இலவச நோட்டு, புத்தகம் வினியோகம்: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2014

இலவச நோட்டு, புத்தகம் வினியோகம்: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்'

சிவகங்கையில், இலவச நோட்டு, புத்தகம் வினியோகம் தொடர்பாக, அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டார்.


நடப்பு கல்வியாண்டு கோடை விடு முறைக்கு பின், ஜூன் 2ந்தேதி பள்ளிகள் திறக்கும் போது, மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறைக்கு அரசு உத்தரவிட்டது. இதன்படி, நோட்டு, புத்தகம், காலணி, பை உள்ளிட்ட நலத்திட்டங்கள் மாணவர்கள் வழங்கப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்ய இரு மாவட்டத்திற்கு ஒரு இணை இயக்குனர் வீதம் பள்ளிக்கல்வித்துறை நியமித்தது. ஜூன் 2ல் குறிப்பிட்ட சில பள்ளிகளில் காலை முதலே இணை இயக்குனர்கள் ஆய்வு செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில், திருப்புவனம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இடைநிலைக்கல்வி இணை இயக்குனர் முத்து பழனிச்சாமி ஆய்வு செய்தார். அப்போது, இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கியது குறித்து, உறுதி செய்வதற்கான மாணவர்களின் கையெழுத்து பெறவில்லை என்பது தெரிய வந்தது. இந்நிலையில் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கருதி, அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, இணை இயக்குனர் உத்தரவிட்டார். முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அவருக்கு விளக்க 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர். அவரது பதிலை பொறுத்து, அவர் மீதான நடவடிக்கை தெரிய வரும் என, சிவகங்கை கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

2 comments:

  1. இன்னும் ஆங்கில வழி பாட புத்தகம், பை, காலணிகள் பல பள்ளிகளுக்கு இன்னும் வர வில்லை.

    ReplyDelete
  2. இன்னும் ஆங்கில வழி பாட புத்தகம், பை, காலணிகள் பல பள்ளிகளுக்கு இன்னும் வர வில்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி