TRB: விண்ணப்பிக்கும் முறையை மாற்றி அமைக்க " டி.ஆர்.பி."தீவிரம்..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2014

TRB: விண்ணப்பிக்கும் முறையை மாற்றி அமைக்க " டி.ஆர்.பி."தீவிரம்..!


போட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்துவிண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) போல், இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஆலோசித்து வருகிறது.

அதிக வேலை பளு:

டி.ஆர்.பி., நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும், அச்சடிக்கப்பட்ட விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கும் முறை, தற்போது அமலில் உள்ளது. இந்த முறை, டி.ஆர்.பி.,க்கு அதிக வேலை பளுவை ஏற்படுத்துவதாக உள்ளது.ஒவ்வொரு தேர்வுக்கும், லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இதனால், லட்சக்கணக்கான விண்ணப்பங்களை அச்சடித்து, மாநிலம் முழுவதும், முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டி உள்ளது.

இணையதளம்:

இந்நிலையை மாற்றி, எளிமையான முறையில், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, தற்போது, டி.ஆர்.பி., தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இணைய தளம் வழியாக, விண்ணப்பதாரர், எளிதில் விண்ணப்பிக்க முடியும். இதனால், கட்டணமும், வெகுவாக குறையும். விண்ணப்ப கட்டணம், 500 ரூபாயாக உள்ளது. இதுவே, இணையதள முறைக்கு மாறினால், பதிவு கட்டணமாக, மிக குறைந்த தொகையை வசூலிக்க, வாய்ப்பு ஏற்படும்.

கால அவகாசம்:

மேலும், விண்ணப்பதாரர்களுக்கு, போதிய கால அவகாசம் கொடுத்து, இணையதள பதிவில் உள்ள தவறுகளை சரி செய்யவும், டி.ஆர்.பி., வாய்ப்பு கொடுக்கும்.இதுபோன்று, பல வசதிகள் இருப்பதால், அரசு பொறியியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, தற்போது ஆய்வு நடந்து வருகிறது.அரசு பொறியியல் கல்லூரிகளில், 139 உதவி பேராசிரியரை நியமனம் செய்ய, அக்டோபர், 26ம் தேதி, போட்டி தேர்வு நடக்கும்என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.இதற்கு, ஆகஸ்ட், 20ம் தேதி முதல் செப்டம்பர், 5ம் தேதி வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பம் வழங்கப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

இம்மாத இறுதிக்குள்...:

இதற்கு, 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது. எனவே,இந்த தேர்வில் இருந்து, இணையதள பதிவு முறையை, டி.ஆர்.பி., அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.விண்ணப்ப முறையா;இணையதள பதிவு முறையா என்பது, இம்மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று தெரிவித்தது..

18 comments:

  1. Nangalum theeevirama dhan irukom.... sekiram list vidra valiya parunga....

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Aathi thiravidar, palangudiinar paligalil 1408 asiriyar pani idangal viraivil nirapapapadum frnds...amma told

    ReplyDelete
    Replies
    1. Innuma intha govt & trb ah ulagam namputhu ayyo paavam..politicians election ku munnadi first naama ready aaganum..we want to teach them

      Delete
  4. Adengappa adutha kollai ku ready aidanga...rompa kevalama irukku trb work...ithey nilai needithal trb ku veguviravil...kanneer anjali...thaan seiyanum

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Hai..
    வணக்கம் நண்பா்களே....
    எனக்கு ஒரு சிறு சந்தேகம் - யாரேனும் தொிந்தவா்கள் பதில் கூறுங்கள்

    முழுமையான விளக்கம் வேண்டி...

    1). OC- GT பிாிவில் - பணியிடங்களில், எவ்வாறு அனைவருக்கும் வாய்ப்பளிக்கபடுகிறது என்பதை கூறுங்கள் -
    அதாவது 31 சதவீதமானது (அனைத்து இனப்பிாிவுக்கும்) பொது என்றால் / அங்கு போட்டி என்பது....
    பெண்களுக்கான ஒதுக்கீடு (GT W- 30%),
    மாற்றுதிறனாளிகள் (GT PH - 3%),
    மதிப்பெண் (wtg marks %)
    போன்றவைகளின் முன்னுாிமை அடிப்படையில் எவ்வாறு முழுமையாக (*Fully) பணியிடங்கள் வழங்கப்படுகிறது என்பது பற்றி விளக்கவும் ???

    அவ்வாறு வழங்கபடும் பொழுது எதனால் (reason) அங்கும்- எப்படி (how) காலிப்பணியிடங்கள் ஏற்படுகின்றன???? என்பதை கூறவும் - கடந்த 2011-12 பணியிடத்தில் மீதி காலிப்பணியிட விவரப்படி GT W-++++1+..., GT PH-2+11+..., GT VI-6+11+..., GT W PH-++4+1+..., GT W VI-3+5+..., ??????
    (How to create backlog list???)
    கடந்தாண்டு பணி நியமனத்தில் தமிழ்வழி (Tamil Mediam) முன்னுாிமை வழங்கப்படவில்லை என்பது காலிப்பணியிட அறிவிப்பிலேயே தொிகிறது, அதே போல் இன ஒதுக்கீடும் (Community - wise) பின்பற்றப்படவில்லை என்ற செய்தியும் உண்மை தானா??? இருப்பினும் இவ்வளவு புள்ளி விவரம் எப்படி???

    போன்ற சிறு சிறு ????? மனதில்...
    (*கொடுத்து வைத்தவா்கள் அவா்கள் - 2012 பணி நியமனம் பெற்ற ஆசிாியா்கள் அனைவரும்)
    நன்றி...
    ப. கண்ணன் - Dgl.

    ReplyDelete
    Replies
    1. We are expecting selection list on 30th July as announced.... If at ll there is any chance for CM to use 110, there are only 4 more wroking days(including today) for assembly before 30th..... Expectations are high.... will it be fulfilled is a million dollar question....EMM....

      Delete
  7. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், காலியாக உள்ள, 1,408 ஆசிரியர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும்,'' என, அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், காலியாக உள்ள, 1,408 ஆசிரியர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும்,'' என, அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
    இது குறித்து, சட்டசபையில் நடந்த விவாதம்:
    மா.கம்யூ., டில்லிபாபு: வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளை விசாரிக்க, மாவட்டம்தோறும், தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
    அமைச்சர் சுப்ரமணியன்: ஏற்கனவே, நான்கு நீதிமன்றங்கள் உள்ளன.
    இ.கம்யூ., லிங்கமுத்து: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் உள்ள, காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
    அமைச்சர்: 1,096 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில், 1.27 லட்சம் பேர்; 301 பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில், 31,594 பேர் படிக்கின்றனர். இப்பள்ளிகளில், 11,412 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன; 10,004 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தற்போது, 1,408 ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் காலியாக உள்ளன. அவற்றையும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், விரைவில் நிரப்ப, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
    புதிய தமிழகம் கிருஷ்ணசாமி: நலத்துறை பள்ளிகளில், கல்வி அதிகாரிகள் ஆய்வுக்கு செல்வதில்லை. வருவாய் துறை அதிகாரிகள் தான் செல்கின்றனர். இதனால், இப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. இதை தடுக்க, நலத்துறை பள்ளிகளை, கல்வித்துறையோடு இணைக்க வேண்டும்.
    அமைச்சர்: தேர்ச்சி விகிதம், ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, 10ம் வகுப்பில், 82 சதவீத பேர், பிளஸ் 2 தேர்வில், 82 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு, விவாதம் நடந்தது.
    Tags :
    tnschools, tet news, trb news, tet news, tnpsc news
    1

    ReplyDelete
  8. PWD - இன்றைய உண்மை நிலை (14.07,2014) அறிவிப்பின் வரையிலான அடிப்படையில்:

    Hai Friends...
    3% ஒதுக்கீடு இருப்பினும் - மொத்த (2012 - 13) காலிப்பணியிட அறிவிப்பின் அடிப்படையில் பாா்கையில்
    (சுமாராக 10,000 க்கு) 300 +
    (பின்தங்கிய PH பணியிடங்கள் மட்டும்) 191 =
    ******
    ஆக மொத்தமாக 491 (300+191) மாற்றுதிறனாளிகளுக்கு மட்டுமே பணியிட வாய்ப்புள்ளது நண்பரே...

    ***
    அதில் - வரலாறு, தமிழ், ஆங்கிலம், புவியியல் பணியிடங்களில் (இனச்சுழற்சி அடிப்படையில்)
    * 3ல் 1 பங்கு (1/3 PH) 164 உடலுறுப்பு குறைபாடுடையோா் -க்கும்,
    * 3ல் 2 பங்கு (2/3 VI) 327 பாா்வை குறைபாடுடைய நண்பா்களுக்கு மட்டுமே பணி வாய்ப்பு கிடைக்கும்...
    (It's real fact (true) news as per 14.07.14 - TRB Notification details)
    &
    மேலும் மீதி இருக்கும் (700 to 800 may be....)
    700லிருந்து 800 வரையிலான மாற்றுதிறன் கொண்ட நண்பா்களின்
    (2013 + Spl 2014 மொத்த தோ்ச்சி சுமாராக 1200-1300 இருக்கும்-அதில்)
    வேலைவாய்ப்பு மிகுந்த கேள்விக்குறியான (???????????????)
    மனநிலையில் தான் இருக்கிறோம்...

    21.7.14 அன்று எங்களது கோாிக்கையை - கோாியிருந்தோம், தொடா்ந்து நமது நண்பா்களும் முதல்வாின் தனிப்பிாிவுக்கு (C.M. Spl. Cell) கோாிக்கைக்கான Mail அனுப்ப உள்ளாா்கள்...
    (நண்பா்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்குமாறு மிகந்த அன்போடுக் கேட்டுக்கொள்கிறோம்)
    (Co-operate My Dear Friends...)
    முதல்வாின் தனி கவனத்திற்கு இத்தகவல் செல்லுமேயானால்,
    இதைத் தொடா்ந்து.....
    அடுத்தடுத்த நாட்களில் சிறப்பான தனித்துவமான ஏதேனும் சிறப்பு அறிவிப்புகள் வருமென நம்பிக்கையுடன் எதிா்பாா்க்கலாம்...

    "நம் நரம்புகள் தளா்ந்துவிடலாம் -
    நம் நம்பிக்கைகள் தளரப்போவதில்லை"

    (It may be increase by communival, welfare schl, munispal shl & others vacant notifict..)
    we r still waiting for new favourable news...

    "எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்ற நம்பிக்கையுடன்" -
    ப. கண்ணன் (நம் நண்பா்களுடன்)
    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. We are expecting selection list on 30th July as announced.... If at ll there is any chance for CM to use 110, there are only 4 more wroking days(including today) for assembly before 30th..... Expectations are high.... will it be fulfilled?-- it is a million dollar question....EMM....

      Delete
    2. டியர் KANNAN

      DO NOT MISTAKE ME DO U KNOW SUBJECT WISE PASSED CANDIDATES FOR PWD

      THERE IS RESEARVATION FOR PWD BUT WHO PASSED IN ENGLISH WILL NOT BE ACCEPTED AS SCIENCE BT

      IF OUT OF ALL PASSED MAJORITY IS IN A SINGLE SUBJECT WHAT WILL U DO

      SO LET UR KORIKKAI BE MEANING FUL PLEASE DO NOT MISGUIDE CANDIDATES

      SORRY IF IT HURTS U

      Delete
  9. 30_ஆம் தேதி கண்டிப்பாக இறுதி பட்டியல் வெளி வருமா...

    ReplyDelete
  10. PHYSICS tamil medium BC 64.87 can get job... plz anyone tell me.............

    ReplyDelete
  11. ஒரு காசுக்கும் பெறாத உங்களுடைய பரப்புரையை எத்தனை தளங்களில் சென்று சொன்னாலும் எதுவும் நடக்காது.. எதற்கு இந்த வெட்டி வேலை.. வேலை கிடைக்காது என்று தெரிந்தால் அடுத்த தேர்வுக்கு தயாராகுங்கள் .. இப்படி புது குழப்பம் என்று உங்களை நீங்களே குழப்பிக் கொள்ளாதீர்கள்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி