பள்ளிகளில் மின் சாதனங்கள் இயக்க மாணவர்களுக்கு தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2014

பள்ளிகளில் மின் சாதனங்கள் இயக்க மாணவர்களுக்கு தடை


பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை:
பள்ளிகளில், நீர்தேக்க தொட்டிகள், திறந்தவெளி கிணறுகள் இருந்தால், அவற்றை மூடவேண்டும்.
மின் இணைப்பு, சுவிட்ச் பாக்ஸ் சரியாக இருப்பதை உறுதி செய்யவேண்டும். பள்ளிகளில், மாணவர்களை கொண்டு, மின் சாதனங்களை இயக்கக் கூடாது.சேதமான பள்ளி கட்டடம், சுவர்கள், ஆய்வு கூடங்கள், கம்ப்யூட்டர் அறைகளில், துண்டித்த நிலையில் உள்ள மின் ஒயர்களை அப்புறப்படுத்த வேண்டும்.

பள்ளி கட்டட மேல் மாடிக்குச் செல்லும் பாதைகளை மூடவேண்டும். ரோட்டோர பள்ளிகள் முன், வேகத்தடை அமைத்து, தினமும் ஆசிரியரை நியமித்து, மாணவர்களை ரோட்டை கடக்க செய்ய வேண்டும். கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களுக்கு மாணவர்களை அனுமதிக்க கூடாது.பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் இருந்தால், அவற்றை அகற்ற வேண்டும். முதலுதவி பெட்டி அவசியம் இருத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி