’புதிய திருக்குறள்’ - சேலம் தமிழ் ஆசிரியர் சாதனை! - நக்கீரன் செய்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2014

’புதிய திருக்குறள்’ - சேலம் தமிழ் ஆசிரியர் சாதனை! - நக்கீரன் செய்தி

சேலம் பனமரத்துப்பட்டியில் உள்ள நிலப்பரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 44). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என 133 அதிகாரங்களில் 1330 குறள்களை இயற்றியுள்ளார்.

இதில் எக்காலத்திற்கும் பொருந்துவது போல் கருத்துக்களை கூறியுள்ளார். திருக்குறளை போல இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றார் போல் வீரபத்திரன் புதிய திருக்குறளை எழுதி உள்ளார்.

இந்த புதிய திருக்குறளில் கம்ப்யூட்டரும்–மனிதனின் பயன்பாடுகள் குறித்தும், தெளிவுரை எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும், எளிமை நடையிலும், அடி, சீர், தொடை மற்றும் எவ்வித இலக்கணமும் மாறாமல் வள்ளுவர் எழுதிய திருக்குறள் அடிப்படையிலும், 1ž அடியில் 1360 புதிய திருக்குறள்களை இயற்றி உள்ளார்.

இதனை புதிய திருக்குறள் என்ற பெயரில் நூலாக வெளியிட தயாராக உள்ளதாகவும், திருக்குறளை விட 30 குறள்களை அதிகமாக எழுதியுள்ளேன். எனவே இதனை கின்னஸ் சாதனையில் பதிய திட்டமிட்டு உள்ளதாகவும் வீரபத்திரன் கூறினார்.

இந்த 1360 குறள்களை எழுதுவதற்கு அவருக்கு 3 வருட காலம் ஆகி விட்டது. இதனை பார்த்த புதுவை முதல்வர் ரங்கசாமி அவரை பாராட்டி வாழ்த்துரை அனுப்பியுள்ளார்.

14 comments:

  1. Ivaral eludhappatta oru kuralai aavthu kalvi seithi yil veli ittirundhal nandraka irukkum Any how avarukkum idhanai
    veli itta sri avarkalukkum nandri.

    ReplyDelete
  2. அருமை. புத்ததகம் வெளியிடும் போது தெரியயப்படுத்தினால் நன்றாக இருக்கும் ஸ்ரீ

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் திரு.புலவர் வீரபத்திர...ஐயா . நன்றி ஶ்ரீ..

    ReplyDelete
  4. GREAT.....,! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ..............,

    ReplyDelete
  6. I wish to him for success in all

    ReplyDelete
    Replies
    1. Puvi sir
      I am select in BT Tamil with weightage is 63.68 MBC. Any chance to available job pls tell any message.

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. வழக்குகள் உள்ளதால் இறுதி பட்டியல் வெளியாக ஆகஸ்ட் மாத கடைசி ஆகலாம். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் பணி இடம் ஒதுக்கப்படும். பின்னர் வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும்.
    100% true news
    Wait and see

    ReplyDelete
    Replies
    1. வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் பணி இடம் ஒதுக்கி விட்டு, ஜூண் மாதம் இறதியிலே ப ட்டியலை வெளியிடலாமே??. எதற்க்காக ஆகஸ்ட் மாத கடைசி வரைக் காத்திருக்க வேண்டும்

      Delete
  9. appsdi entral case file pannavangalukku maddum than velaia please sir alex sir answer me

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி