முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநாட்டில் அவர் பேசியதாவது: பள்ளி ஆசிரியர்கள் வருவதை பார்த்து தெருவோரம் நிற்பவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்த காலம் இருந்தது. இன்றும் கிராமங்களில் அந்நிலை உள்ளது. நகரங்களில் இந்நிலை இல்லை. அந்த மரியாதையை நாம் உருவாக்க வேண்டும். நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் உதவிபெறும் பள்ளியில் சேருகின்றனர். மீதியுள்ளவர்களே அரசு பள்ளியில் சேருவதாக கூறுகின்றனர். அவர்களில் மிக ஏழ்மை நிலையில் உள்ளவர்களே அரசு பள்ளிக்கு வருகின்றனர். அவர்களுக்கு கல்வி அளிப்பதால் ஆசிரியர்களுக்கு புண்ணியம் சேரும். அரசு பள்ளிகளில் முன்பு 57 சதவீதம் இருந்த மாணவர்களின் தேர்ச்சி வீதம், தற்போது 90 சதவீதமாக உயர்ந்தது பாராட்டுக்குரியது. பல தனியார் பள்ளிகளில் 11ம் வகுப்பில் 12ம் வகுப்பு பாடத்தை எடுக்கின்றனர். அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அப்பள்ளிகளில் 200க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள்கூட, அண்ணா பல்கலை தேர்வுகளில் தோல்வி அடைந்துள்ளனர். மாணவர்களை உடல், மனம்,
தனித்திறன், விளையாட்டு என அனைத்திலும் திறனுள்ளவராக, வாழ்க்கையில் எதையும் சமாளிக்கும் திறன் பெறும் வகையில் கல்வி இருக்க வேண்டும். மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர், எழுத்தர் காலியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.
God bless all. Good morning.
ReplyDeleteidhu ippadhaan therindha maadhiri shock aaguraru director school visit pooi paaarunga sir 98/100 schoola +1 book thoduvadhu kooda kidayadhu
ReplyDelete