையதள வசதி அளிக்க திட்டமிட்டுள்ளது.
    இந்தியாவின் சிலிக்கான்வேலி, நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்றெல்லாம் அழைக்கப்படுவது, பெங்களூர். அந்த பெயருக்கேற்ப தகவல் தொழில்நுட்ப வசதிகளை சாமானிய மக்களும் அனுபவிக்க அரசு வசதி செய்து கொடுத்து வருகிறது. 'வை-பை' இணையதள வசதி தற்போது, பெங்களூரின் எம்ஜிரோடு, இந்திராநகர் சிஎம்ஹெச் ரோடு மற்றும் 100 அடி ரோடு ஜங்ஷன், யஸ்வந்த்பூர் பஸ் நிலையம், கோரமங்களா மற்றும் சாந்திநகர் பஸ் நிலையங்களில் இலவசமாக கிடைக்கிறது. மாநில தகவல் தொழில்நுட்ப துறை இந்த வசதியை மேற்கண்ட இடங்களில் கடந்த ஜனவரி முதல் அளித்து வருகிறது.
    இதுபோன்ற இலவச 'வை-பை' வசதியை இரண்டாம்கட்ட நகரங்களான மைசூர், மங்களூர், ஹூப்ளி, பாகல்கோட்டை ஆகியவற்றிலும் அறிமுகப்படுத்த உள்ளதாக ஐடி-பிடி அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார். இதேபோல இன்னும் நான்கு மாதங்களில் பெங்களூரின் அனைத்து ஏரியாக்களிலும் இலவச 'வை-பை' சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
    'நம்ம வை-பை' என்று இத்திட்டத்திற்கு பெயர். தற்போது பெங்களூரில் 'வை-பை' சேவை அளிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு இடத்திலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 800 பேர் இதை பயன்படுத்தி வருகிறார்கள். நகரின் அனைத்து பகுதிக்கும் இந்த சேவை விரிவடையும்போது தடையில்லா 'வை-பை' இணைப்பு கிடைக்கும் என்பதால் பயனாளிகள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்துதான் சென்னை, நெல்லை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கான தொலைதூர பேருந்துகள் கிளம்புகின்றன. எனவே இங்கு வந்து பஸ்சுக்கு காத்திருக்கும் தமிழக பயணிகளுக்கு இலவச 'வை-பை' வசதி பயனுள்ளதாக உள்ளது. இச்சேவையை பெற, 'நம்ம வை-பை' சேவை கிடைக்கும் பகுதிகளுக்கு செல்லும்போது, நாம் பயன்படுத்தும் செல்போன் எண்ணை ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். அந்த எண்ணுக்கு 'வை-பை'க்கான பாஸ்வேர்டு எஸ்எம்எஸ் வடிவில் அனுப்பி வைக்கப்படும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி