ஆசிரியர் பயிற்சிப் படிப்புகளுக்கு விரைவில் புதிய பாடத்திட்டம்  தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2014

ஆசிரியர் பயிற்சிப் படிப்புகளுக்கு விரைவில் புதிய பாடத்திட்டம்  தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் தகவல்.


ஆசிரியர் பயிற்சிப் படிப்புகளுக்கு விரைவில் புதிய பாடத் திட்டம் கொண்டுவரப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பாண்டா தெரிவித்தார்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்ற 227 பேருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் பதக்கங்களையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

விழாவில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ)தலை வர் சந்தோஷ் பாண்டா பட்ட மளிப்புவிழா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது நாடு முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிநிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் ஏறத்தாழ 13 லட்சம் மாணவ-மாணவிகள் ஆசிரியர் பயிற்சி படிப்பு படிக்கிறார்கள்.
மொத்தமுள்ள ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் 90 சதவீதம் தனியாரால் நடத்தப்படுகின்றன. எஞ்சிய 10 சதவீதம் மட்டுமே அரசு கல்வி நிறுவனங்கள். மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், வரும் காலத்தில் பள்ளிக்கல்வி முறையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்பயிற்சி படிப்பு களுக்கு விரைவில் புதிய பாடத் திட்டம் கொண்டுவரப்படும். அதில், வெறும் மதிப்பெண்ணுக்கு மட்டு மின்றி இதர செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு சந்தோஷ் பாண்டா கூறினார். புதிய படிப்புகள் அறிமுகம் விழாவில் சான்றிதழ், பட்டயம், இளநிலை, முதுகலை படிப்புகளில் 21,614 பேருக்கு பட்டம் வழங்கப் பட்டன. முன்னதாக, துணை வேந்தர் பேராசிரியை சந்திரகாந்தா ஜெயபாலன் வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். அப்போது, “வரும் கல்வி ஆண்டில் புதிதாக 8 முதுகலை படிப்புகளும், ஒரு இளநிலை பட்டப் படிப்பும், 2 முதுகலை பட்ட யப் படிப்பும், 21 சான்றிதழ் படிப்பு களும் தொடங்கப்படும்” என்று தெரி வித்தார். நிறைவில், பல்கலைக் கழகப் பதிவாளர் (பொறுப்பு) கே முருகன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி