ஏழாவது ஊதியக்குழு அமைக்கும்பணியில் மத்திய அரசு தீவிரம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2014

ஏழாவது ஊதியக்குழு அமைக்கும்பணியில் மத்திய அரசு தீவிரம்.


ஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.வரும் 2016ல், மத்திய அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள விகிதத்தை நிர்ணயிக்க, ஏழாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டது.
இதன் தலைவராக, நீதிபதி அசோக்குமார் மாத்துார், உறுப்பினர்களாக, விவேக்ரே, ரத்தின்ராய், செயலராக, மீனாஅகர்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். லோக்சபா தேர்தல் காரணமாக, இந்தக் குழுவின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.தேர்தல் நடைமுறைகள் முடிந்தநிலையில், புதிய அரசு அமைந்தபின், இக்குழு, அலுவல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

முதற்கட்டமாக, அலுவலர்கள் நியமிக்கும் பணி நடக்கிறது. இந்த அலுவலர் குழுவில், சார்பு செயலர், தனிச்செயலர் உட்பட, 24 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.இந்த அலுவலர்களை, பிற துறைகளில் இருந்து நியமிக்க, மத்திய பணியாளர் துறையிடம் விவரம் கேட்டுள்ளனர். இந்த நியமனத்திற்குப் பின், 18 மாதங்கள், ஏழாவது ஊதியக்குழு செயல்படும். அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் வரை, பல்வேறு துறைகளின், தற்போதையசம்பள விகிதங்களை ஆய்வு செய்து, புதிய விகிதத்தை நிர்ணயிக்கும்.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Physics wanted 20000 hr sec school

    ReplyDelete
    Replies
    1. neenga than ella subjectlaum puliyachea neengalea poi join panni sirappa physics edukalamla

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி