600 மாணவர்களுக்கு ஒரே ஒரு தமிழாசிரியர்! அரசு மேல்நிலைப்பள்ளியில் அவலம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2014

600 மாணவர்களுக்கு ஒரே ஒரு தமிழாசிரியர்! அரசு மேல்நிலைப்பள்ளியில் அவலம்


அன்னுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 600 மாணவர்களுக்கு ஒரே முதுகலை தமிழாசிரியர் மட்டும் உள்ளதால் கற்பித்தல் பாதிக்கப்படுகிறது.
அன்னுார் அமரர் முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளி65 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு 1,750 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

இங்கு 6,7 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் ஆங்கில வழியிலும்கற்பிக்கப்படுகிறது. இங்கு பிளஸ் 1ல் கணிதம் மற்றும் உயிரியல் அடங்கிய முதல்பிரிவு, கணிதம், கணினி அறிவியல் அடங்கிய இரண்டாம் பிரிவு, கலைப்பிரிவு, முழு அறிவியல், வரலாறு, புள்ளியியல் என ஆறு பிரிவுகள் செயல்படுகின்றன.

பிளஸ் 2வில், புள்ளியியல் தவிர்த்து ஐந்து பிரிவுகள் செயல்படுகின்றன. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் 600 மாணவர்களுக்கும் சேர்த்து ஒரே முதுகலை தமிழாசிரியர் மட்டும் உள்ளார். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வில் உள்ள 11 வகுப்புகளிலும் தமிழ் பாடம் உள்ளது. எனவே, ஒரே தமிழாசிரியர் 11 வகுப்புகளுக்கு தலா ஒரு முறை செல்ல மூன்று நாட்கள் ஆகிவிடும். இதனால், தமிழ் பாடத்தில் கற்பித்தலும், கற்றலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்துடன். வரலாறு மற்றும் பொருளாதாரம் பாடங்களுக்கு பிளஸ்1, பிளஸ் 2வில், கடந்த ஆண்டிலிருந்தே ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் பிளஸ் 2 தேர்வில் கலை மற்றும் வரலாறு பிரிவு மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற முடியாமல் போனது.

பெற்றோர்கள் கூறுகையில், 'பிளஸ்2 தேர்வுதான் மிக முக்கியம். இதில் இரண்டு பாடங்களுக்கு ஆசிரியரே இல்லை என்பதாலும், தமிழுக்கு 11 வகுப்புகளுக்கும் சேர்த்து ஒருவர் மட்டுமே உள்ளதாலும், மாணவர்களின் தேர்ச்சியும், அதிக மதிப்பெண் பெறுவதும் பாதிக்கப்படுகிறது. காலி பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்' என்றனர்.

8 comments:

  1. some above 90 candidates have got permission from commissioner of police chennai. for unnaviradham porattam on 20.06.2014. place : Government guest house chepak, chennai. before chidambaram cricket ground. chepak chennai. Time: 10am to 5 pm
    demands put to Govt. To increase TET marks weightage from 60% to 85%. all above 90 candidates please participate and give co operation for to win the demand. contact: 9943374909

    ReplyDelete
    Replies
    1. THANK YOU FOR CORRECT NEWS PUBLISHED.

      Delete
    2. Hi Mr விஜய் , ஜூன் இறுதியில் இருதிபடியல் வர வாய்ப்புண்டா , தாமதம் ஆகுமா , ஸ்பெஷல் டெட் cv முடிந்த பிறகுதான் இருதிபடியல் வரும் என நினைக்றேன் . உங்கள் கருத்துக்கள் ...

      Delete
    3. இப்போதெல்லாம் டெட் பற்றிய செய்திகள் வருவது இல்லையே ஏன்?

      Delete
  2. தமிழுக்குததான் இங்கு மரியாதை இல்லையே....எத்தனையோ பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாகவே உள்ளன...அதனை நிரப்பத் தான் அரசு தயங்குகிறது.....

    ReplyDelete
  3. கணிதத்தில் தேர்ச்சிப் பெற்றுள்ள 9074 பேரில் பிரிவு வாரியாக ( community ) எத்தனைப் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர் என்ற விவரங்கள் தெரிந்தவர்கள் பகிருங்கள்.......

    ReplyDelete
  4. முதுகலை கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் ஆங்கிலம் பட்டம் பெற்ற தோழர்களே!

    இன்று உங்களுக்கு ஒரு நற்செய்தி!


    அரசு பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில்
    748 விரிவுரையாளர், பேராசிரியர்கள் நியமனம்
    போட்டித் தேர்வு அறிவிப்பு ஜூலையில் வெளியாகிறது
    -----தி இந்து நாளேடு


    சென்னை
    அரசு பாலிடெக்னிக், அரசு பொறியியல் கல்லூரிகளில் விரைவில் 748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப் பட உள்ளனர். இதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகிறது.
    தமிழகத்தில் 10 அரசு பொறி யியல் கல்லூரிகள், 40 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன.
    பொறியியல் கல்லூரிக ளில் உதவி பேராசிரியர் பணியி டங்களும், பாலிடெக்னிக்கில் விரிவுரையாளர் பணியிடங்களும் நேரடியாக நிரப்பப்படுகின்றன. இதற்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்து கிறது.
    இந்த ஆண்டு அரசு பாலிடெக் னிக்கில் 605 விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் 143 உதவி பேராசிரியர்களை நிய மிக்க அரசு முடிவு செய்துள்ளது.
    இதையடுத்து, இப்பணியிடங் களில் பாடப்பிரிவு வாரியான காலியிடங்கள் பட்டியல் ஆசிரி யர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது.
    748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான அறிவிப்பை ஜூலை யில் வெளியிட முடிவு செய்யப் பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.
    பொறியியல் அல்லாத 220 பணியிடம்
    பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் பாட ஆசிரியர்கள் மட்டுமின்றி ஆங்கி லம், கணிதம், இயற்பியல், வேதி யியல் உள்ளிட்ட பொறியியல் அல்லாத பாட ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர். அந்த வகை யில், பொறியியல் அல்லாத பாடப் பிரிவு இடங்கள் பாலிடெக்னிக்கில் 200-ம், பொறியியல் கல்லூரிகளில் 20-ம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    கல்வித் தகுதி, வயது வரம்பு
    பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியைப் பொருத்தவரையில், பொறியியல் பாடப்பிரிவுக்கு முதல் வகுப்பு பி.இ. அல்லது பி.டெக். பட்டம் வேண்டும். பொறியியல் அல்லாத பிரிவுகளுக்கு முதல் வகுப்பு முதுநிலை பட்டம் தேவை. பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கு பொறியியல் பிரிவுக்கு பி.இ. அல்லது எம்.இ. படிப்பில் ஏதேனும் ஒன்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் 55 சதவீத மதிப்பெண்ணு டன் முதுநிலை பட்டம் அவசியம்.
    அதோடு, யுஜிசி ‘நெட்’ அல்லது ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விரிவுரையாளர், உதவி பேராசிரி யர் பணிகளுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி