SSLC Result: அரசுப்பள்ளி 3வது ஆண்டாக 100% தேர்ச்சி பெற்று சாதனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2014

SSLC Result: அரசுப்பள்ளி 3வது ஆண்டாக 100% தேர்ச்சி பெற்று சாதனை.


நெல்லை மாவட்டம் பத்தமடை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சாதனை புரிந்துள்ளார். பத்தமடை அரசுப்பள்ளி மாணவி பாஹிரா பானு 499 மதிப்பெண்கள் பெற்ற முதலிடத்தை பிடித்தார்.
பிளஸ் 2ல் உயிரியல் பாடம் எடுத்து பின் மருத்துவம் படிக்க பாஹிராவுக்கு ஆசை என தெரிவித்துள்ளார். மாணவி பாஹிராவுக்கு ஆசிரியர்கள், பத்தமடை கிராம மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். நெல்லை பத்தமடை அரசுப்பள்ளி தொடர்ந்து 3 ஆண்டாக 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது. பத்தமடை அரசுப் பள்ளி ப்ளஸ் 2 தேர்விலும் 3 ஆண்டாக 100% சாதனை படைத்துள்ளது குறிப்பிட்த்தக்கது.

9 comments:

  1. வாழ்த்துக்கள் பாஹிரா பானு..... அரசு பள்ளி மாணவி என்பதில் நாம் அனைவரும் பெருமைபடுவோம்.....

    ReplyDelete
  2. வாழ்துக்கள் வாழ்துக்கள் வாழ்துக்கள் வாழ்துக்கள் வாழ்துக்கள் வாழ்துக்கள் வாழ்துக்கள் வாழ்துக்கள் வாழ்துக்கள் வாழ்துக்கள் வாழ்துக்கள் வாழ்துக்கள் பாஹிரா .......

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ...
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  4. அரசு பள்ளி மாணவி பாகிரா பானுவுக்கு வாழ்த்துகள்.சாதித்து காட்டிய அப்பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்.கோழிப்பண்ணை பள்ளிகளுக்கு சவாலாக அரசு பள்ளி மாணவி சாதித்து காட்டியுள்ளார்

    ReplyDelete
  5. அரசு பள்ளியில் படித்து மாநில அளவில் முதலிடம் பிடித்த பாகிரா பானுவுக்கு இதயபூர்வமாக வாழ்த்துக்கள், அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்தவன் என்ற வகையில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இத இத இதத்தான் எதிர்பார்த்தோம். நன்றி....
    தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் இலட்சங்களை அழுது மதிப்பெண்களை பெறுவதைக் காட்டிலும், அரசு பள்ளி மாணவர்களின் சாதனைகள் வியக்க வைக்கிறது...........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி