பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலுக்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2014

பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலுக்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு

31 comments:

  1. How many vacant for history. Pls anybody?

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி

      Delete
    2. நேற்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு வருகை புரிந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி

      மற்றும் ஆதரவுதந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

      குறிப்பாக ஸ்ரீ நண்பர்க்கு நன்றி
      எங்கள் உண்ணாவிரத செய்தியினை கல்வி செய்தியில் வெளியிட்ட ஸ்ரீ நண்பர்க்கு நன்றி
      கலந்துகொள்ளாவிட்டாலும் முழுஆதரவு தந்தார் மற்ற ஒருவரை போல் ஒதுங்கிகொள்ளவில்லை ...

      Delete
    3. mr. சதீஷ்,
      நீங்கள் குறிப்பிடும் அந்த மற்ற ஒருவர் நானா?

      நான் என்றால் இது உங்களுக்குக்கான பதில்தான்.வேறொருவர் என்றால் இதுவும் வேறொருவருக்கானது.

      முதலில் உண்ணாவிரதம் எந்த வித அசம்பாவிதமின்றி நடந்து முடிந்ததற்கு இறைவனுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன்.

      ஒரு பதிவை ஒருவர்தான் அதையும் ஒருமுறை தான் publish செய்ய வேண்டும்.நேற்றைய உண்ணாவிரதம் குறித்த தகவலை ஸ்ரீ publish செய்த பின்பு நான் எப்படி அதை மீண்டும் publish செய்ய முடியும்?

      இரண்டாவது நேற்றைய உண்ணாவிரதம் குறித்து எனக்கு எந்தவிதமான கசப்பான எண்ணமும் இல்லை.அப்படி இருக்கும் போது அதிலிருந்து நான் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்?

      நான் எதை செய்தாலும் அதை சற்று அதிக ஈடுபாட்டோடு செய்யக் கூடிய ஆள்.

      கையில் mic இருக்கிறது,கேட்பதற்கு 500 பேர் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் ஏதாவது அதிக பிரசங்கித் தனமாக பேசிவிட்டால் உண்ணாவிரதத்திற்கே பங்கம் நேரிடும்.

      நான் ஒரு பிரச்சனையை குறித்து பேச வேண்டுமென்றால் பிரச்சனையின் அடி நாதம் குறித்து தான் முதலில் பேசுவேன்.அதன் படி பார்த்தால் இந்த பிரச்சனைக்கு அடி நாதமே 5% தளர்வு வழங்கியதுதான்.

      நீதிமன்றமே 5% தளர்வு சரியானது என்று தீர்ப்பு வழங்கிய நிலையில் அதை எதிர்த்து பேசுவது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்.

      இங்கே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான G.O வேண்டும் என்றார்கள்.

      சீனியரிட்டி வேண்டும்,அனுபவத்திற்கு மதிப்பெண் அளிக்கப் பட வேண்டும்,+12 மதிப்பெண்ணை நீக்க வேண்டும்,+12 மதிப்பெண்ணை நீக்கக் கூடாது, அதோடு உங்களது 85+5+5+5 weightage முறை.

      இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான weightage முறை வேண்டுமென்று உண்ணாவிரதம் நடத்தினால் உண்ணாவிரதம் ஆண்டு முழுவதும் நடந்து கொண்டேதான் இருக்கும்.

      நான் சில தனிப்பட்ட உரையாடல்களை இங்கு எழுத முடியாது.above 90 பெற்றவர்களில் பலரே இந்த உண்ணாவிரதத்தை முழுமையாக ஆதரிக்கவில்லை.

      இந்த உண்ணாவிரதம் ஏற்பாடு செய்து கொண்டிருந்த போதே, அதை ஏற்பாடு செய்தவர்களிடமும்,அதன் தலைவரிடமும் எனது நிலை குறித்து சொல்லிவிட்டேன்.

      நான் ஒற்றை மனிதன், நான் ஒருவன் மட்டும் கலந்து கொண்டாலோ அல்லது கலந்து கொல்லாததாலோ எந்த வித மாற்றமும் ஏற்பட்டுவிடாது.

      மிக முக்கியமாக சட்டத்தின் மூலமாக வேண்டுமானால் இந்த MS 71 இல் மாற்றம் கொண்டு வரமுடியுமே தவிர உண்ணாவிரத்ததின் மூலம் மாற்ற முடியாது என்பது எனது திடமான நம்பிக்கை.

