கல்விச் சீர்திருத்தங்களுக்காகத் தனது அரசையே பறிகொடுத்த- கம்யூனிஸ்ட் கட்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2014

கல்விச் சீர்திருத்தங்களுக்காகத் தனது அரசையே பறிகொடுத்த- கம்யூனிஸ்ட் கட்சி

1956-ல் மொழிவழி மாநிலங்கள் அமைந்தன .
1957-ல் சென்னை ராஜதானியிலிருந்து பிரிந்த கேரள மாநிலத்தில் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைந்தது.



உலகிலேயே முதன் முறையாக ஜனநாயக வழியில் அமைந்த கம்யூனிஸ்ட் அரசு என்ற பெருமையைப் பெற்றது.

மலையாள மொழி கேரள மாநிலத்தின் ஆட்சி மொழி ஆனது.


மே-தினம் ஊதியத்துடன் விடுமுறை, குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்குதல் ஆகியவற்றுடன் நலச் சீர்த்திருத்தம்,
கல்விச் சீர்த்திருத்தம், அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு கேரளத்தின் ஈ.எம்.எஸ் அரசு முனைப்புடன் செயல்படுத்தியது.


கல்வியில்- தனியார் மற்றும் மத சபையினர் ஆதிக்கத்தைத் தவிர்த்திடக், கல்வி அமைச்சர் ஜோசப் முண்டசேரி கொண்டுவந்த கல்வி மசோதாவிற்கு எதிராக கலவரங்களை உருவாக்கினர்.


ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசும், அகில இந்திய காங்கரஸ் கட்சித் தலைவர் இந்திரா காந்தியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த கேரள அரசைக் கலைத்தனர்.


மத்திய அரசின் அதிகாரத்தில் முதன் முதலாகக் கலைக்கப்பட்ட மாநில அரசு - கேரள அரசு என்ற பெயர் நிலைபெற்றது.


கல்விச் சீர்திருத்தங்களுக்காகத் தனது அரசையே கம்யூனிஸ்ட் கட்சி பறிகொடுத்தது.


-வரலாறு தொடரும்......


இளம் ஆசிரியர்கள் உண்மையான இயக்க வரலாறினை தெரிந்துகொள்வதற்காகவும்,
போராட்ட உணர்வினை அவர்களிடம் வளர்க்கவும்
"  ஆசிரியர் இயக்க வரலாறு "
என்ற பக்கத்தினை உருவாக்கி  பதிவு செய்து வருகிறேன்  தோழர்களே...


பக்கத்தைப் பார்க்க இங்கே சொடுக்கவும்
https://m.facebook.com/profile.php?id=1475366869376303

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி