அரசுப்பணிக்கு போக 'கொம்பு சீவும்' கிராமம்: வீட்டுக்கு வீடு அரசு ஊழியர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2014

அரசுப்பணிக்கு போக 'கொம்பு சீவும்' கிராமம்: வீட்டுக்கு வீடு அரசு ஊழியர்.


மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தலில் வீட்டுக்கு ஒருவர் அரசுப்பணியில் உள்ளனர். இந்த கிராமத்தில் 100 வீடுகள் உள்ளன. இதில் 71 பேர் அரசு ஊழியர்கள்.

அதிகபட்சமாக கல்வித்துறையில் 15 பேர், ராணுவத்தில் 10 பேர், காவல் துறை மற்றும் போக்குவரத்துக் கழகத்தில் தலா ஐந்து பேர் உள்ளனர்; தேசிய பஞ்சாலை கழக மேலாளராக ஒருவர் பணிபுரிகிறார்.இக்கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் கோபால் கூறியதாவது:காலை 8 மணிக்கு கிளம்பி, மானாமதுரையில் இருந்த பள்ளிக்கூடத்திற்கு 10 கி.மீ., நடந்து செல்வோம்; மாலை 6 மணிக்கு வீடு திரும்புவோம். அப்போது 'சிக்ஸ்த் பார்ம்' எனும் 11ம் வகுப்புக்கு, சிவகங்கை செல்ல வேண்டும்; அதன் பின் கல்லுாரிப்படிப்பு. நான் 'சிக்ஸ்த் பார்ம்' முடித்து மருத்துவத்துறையில் சேர்ந்தேன். கடந்த1996ல் ஓய்வு பெற்றேன்.

கொம்புக்காரனேந்தலைச் சேர்ந்த பலரும் அரசுப்பணியில் இருப்பதற்கு, கல்வியறிவு மற்றும் போட்டி தேர்வுகள் குறித்த விழிப்புணர்வும் தான் காரணம். இங்கு வசிக்கும் அரசு ஊழியர்கள் தவிர, நிறைய பேர் ெவளியூர்களிலும் வசிக்கின்றனர்.இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி