'தமிழகத்தில், 2.87 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன' என, தமிழக அரசு ஊழியர் சங்கமாநில பொதுச் செயலர் பாலசுப்ரமணியன் கூறினார்.
ராமநாதபுரத்தில், நிருபர்களிடம், அவர் கூறியதாவது:தமிழக வருவாய் துறையில், 2,000 வி.ஏ.ஓ.,க்கள்; 70 துணை கலெக்டர்கள்; வணிக வரித் துறையில், 4,600; தேர்வாணையத்தில், 150; வேலைவாய்ப்பு துறையில், 470; சமூக நலத்துறையில், 970; சத்துணவு திட்டத்தில், 25 ஆயிரம்; ஐ.சி.டி.எஸ்.,சில், 10 ஆயிரம்; கல்வித் துறையில், 5,000; உணவு பொருள் வழங்கல் துறையில், 750; நகராட்சிகளில் 17 ஆயிரம் என, ௨.௮௭ லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன.இதில், அனைத்து அரசு அலுவலகங்களிலும், 2 லட்சம் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களே, அதிகளவில் காலியாக உள்ளன. 2014ல், ௧.௫௦ லட்சம் பேர் ஓய்வுபெறுகின்றனர்.நாடு சுதந்திரம் அடைந்தபோது இருந்த மக்கள் தொகை அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை, 67 ஆண்டுகளாக தொடர்கிறது.
மூன்று மடங்கு அளவுக்கு ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.மாறாக, தினக்கூலி, தொகுப்பூதிய ஊழியர்களை கொண்டு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. குறைவான ஊதியத்தால், படித்த இளைஞர்களின் வாழ்க்கை தரம், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொகுப்பூதிய ஊழியர்களின் தவறுகளுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடியாத நிலையும் உள்ளது.
காலி பணியிடங்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்வதால், அரசின் புதிய திட்டங்களை அமல்படுத்தும்போது,பணிச்சுமையால் ஊழியர்கள் மனஉளைச்சல் அடைகின்றனர்.பங்களிப்புடன் கூடிய, புதிய ஓய்வூதியத் திட்டத்தில், 1.76 லட்சம் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை, ஓய்வுபெறும் நாளில் கொடுக்காமல் நிலுவையில் உள்ளது.அரசு நிர்வாகங்களில் தேக்க நிலையை போக்க, காலி பணியிடங்களை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, பாலசுப்ரமணியன் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி