கருணை வேலை கோரும் பெண் வாரிசுதாரர்களுக்கு, திருமணத்துக்கான, 'கட் - ஆப்' நிர்ணயித்த அரசாணையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர், பரமசிவம். கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். பணியில் இருக்கும் போது, 2008ல், பரமசிவம், இறந்தார்.கருணை அடிப்படையில் பணி வழங்க கோரி, அரியலுார் கலெக்டருக்கு, பரமசிவத்தின் மகள், உஷா ராணி, விண்ணப்பித்தார். 'உஷா ராணிக்கு திருமணம் ஆகி விட்டதால், கருணை வேலை கோர உரிமை இல்லை' என, மனு, நிராகரிக்கப்பட்டது.இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், உஷா ராணி, தாக்கல் செய்த மனு:கடந்த, 2012 ஜூனில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை பிறப்பித்த உத்தரவு, பாரபட்சமாக உள்ளது. 'பெண் வாரிசுதாரர்கள், 2001, நவம்பர், 29ம் தேதிக்கு முன், திருமணம் செய்திருந்தால், கருணை வேலை கிடையாது' என, கூறப்பட்டுள்ளது.இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். எனக்கு, கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் மயிலை சத்யா, ''ஊழியர்களின் பெண் வாரிசுதாரர்களுக்கு மட்டும், திருமணத்துக்கான, 'கட் - ஆப்' தேதி நிர்ணயிப்பது, பாரபட்சமானது. சமத்துவத்துக்கு எதிரானது,'' என்றார்.ஜெயங்கொண்டம் தாசில்தார் தாக்கல் செய்த, பதில் மனுவில், 'தந்தை இறப்பதற்கு முன், உஷா ராணிக்கு திருமணமாகி விட்டது. 2001 நவம்பர், 29ம் தேதிக்கு முன், திருமணமான பெண் வாரிசுதாரர்கள், கருணை வேலை கோர தகுதியில்லை. மனுதாரரும், 2001, ஜூலையில், திருமணம் செய்துள்ளார்.எனவே, அவருக்கு உரிமையில்லை' என, கூறப்பட்டது.
மனுவை விசாரித்த, நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:ஆண், பெண் இருவரையும் சமமாக நடத்துவது என, முடிவெடுத்த பின், பெண்களுக்கு மட்டும், 'கட் - ஆப்' தேதி நிர்ணயித்தது சரியல்ல. ஆண், பெண் என, பாகுபாடு இருக்க முடியாது.எனவே, பெண் வாரிசுதாரர்களுக்கு, 'கட் - ஆப்' தேதி நிர்ணயித்த அரசாணை, சட்டவிரோதமானது. மனுதாரரின் விண்ணப்பத்தை, அரியலுார் கலெக்டர் பரிசீலனை செய்து, காலியிடம் ஏற்படும் போது, அதில் நியமிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
advocate mayilai sathya office address and phone no therinjavanga mail me plz mai id svsiva26386@gmail .com
ReplyDeleteKindly contact Bsnl Enq No 1500. From these you have 3 or 4 Nos. From these you will know correct No.
Delete