      ஒருவேளை அப்படி மாறினால் அதை எதிர்த்து 82-89 பெற்றவர்களால் பல உண்ணாவிரதம் நடைபெறும் என்பதையும் சிந்தித்தாக வேண்டும்.

      Delete
    4. மணியரசண் அவர்களே நான் கூறியது 100% உங்களை தான்
      நீங்கள் கூறும் கருத்தை நான் ஏற்றுகொள்கின்றேன் இருப்பினும் உங்களிடம் சில கேள்விகள்

      1. பழைய வெயிட்டேஜ் முறை இருந்த போது அனைவரும் இறுதிப்பட்டியல் ஒன்றாக வர வேண்டும் என்று எதிர்பார்த்த போது நீங்கள் மட்டும் ஏன் 77 க்கு மேல் மட்டும் முதலில் பட்டியல் வரட்டும் என்று கூறினீர்கள் நீங்கள் 77 என்ற காரணமா?

      2. பணி தாமதம் ஆனதற்கு பல கட்டுரை எழுதிய நீங்கள் ஏன் மதிப்பெண் தளர்வின் போது கட்டுரை எழுதவில்லை

      3. நான்காவது முறையாக சான்றிதழ் சரிபார்ப்பு ஜீன் 10--13 நடைபெறும் என்ற போது அனைவரையும்
      ஏன் போராட்டத்திற்கு அழைத்தீர்கள்? ஆனால் எங்கள் போராட்டத்திற்கு வாழ்த்து சொல்ல கூட உங்களுக்கு மனம் இல்லையா?

      4. நீங்கள் போராட்டத்திற்கு வரவில்லை என்பது எங்களுக்கு கோபமோ வருத்தமோ இல்லை இருப்பினும் இந்த போராட்டத்தில் விருப்பமோ வெறுப்போ இல்லை என்று நீங்கள் கூறியதை தான் ஏற்றுகொள்ளமுடியவில்லை

      Delete
    5. இத தாங்க நானும் கேட்டேன் .
      ஒருவேளை மணியரசன் ரெங்கநாதரே ... நீங்களும்


      "" எலி வலை ""

      ஆ இருக்கீங்க?????

      Delete
    6. ராம் ராம் நண்பரே நீங்கள் 89 ஆக இருந்தாலும் எங்கள் போராட்டத்திற்கு வாழ்த்து கூறினீர்கள் உங்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே
      உங்களுக்கு அரசுபணி கிடைக்க நான் கடவுளை வேண்டிக்கொள்கின்றேன்...

      Delete
    7. எதை செய்தாலும் அது யாருக்கும் பாதிப்பு உண்டாக்காத வண்ணம் செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம்.

      1.அப்போதைய சூழலில் 77 & above பெற்றவர்களுக்கு இறுதிப் பட்டியல் வெளியிட்டு இருந்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்ற நிலையே நிலவியது.அதற்கு PGTRB தமிழ் பணி நியமனத்தையும் காரணம் காட்டி இருந்தேன்.

      2.ஒரு கட்டுரை எழுத வேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக எழுதக் கூடாது என்பது என் எண்ணம்.comment box இல் வேண்டுமானால் நமது தனிப்பட்ட கருத்துகளை,விருப்பங்களை எழுதலாம்.5% தளர்விற்கு எதிராக எழுதாதும் அதுதான் காரணம்.ஒருவேளை நான் above 90 என்பதால் 5% தளர்விற்கு எதிராக எழுதினால் below 90 உள்ளவர்களில் யாரவாது எதிர் கட்டுரை எழுத மாட்டார்களா? அது மோதல் போக்கை உருவாக்கி விடும்.

      3.நான் போராட்டத்திற்கு அழைத்தது உண்மைதான்.உபயோகமற்ற செயலை TRB செய்து கொண்டிருக்கிறது.இன்னும் 2 நாட்களுக்குள் G.O வரவில்லையென்றால் போராட்டம் வெடிக்கும் என்று எழுதினேன்.ஆனால் ஆச்சர்யமாக மறுநாளே G.O வெளியானது.

      4.விருப்பு, வெறுப்பு இல்லையென்று கூறியதற்கு காரணம்

      சட்டத்தின் மூலமாக வேண்டுமானால் இந்த MS 71 இல் மாற்றம் கொண்டு வரமுடியுமே தவிர உண்ணாவிரத்ததின் மூலம் மாற்ற முடியாது என்பது எனது திடமான நம்பிக்கை.

      ஒருவேளை அப்படி மாறினால் அதை எதிர்த்து 82-89 பெற்றவர்களால் பல உண்ணாவிரதம் நடைபெறும் என்பதையும் சிந்தித்தாக வேண்டும்.

      5 நீங்கள் அடுத்த கேள்வியை "உண்ணாவிரதத்தின் மூலம் எதையும் மாற்ற முடியாது என நினைக்கும் நீங்கள் ஏன் உண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்ய முயன்றீர்கள்?" என வினாக் கூட என் முன் வைக்கலாம்.

      உண்ணாவிரதத்தின் மூலம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து அரசின் செயல்பாட்டை துரிதப் படுத்த முடியும் ஏன் எதிர்க்கட்சி கூட அரசின் கால தாமத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் வாய்ப்பிருக்கிறது.ஆனால் நீதி மன்றம் வழங்கியத் தீர்ப்பை உண்ணாவிரதத்தின் மூலம் மாற்ற முடியாது.

      Delete
    8. உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களின் மூலம் அரசின் முடிவை மாற்றமுடியாது என்று நீங்கள் கூறுவது முற்றிலும் தவறானது மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வெற்றி பெற்றது தங்களுக்கு நினைவு இல்லையா?

      உங்களின் கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை உங்களுக்கு எங்களின் நிலை புரியவில்லை என்று கருதுகின்றேன்

      Delete
    9. அரசின் முடிவில் வேண்டுமானால் மாற்றம் ஏற்படுத்தலாம்.ஆனால் நீதித் துறையின் முடிவை மாற்ற முடியாது என்றுதான் எழுதியிருக்கிறேன்.

      உங்களின் நிலை வேறு என்னுடைய நிலை வேறு அல்ல.எல்லோரும் ஒரே நிலையில் தான் இருக்கிறோம்.

      நான் கட்டுரை எழுதவில்லை,உண்ணாவிரதத்திற்கு வரவில்லை என்று என் மீது வருத்தப் படுவதை விட நீங்கள் நன்றி தெரிவிக்கும் ஸ்ரீ,ராம் போன்றோர் உண்ணாவிரதத்திற்கு வந்தார்காளா? என்பதை யோசிக்க வேண்டும்.

      அவர்கள் உங்களது நிலையை நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள் என நீங்கள் நினைத்தால் அவர்களிடம் உங்களுக்களுக்கான நிலை குறித்து article எழுத சொல்லி அதை publish செய்வதில் தவறில்லையே.

      என்னை குறை சொல்வதை விட வேறு ஆக்கப் பூர்வமான செயல்களில் ஈடுபட்டால் உங்களது பணி சிறக்கும். நன்றி

      Delete
    10. திரு ராம்,

      கேள்வி கேட்பதற்கு, உங்களது கருத்துகளை பகிர்வதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது.

      ஆனால் முதலில் தவறான வார்த்தைகளை கொண்டு கீழ்த் தரமான comment களை எழுதுவதை நிறுத்துங்கள். பிறகு நான் நிச்சயம் உங்களுக்கு பதிலேழுதுகிறேன்.

      ஒரே article இன் கீழ்த் தரமான comment களை எழுதிவிட்டு, அதன் கீழ் பகுதியிலே என்னிடம் கேள்வி கேட்கும் போது உங்களுக்கு பதிலளிக்க எனக்கு ஒவ்வவில்லை.

      Delete
    11. கண்டிப்பாக உங்களை விட 100% எனக்கு ஸ்ரீ மற்றும் ராம் நண்பர்கள் வேண்டும் ராம் நண்பர் 89 மதிப்பெண் பெற்றவர் அவர் எப்படி உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள முடியும்?
      ஸ்ரீ நண்பர் அவர் சூழ்நிலையை விளக்கிவிட்டார்

      Delete
    12. நானும் அதையே தான் குறிப்பிடுகிறேன். நீங்கள் உங்களது நண்பர்களிடமே கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளலாமே.இடையில் என்னை ஏன் வம்பிக்குழுகிறீர்கள்?

      Delete
    13. எதிரில் இருக்கும் எதிரியை கூட மன்னித்து விடலாம் ஆனால் கூடவே இருந்து கொண்டு போராட்டத்தை பற்றி கருத்து கூறாத சிலரை என்னசெய்வது என்று தெரியவில்லை

      எது எப்படியோ நீங்கள் நன்றாக இருங்கள் உங்கள் மனதை காயப்படுத்துவது எனது நோக்கம் அல்ல

      Delete
    14. உங்களின் கருத்து எங்கள் மனதை காயபடுத்தியதன் காரணமாகவே நான் உங்களிடம் கருத்து பரிமாற்றம் செய்தேனே தவிர மற்றபடி ஒன்றும் இல்லை

      கருத்தை கவனமாக வெளியிடுங்கள்

      Delete
    15. நீங்கள் என்னை எதிரியை விட மோசமானவராக நினைத்தாலும் கூட அதில் ஆச்சர்யமில்லை.

      நம்மை நேசிப்பவர்களை விட நம்மோடு முரண்பாடுபவர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

      நான் வத்தலகுண்டில் தான் பயின்றேன்.திண்டுக்கல் சுற்றியுள்ள பகுதியில் எனக்கு சில நண்பர்கள் உண்டு.சம வயது, இருவரும் ஆசிரியர் பயிற்சி படிப்பு படித்துள்ளதால் எனக்குத் தெரிந்த நண்பர்கள் உங்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம்.

      இந்த வலைதளத்தில் எழுதுகிறார்,பலருக்கு இவரைத் தெரிகிறது, உண்ணாவிரதம் குறித்து article எழுதி, உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.ஆனால் அவ்வாறு செய்யவில்லையே என்பதுதான் நீங்கள் என்மீது வருத்தப் படுவதற்கு காரணமாக இருக்கும்.

      இந்த வலைதளத்திற்கு வருகை தருபவர்களில் பலர் 82-89,above 90 என்ற எந்த வித வேறுபாடுமின்றி,என்னை ஒரு சகோதரனாகவே பாவித்து அவர்களது தனிப்பட்ட விஷயங்கள்,குடும்ப நிலவரங்கள்,அவர்களின் புகைப்படம்,அலைபேசி எண்கள் போன்றவற்றை என்னோடு பகிர்ந்து கொள்வார்கள்.

      நான் அவர்களை madam என்று அழைத்தாலே வருத்தப் படுபவர்கள் பலர்.அம்மா,அக்கா அல்லது பெயரை சொல்லியே அழையுங்கள் என்று சொல்லுவார்கள்.தெரிந்தோ தெரியாமலோ நான் அனைவருக்கும் பொதுவாகிப் போனேன்.

      இப்படி பட்டவர்களின் அன்புக்கு இடையில் என்னால் எப்படி ஒருதலையாக எழுத முடியும்?

      இது போன்ற காரணங்களினாலே நான் அமைதியாக ஒதுங்க வேண்டியதாயிற்று.

      அதனால்தான் உண்ணாவிரதம் குறித்து எனக்கு விருப்பும் அல்ல வெறுப்பும் அல்ல என எழுதினேன்.அது உண்ணாவிரதத்தில் பங்கு பெற்றோரை பாதிக்காது என்றே நினைத்தேன்.அதுவும் நானாக எழுதவில்லை.ராம்,பவி போன்றோர் தொடர்ந்து என்னை கேள்வி கேட்டதால் எழுத வேண்டியதாயிற்று.மற்றபடி உங்களை காயப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதவில்லை.

      இவை யாவும் நான் கூறிய கருத்து உங்களது மனதை காயப் படுத்தி விட்டது என்று நீங்கள் எழுதியதால் எழுதுகிறேன்.

      என் நிலைப்பாடு குறித்து திரு விஜயகுமார்,திரு காசிநாதன்,திரு ஆல்வின் தாமஸ் போன்றோரிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டேன்.

      நீங்கள் என்னை நன்றாக கவனித்தால் தெரியும்.ஆரம்ப காலங்களில் இருந்த மணியரசன் வேறு, இப்பொழுது இருக்கும் மணியரசன் வேறு.முன்பெல்லாம் எனது கருத்தை மிகத் தீவிரமாக முன் வைப்பேன்.ஆனால் இப்பொழுது அவ்வாறு செய்ய முடிவதில்லை.நீங்களே இப்படி எழுதியிருக்கீங்களே என்று வருத்தப் படுகிறார்கள்.அதனால் அமைதியாக ஒதுங்கி விடுகிறேன்.

      நான் தனிப்பட்ட முறையில் ஒன்றை உங்களிடம் கேட்கிறேன்.85+5+5+5 முறை வந்தால் உங்களுக்கு பணி கிடைக்கும் சூழல் உருவாகும் என்று நினைக்கிறீர்களா?

      Delete
    16. ஏன் நண்பரே 82---89 க்க இவ்வளவு வருத்தபடுகிறீர்களே?
      90 க்கு மேல் எடுத்து பணிநியமனம் ஆகி விடுவோம் என்ற நிலையில் இருந்த அவர்களுக்கு இடி போல் ஏற்பட்ட மதிப்பெண் தளர்வை யோசித்து பார்த்தீர்களா?


      82---89க்கு இந்த அளவு இரக்கபடும் நீங்கள் ஏன் 90 க்கு மேல் உள்ளவர்களை மறந்தீர்கள்?
      எனது புது வெயிட்டேஜ் 65.95 டெட் மதிப்பெண் 96
      +2 --- 912
      Ug----53.2%
      B.ed--79.8%

      D.Ted படித்த காரணத்தினால் ug corres ல் படித்தவிட்டேன் அதனால் குறைவான மதிப்பெண் எடுக்க வேண்டியதாயிற்று

      90 க்கு மேல் எடுத்தவர்களின் நிலை பாதிக்காத எந்த முறையும் எனக்கு சம்மதம்

      Delete
    17. நண்பரே ... நண்பர் மகனுக்கு இன்று காது குத்து விசேஷம் ...சற்று விசேஷம். . இரவு சந்திப்போம் ...கண்டிப்பாக மணி ... வருவேன். .. காத்திருங்கள் ... இப்போது பேசினால் நன்றாக இருக்காது ... காத்திருங்கள் .... உண்மை சுடும் .. சுட வைக்கப்படும் ....

      Delete
    18. எதிரியை விட ஆபத்தானவன் யார் என கல்வி செய்தி வலை தளத்தில் உள்ள அனைவருக்கும் துகிலுரித்து காட்டிய அன்பு நண்பர் சதீஷ் அவர்களுக்கு நன்றி ...

      திரு.மணி அவர்களே ..
      " எலி வலை " என்ற வார்த்தை உங்களை மனம் நோக செய்ததா.??
      இந்த வார்த்தையை நீங்கள் தானே பயன்படுத்தினீர்கள் ்??
      உங்களால் என்றும் எனக்கு பதில் அளிக்க முடியாது என்று நானும் அறிவேன்..
      கீழ்த்தரமான பதிவு - நீங்கள் யோக்கியன் வேடமிடலாம்.. நான் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை . .
      எல்லோரும் நம்மை மட்டும் நோண்டுகிறார்களே , ஶ்ரீ ய மட்டும் யாரும் நோண்ட மாட்டேங்கிறாங்களே என்ற மன கவலை உங்களது பதிவுகளில் நல்லாவே தெரிகிறது .....

      Delete
  2. Pavi medam history vacancy 3000 only you told 4000. it's ture.

    ReplyDelete
  3. Pavi history total vacancy 3119 only. You told 4000. it's ture msg. Please tell me.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. மணியரசன் ரெங்கநாதன் இரண்டு பெயர்களும் ஒரு நபரை தான் குறிக்கின்றன நண்பரே...

      Delete
    2. மன்னிக்க வேண்டும் சதீஷ் மற்றும் ரெங்கநாதன் என்று இருக்க வேண்டும். மன்னிககவும்.

      Delete
  5. சதீஷ் மற்றும் ரெங்கநாதன் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். நான் TET தேர்வு நடைபெற்ற நாள் முதற்கொண்டு அனைத்து கருத்துக்களையும் தவறாமல் படித்து வருகிறேன். ஆனால் முதல் முறையாக ஒரு ஆரோக்கியமான விவாதத்தினைப் பார்க்கிறேன். பிறர் மனம் புண்படாதபடி அழகாக கருத்துக்களை முன் வைக்கிறீர்கள். உங்கள் இருவருக்குமே அரசுப்பணி கிடைக்க வாழ்த்துகிறேன். இது போன்ற எண்ணம் உள்ளவர்கள் நிச்சயமாக ஆசிரியப்பணிக்கு வரவேண்டும். விரைவில் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜசேகர் நண்பரே...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி