சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2014

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

னை பல்கலையில், பி.ஏ., - பி.காம்., - பி.எஸ்சி., - பி.பி.ஏ., உள்ளிட்ட இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.
இதுகுறித்த செய்திக் குறிப்பு:சென்னை பல்கலையில், இளங்கலை பட்டப்படிப்பு தேர்வுகள், ஏப்ரலில்நடந்தன. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.முடிவுகளை, results.unom.ac.in, www.chennaionline.com, உள்ளிட்ட இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். மேலும், மொபைல் போனில், 'resultUNOMUGREGNO' என்ற அடிப்படையில், பதிவு செய்து, 56263 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.தேர்வு முடிவு அடிப்படையில், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும், கல்வியாண்டு, 2011 - 12க்கு பிந்தைய மாணவர்கள், 8ம் தேதி முதல், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை, பூர்த்தி செய்து, ஒரு பாடத்திற்கு, 750 ரூபாய் வீதம், 'THE RIGISTRAR, UNIVERSITY OF MADRAS' என்ற பெயரில், டி.டி., எடுத்து, இம்மாதம், 15ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.மறுகூட்டலுக்கு, வரும் 14ம் தேதிக்குள், ஒரு பாடத்திற்கு, 200 ரூபாய் வீதம், டி.டி., எடுத்து, விண்ணப்பக் கடிதத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.உடனடி தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், 15ம் தேதிக்குள், இணையதளத்தில் கிடைக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 300 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி