உழைப்பால் வரும் அதிர்ஷ்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2014

உழைப்பால் வரும் அதிர்ஷ்டம்

நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிர்ஷ்டம் அடிக்கும்' என ஒரு அறிஞர் கூறியுள்ளார்.

கல்லூரிகளில் சிறப்புப் பேச்சாளர் பேசும்போது, "மாணவர்கள் கடுமையாக உழைத்தால் முன்னேறலாம்' எனக்கூறுவார்கள். "கடின உழைப்பு' என்றால் என்ன? மூட்டை தூக்குவதும், வெயிலில் வேலைபார்ப்பது மட்டுமா கடின உழைப்பு?

கடின உழைப்பு என்றால் உங்களது இலக்கை நோக்கி முன்னேற, தடைகளைத் தாண்டி உழைக்க வேண்டும். அந்த உழைப்பு உங்கள் ரத்தம், சதை ஆகியவற்றில் ஊறி இருக்க வேண்டும். அதுவே கடின உழைப்பு.

நீங்கள் என்னவாக வேண்டும் எனத் திட்டமிடுங்கள். உயர் பதவிக்கு வரவேண்டும் என்றால், முதலில் நம்மை அதற்கு தயார் படுத்திக்கொள்ள வேண்டும். நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பதவி உயர்வு கிடைத்தாலும், அதனைத் தக்கவைத்துக் கொள்வது மிகவும் கடினமாகும்.

படிக்காத மேதை என பலரை கூறுகிறோம். ஆனால், அவர்கள் அத்துறையில் நல்ல புலமை பெற்றிருப்பார்கள். எப்படி புலமையைப் பெறுவது என கேட்கலாம். அதற்குத்தான் கடின உழைப்புத்தேவை. புத்தகங்களைப் படிப்பதன்மூலம் நம்மை தயார் செய்து கொள்ளலாம். அத்துறை வல்லுநர்களிடம் பழகி, விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். வெற்றி பெற்றவர்கள் ஒரே நாளில் சாதிப்பதில்லை.
நாம் சாதிக்கப் பிறந்தவர்கள் என்ற எண்ணம் வந்துவிட்டால், உற்சாகம் பிறந்து கடினஉழைப்புக்கு தயாராகி விடுவீர்கள். இதையடுத்து உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.

ஒரு விதை ஒரே நாளில் மரமாவதில்லை. அதைப்போல ஆசைப்படும் மனிதன் ஒரே நாளில் விஞ்ஞானியாகவோ, பொறியாளராகவோ மாறுவதில்லை.
ஒரு மனிதன் பாறையை பிளக்க அதன்மீது சம்மட்டி கொண்டு அடிமீது அடியாக அடித்துக் கொண்டிருந்தான். கடைசியில் நூறாவது அடியில் பாறை பிளந்தது. பாறையை உடைத்தவன், "நூறாவது அடியில்தான் பாறை பிளந்தது. ஆனால், அதற்கு முன் அடித்த 99 அடிகளும் பாறை பிளப்பதற்கு காரணமாக இருந்தன' என்றான்.

மனிதன் குறிக்கோளை அடையத் திட்டம் வகுக்கிறான். ஆனால், வெற்றி பெறுவது என்பது திட்டத்தை நிறைவேற்ற உழைக்கும் செயல்திறனை பொருத்துள்ளது.

அனைவருக்கும் ஆசை உள்ளது. லட்சியம் இருக்கிறது. திட்டம் உள்ளது. ஆனால் அதைச் செயல்படுத்துவதில்தான் வித்தியாசப்படுகிறார்கள்.
சிலர் என்னால் இது முடியாது என எண்ணுகிறார்கள். என்னிடம் அந்த திறமை இல்லை என நினைத்து முடங்கி விடுகிறார்கள். மனித மனம் காரியங்களை செய்யாமலிருக்க ஒரு சமாதானத்தை தேடுவதில் முனைகிறது.

இதனால் என்னால் இந்த காரியத்தை செய்ய முடியவில்லை என கூறுவார்கள். இது ஏற்க முடியாத சமாதானமாகும். இலக்கை நோக்கி பயணிப்பவர்கள் தங்கள் உடல் உழைப்பை கொடுக்கத்தான் வேண்டும்.
உழைப்பாளிகளின் வியர்வையால்தான் நமக்கு உணவு கிடைக்கிறது. உடை, வீடு என உழைப்பாளிகள் இல்லாமல் எதுவும் கிடைக்காது. எனக்குத் தெரிந்த ஒரு தையல் கடைக்காரர், "எனக்கு என சில வாடிக்கையாளர்கள் உள்ளார்கள் அதுபோதும்' எனக் கூறுவார்.

அவரது மகன் வந்தான். பலவகை ஆடைகளை தைக்க கற்றுக் கொண்டான். கடையை விரிவுபடுத்தி, பலருக்கு வேலை கொடுத்தான். இன்று அவனது கடைதான் அந்த ஊரில் சிறந்த கடை.

வாழ்கையில் வெற்றி பெறுவதும் சாதனை புரிவதும் மனநிலையை பொருத்துள்ளது. எனக்குத் தெரிந்த தொழிலதிபர் ஒருவர் கல்லூரி நடத்தி வருகிறார். கல்லூரியில் மாணவர்களிடமும் பேராசிரியர்களிடமும் நீங்கள் தினசரி 18 மணி நேரம் உழைக்க வேண்டும் எனக் கூறி வந்தார்.
இதனைக் கேட்ட மாணவன் ஒருவன், தினசரி பல புத்தகங்களை படிக்கத் தொடங்கினான். விளையாட்டை ஆர்வமாக கற்றுக்கொண்டான்.
அவன் அக்கல்லூரியைவிட்டு வெளியேறும்போது, சிறந்த மாணவனாக வெளியேறினான். இதற்கு காரணம், அந்த மாணவனின் கடின உழைப்பு. அது அவனுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது.

49 வயதில் பெண் ஒருவர் யோகாசனத்தில் உலக சாதனை புரிந்துள்ளார். ஒரே நாளில் எந்தப்பெண்ணும் சமையலில் நிபுணராக ஆவதில்லை.
சாதனையாளர் எனக்கூறுகிறோம். அதற்கு அவரின் உத்வேகமும், நூறு சத கடின உழைப்பும்தான் காரணம். கடின உழைப்பு மட்டுமே உங்களை அதிர்ஷ்ட தேவதையிடம் அழைத்துச்செல்லும்.

"இங்கே பணி புரிய உங்களுக்கு வெறி பிடித்திருக்க வேண்டிய அவசியமில்லை.ஆனால்,அப்படியிருப்பது உதவிகரமாக இருக்கும்"-பிளிட்ஸ்

31 comments:

  1. Mani Sir, History/MBC/67.78
    Any chance please reply sir,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. வெய்டேஜ் சரிபார்ப்பில்....பி.லிட்.பி எட் க்கு பதிலாக பி.லிட்.டி.டி.எட் சேர்த்துக் கொள்ளப்படுகிறது...detail http://www.theinbornteachers.blogspot.in/

      Delete
    2. சுரேஷ் குமார் sir,

      என்ன sir என்மீது ஏதேனும் மனக் கசப்பு உள்ளதா? வரலாற்றில் 67.78 வைத்துக் கொண்டு வாய்ப்பிருக்கிறதா? என்கிறீர்களே.

      Delete
    3. SPECIAL NEWS
      g4 2013-14 selected candidate .who select school education department online counseling 25,26 in our district . See jayaplus

      Delete
  2. அருமையான கட்டுரை....
    அரசு தான் தமிழாசிரியர்களை வஞ்சித்தது என்றால் ....தனியார் பள்ளிகள் அதைவிட மோசம்....
    கடந்த 3 மாதங்களாக கிட்டத்தட்ட சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்றாகிவிட்டது....என்ன செய்ய தமிழ் படித்துவிட்டு வேறு எந்த வேலைக்கு செல்வது....

    ReplyDelete
  3. Hard work!night & day ;no rest ;no proper food;no care of family but still no result . still my above words didn't understand !I tell about pg final list

    ReplyDelete
  4. Exactly today complete the one year for pg trb .now you understand my words

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் காலையிலே குறிப்பிட்டுருந்தால் "ஆண்டுவிழா-PG" கொண்டாடி இருக்கலாம்.காலம் தாழ்த்தி தகவல் தருகிறீர்களே!

      ஆனால் வரும் ஆகஸ்ட் 17&18 அன்று "ஆண்டுவிழா-TET" கொண்டாட இருக்கிறோம்.மறவாமல் வருகை தாருங்கள்.

      அழைத்து மகிழும்
      ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆண்டியானவர்களில் ஒருவன்.

      Delete
  5. Replies
    1. இன்று விசாரணைக்கு வந்த வழக்கு சில காரணங்களால் தள்ளி வைக்கப் பட்டது.

      Delete
    2. Enna karanam sir ..marupadiyum eppo sir case varuthu ..

      Delete
    3. TODAY G.O. 71 CASE CAME BEFORE TO CHIEF JUSTICE CHENNAI HIGH COURT.
      CASE ADMITTED
      JUSTICE ISSUED NOTICE TO GOVERNMENT FOR REPLY.
      GOVT. ADVOCATE REQUESTED THIS CASE TO MERGE WITH EARLIER BENCH CASES. JUSTICE AGREED

      Delete
    4. How many PHYSICS MBC 90 above candidates passed..... any one know tell me friends...... Vijayakumar chennai sir u know any idea about PHYSICS MBC CUT OFF>....

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஒரு தனி கட்டுரை எழுதும் அளவிற்கு பெரிய காரணம் sir.

      Delete
    2. Mani sir oru clarification mudincha konjam clear panunga

      Delete
  7. Mani sir.phy.Bc.66.9. Eng .medium
    Any chance please reply sir

    ReplyDelete
  8. How many PHYSICS MBC 90 above candidates passed..... any one know tell me friends...... Vijayakumar chennai sir u know any idea about PHYSICS MBC CUT OFF>....

    ReplyDelete
  9. MA Tamil 2011 to 2012 ill distance education la padichean, year complete but paper complete agala,2012 to 2013 bed regularla padichen,ithu pg trb Ku eligible. Ah terincha solunga sir

    ReplyDelete
    Replies
    1. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, அவர்கள் மதிப்பெண் பட்டியலிலுள்ள கல்வியாண்டைத்தான் கவனத்தில் கொள்கிறார்கள்.அந்த வகையில் உங்களது மதிப்பெண் பட்டியல்களிலுள்ள கல்வியாண்டு குறுக்கிடாமல் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

      குறுக்கிடாமல் இருந்தால் நீங்கள் தகுதி பெற்றவர்தான்.

      Delete
    2. Maniyarasan sir How many PHYSICS MBC 90 above candidates passed.... u know any idea pls tell me..

      Delete
  10. How many PHYSICS MBC 90 above candidates passed..... any one know tell me friends...... Vijayakumar chennai sir u know any idea about PHYSICS MBC CUT OFF>....

    ReplyDelete
  11. Maniyarasan sir How many PHYSICS MBC 90 above candidates passed.... u know any idea pls tell me..

    ReplyDelete
  12. அருமையான கட்டூரை... நன்றி திரு மணி அவர்களே...

    ReplyDelete
  13. Maniyarasan, accept my thanks for such a motivating and well articulated article. I wish all the best for you and others of your attitude to become teachers and influence students of generation.

    Just to add on to your article I would like to add my favorite quote here; Employer is no guarantee but your employability is guarantee.

    Keep working on yourselves and you will suddenly find you are on demand, because very few people do it today!

    ReplyDelete
  14. Replies
    1. sir idea about the cases . will there be any change in the process . will it give benefit to this trb or candidates

      Delete
    2. Sammy sir
      contact fr mani and vijaykumar chennai sir ...

      Delete
  15. அருமையான கட்டுரை .இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி