சுகாதாரமற்ற தின்பண்டங்களை பள்ளி கேன்டீன்களில் விற்க தடை? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2014

சுகாதாரமற்ற தின்பண்டங்களை பள்ளி கேன்டீன்களில் விற்க தடை?


உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் தின்பண்டங்களை, பள்ளி கேன்டீன்களில் விற்பனை செய்வதற்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவது, கவலை தரும் விஷயமாக உள்ளது. மேலும், பள்ளிகளில்உள்ள கேன்டீன்களில், உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும், 'ஜங்க் புட்' எனப்படும், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள தின்பண்டங்கள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், குழந்தைகளுக்கு நோய் ஏற்படுகிறது. எனவே, இந்த உணவு வகைகளை, பள்ளி கேன்டீன்களில்விற்பனை செய்வதற்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா, இதுகுறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்து வருகிறார். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி