2 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 1100 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, சட்டசபைக் கூட்டத்தொடரில் அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2014

2 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 1100 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, சட்டசபைக் கூட்டத்தொடரில் அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும்.


தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 1100 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, சட்டசபைக் கூட்டத்தொடரில் அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும், இல்லாவிட்டால்

ஆகஸ்ட் 6ம் தேதி கோட்டை நோக்கிபேரணி நடத்தப்படும் என்று தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில தலைவர் சங்கரபெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது வரை 2 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும்,1,100 ஓவியம், தையல், இசை உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.கடந்த 2012 மற்றும் 2013ல் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் உடற்கல்விமற்றும் சிறப்பு ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக முதல்வர்ஜெயலலிதா அறிவித்தார்.

இது தொடர்பாக அப்போது அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால்இதுவரை காலி பணியிடங்களை பள்ளி கல்வித்துறை மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை.கடந்த 3 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடாததால் பள்ளிகளில் உடற்கல்வி தொடர்பான பணிகள் சரியாக நடைபெறவில்லை. குறிப்பாக, 6 முதல் 9ம் வகுப்பு வரை உடற்கல்வி தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் பெரும்பாலான பள்ளிகளில் காலியாக உள்ளதால் பாடம் நடத்துவது கிடையாது.தற்போது வரை தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். ஆனால், அரசு அறிவிக்கப்பட்ட பணியிடங்களை கூட உடனே நிரப்பாததால் படிப்பை முடித்து 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளி கல்வித்துறையிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வருகிற 17ம் தேதிசட்டசபையில் பள்ளி கல்வித்துறை மானியக்கோரிக்கையில் உடற்கல்வி மற்றும் சிறப்புஆசிரியர் தொடர்பான காலி பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற ஆகஸ்ட் 6ம்தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

5 comments:

  1. School education department junior assistant joining order Epping.

    ReplyDelete
  2. JA joining pathina arivippu veliyagavendum uruthiyaga veliyagum ena nambuom.....frnds

    ReplyDelete
    Replies
    1. Other department junior assistant all join ready. Somebody get salary also but we are?????????????

      Delete
  3. Please anybody know spl tet vacancy?

    ReplyDelete
  4. economics judgment copy. see now question.............................................................................................................................In the result, the writ petition is allowed in part with a
    direction to the Teachers Recruitment Board to revalue the answer
    sheets of all the candidates in respect of Economics subject and
    award marks to the candidates who have opted either option “A”
    (A.C.Pigou) or option “D” (Don Patinkin) as the right answer in
    respect of Question No.144 and also award marks to the
    candidates who have opted either option “B” (Fiat Money) or option
    “C” (Internal Money) in respect of Question No.134. No costs.
    Interim order already granted shall stand vacated. Consequently,
    connected miscellaneous petitions are closed.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி