ஆசிரியர் இயக்கத்தின் முதல் மாநில மாநாடும், மாஸ்டரின் சான்றிதல் இரத்தும், திருமணமும்.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2014

ஆசிரியர் இயக்கத்தின் முதல் மாநில மாநாடும், மாஸ்டரின் சான்றிதல் இரத்தும், திருமணமும்..

( பதிவு-2 )
அடிமை ஆட்சியில் அன்று பெற்றுவந்த ஊதியம் இளநிலைக்கு ரூ.12, இடைநிலைக்கு ரூ.18..
அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை தான் வழங்கப்பட்டது..

இதை மாற்றித்தான் ஆகவேண்டுமென எழுந்தது ஆசிரியர் சமுதாயம்..
1.ஆண்டுக்கு ஒருமுறை என்பதை மாற்றி மாதம்தோறும் ஊதியம் வழங்கவேண்டும்.
2.நிர்வாக வேறுபாடு இன்றி சமவேலைக்குச் சமஊதியம் வழங்கவேண்டும்.
3.பணிப்பாதுகாப்பு வேண்டும்.
4.வேலைநிறுத்த உரிமை வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மாநாட்டின் ஆயத்தப் பணிகள் தொடங்கியது..
மாநாட்டின் கோரிக்கைகளை விளக்கி ஆசிரியர்களை திரட்ட மலைவளநாடான கேரளத்தின் கோழிக்கோட்டிலிருந்து மாஸ்டர் இராமுண்ணி தலைமையில் 13.1.1947 அன்று 19 ஆசிரியர்கள் மிதிவண்டியில் பிரச்சாரப் பயணம் மேற்க்கொண்டனர்..
பாலக்காடு, கோவை, சேலம், காஞ்சிபுரம் வழியாக 30.1.1947 அன்று தலைநகர் சென்னையை அடைந்தனர்.
மாநாட்டுத் தீர்மானங்களை முதலமைச்சர் பிரகாசத்திடம் அளித்தனர்.
இதுதான் இயக்க வரலாற்றில் முதல் சைக்கிள் பயணம்.
இது ஆசிரியர் சங்க வரலாற்றில் முக்கியப் பதிவாகும்.
1947  மார்ச் 1, 2 தேதிகளில் சென்னை கிருத்துவக் கல்லூரியில் மாநாடு நடைபெற்றது.
கோரிக்கை பெறப் போராடத் திட்டமிட்டு வேலைநிறுத்தம் செய்வது என தீர்மானம் நிறைவேறியது.
13.4.1947 முதல் இரண்டு மாதங்கள் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
அரசின் அடக்குமுறைக்குத் தலைவர்கள் உள்ளானனர்.
ஆனால், ஆசிரியர்கள் மிரளவில்லை,
மாறாகப் போராட்டம் தீவிரமடைந்தது.
இராமுண்ணி, நம்பியார், கோபாலன் ஆகிய தலைவர்களின் ஆசிரியர் பயிற்சிச் சான்றிதல்கள் இரத்து செய்யப்பட்டன.
ஆசிரியர் சங்கத் தலைவர்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தலைவர்கள் சான்றிதல் பற்றிக் கவலைப்படாமல்  " Care not Certificate "  எனப் போராட்டத்தை நடத்தினர்.
முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரிடம் ஊதியமாற்ற கோரிக்கையினை வலியுறுத்தினர்.
1947 ஆகஸ்ட் 15 தேசவிடுதலைக்குப் பின்னர் சிறைக்கதவுகள் திறக்கப்பட்டன.
இரத்தான ஆசிரியர் பயிற்சிச் சான்றிதல்கள் உயிர் பெற்றன. ஆசிரியர்களின் சங்க உணர்வும் மேம்பட்டது.
1949 ல் சென்னையில் முதல் மாநில மாநாடு நடத்தப்பட்டது.
சென்னை இராஜதானியின் தலைநகரான சென்னையிலிருந்து செயல்படப் பொதுச்செயலாளர்  வா.இராமுண்ணி பணிக்கப்பட்டார்.
மாஸ்டர் சென்னையில் குடியேறினார். சென்னை கணபதி உயர்தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியேற்றார்.
சங்கப் பணியில் இணைந்து பணியாற்றிய காங்கிரஸ் MLA கிருஷ்ணாபாயை மணந்தார். வாழ்நாள் முழுவதும் சென்னையிலேயே இருந்தார்.
சங்கத்தில் மாவட்டக்  கழக ஆசிரியர்களும் சேர்ந்தனர்.
மாவட்ட , வட்ட அமைப்புகளை உருவாக்கினார்.
       -இயக்க வரலாறு தொடரும்..
(அடுத்த பதிவில்-அமைப்பின் பெயர் மாற்றம்- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி)
இளம் ஆசிரியர்கள் உண்மையான இயக்க வரலாறினை தெரிந்துகொள்வதற்காகவும்,
போராட்ட உணர்வினை அவர்களிடம் வளர்க்கவும் ,
" ஆசிரியர் இயக்க வரலாறு " என்ற பக்கத்தினை உருவாக்கி  பதிவு செய்து வருகிறேன்  தோழர்களே...
பக்கத்தை பார்க்க pls click here
https://m.facebook.com/profile.php?id=1475366869376303

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி