டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 1,045 பேரின்விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. வயது வரம்பு கடந்துவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர்,ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆகிய பதவிகளில் 79 காலியிடங்களைநிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத்தேர்வு வருகிற 20-ம் தேதி நடத்தப்படுகிறது.தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளம்(www.tnpsc.gov.in)மூலம் ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண்ணைக் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கிடையே, தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில்1,045 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
குருப்-1 தேர்வெழுத வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 என்றும், இதர பிரிவினர்கள் அனைவருக்கும் 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வயது வரம்பு கடந்துவிட்டகாரணத்தினால் 1,036 பேரின் விண்ணப்பங்களையும், 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் மத்திய-மாநில அரசு பணியில் இருப்பவர்கள் குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்ற விதியின் அடிப்படையில் 9 பேரின் விண்ணப்பங்களையும் டிஎன்பிஎஸ்சி நிராகரித்துள்ளது.
any one write today skilltest group 2 second level ku enna padikanum
ReplyDelete