பி.எட்., எம்.எட். படிப்புகளின் காலம் 2 வருடமாக உயர்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2014

பி.எட்., எம்.எட். படிப்புகளின் காலம் 2 வருடமாக உயர்கிறது.


இந்தியா முழுவதும் கல்வித்தரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகளும் கல்வியில் மேம்பாடு அடைய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

தற்போது பி.ஏ., பி.எஸ்.சி. படித்தவர்களுக்கு பி.எட். என்ற ஆசிரியர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது இது தற்போது ஒரு ஆண்டுகால படிப்பாகும். அதுபோல எம்.எட். படிப்பும் ஒரு வருட காலபடிப்பாகும். இந்தியாவில் கல்வித்தரத்தை மேம்படுத்த முதல் கட்டமாக ஆசிரியர்களுக்கு நல்ல திறமை இருக்கவேண்டும். இதையொட்டிதேசிய ஆசிரியர் கல்விக்குழு பி.எட். படிப்பையும், எம்.எட். படிப்பையும் தலா 2 வருடமாக உயர்த்த கொள்கை அளவில் முடிவு எடுத்துள்ளது.

இதுகுறித்து இந்தியா முழுவதும் இருந்து அனைத்து ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் கருத்துக்களை கடிதமாக தேசிய ஆசிரியர் கல்விக்குழுவிற்கு சமர்ப்பித்துள்ளன. தேசிய ஆசிரியர் கல்விக்குழு பரிசீலித்து முடிவை எடுக்க உள்ளது. பெரும்பாலும் பி.எட். படிப்பையும், எம்.எட். படிப்பையும் 2 ஆண்டுகளாக உயர்த்துகிறது.

இந்த 2 ஆண்டு படிப்பு அடுத்த கல்வி(2015-2016) ஆண்டில் இருந்து அமல்படுத்தப்படுகிறது.பி.எட்., எம்.எட். படிப்புகள் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டால் ஆசிரியர்களும் நன்றாக பயிற்சி பெற்று மாணவர்களுக்கு இப்போது உள்ளதை விட மேலும் சிறப்பாக கல்வி கற்பிக்க முடியும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி