"பென்ஷனில் 3.96 மடங்கு திருத்தம் செய்யுங்கள்" 7வது ஊதியக்குழுவில் ஓய்வூதியர் முறையீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2014

"பென்ஷனில் 3.96 மடங்கு திருத்தம் செய்யுங்கள்" 7வது ஊதியக்குழுவில் ஓய்வூதியர் முறையீடு.


மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழுவுக்கு, அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில், பென்ஷன் உயர்வு குறித்து, தபால் மற்றும் இமெயில் மூலம் அனுப்பி உள்ளனர்.
இக்கூட்டமைப்பு மாநிலத்தலைவர் சாமிநாதன் தலைமையில், ஈரோட்டில் இருந்து, பென்ஷனர்கள், ஏழாவது ஊதியக்குழுவுக்கு, அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது:உயர்ந்து வரும் மருந்துகளின் விலை, மருத்துவ கட்டணம், வயது முதிர்வு போன்றவைகளை கணக்கிட்டு, மாத மருத்துவப்படியை, 2,500க்கு குறையாமல் வழங்குதல். 50க்கு பதில், 65 சதவீதமும், 30க்கு பதில்,45 சதவீத குடும்ப பென்ஷன் வழங்க வேண்டும்.

பென்ஷன், குடும்ப பென்ஷன், 3.96 மடங்கு திருத்தம் செய்ய வேண்டும். திருந்திய பென்ஷன், குடும்ப பென்ஷன் அமலாகும் நாளுக்கு பின் உள்ளவர்களைவிட, முன் உள்ளவர்களுக்கு குறைவு ஏற்படுவதை நிவர்த்தி செய்ய வேண்டும். குறைந்த பட்ச, அதிகப்பட்ச ஊதிய விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும்.பத்தாண்டுகளுக்கு பதில், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அல்லது, 50 சதவீதம் டி.ஏ., உயர்வில், பென்ஷன், குடும்ப பென்ஷன் திருத்த வேண்டும். கம்யூட்டேஷன் பிடித்தம், 12 ஆண்டாக, ஐந்தாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி நிர்ணயிக்க வேண்டும்.புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும். வீட்டு வாடகைப்படி அனுமதிக்க வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை, மனுவாக அனுப்பி வைத்தனர்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. nanga ipa dan apointment ayurukom engaluku pensiney kidayadhu nanga enna panradhu sir soluga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி