10 ஆண்டு கால பயணத்தின் முடிவில் சாதனை ஐரோப்பிய விண்கலம், வால் நட்சத்திரத்தை அடைந்தது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2014

10 ஆண்டு கால பயணத்தின் முடிவில் சாதனை ஐரோப்பிய விண்கலம், வால் நட்சத்திரத்தை அடைந்தது



ஐரோப்பிய விண்வெளி அமைப்பு சார்பில், கடந்த 2004&ம் ஆண்டு 'ரோசட்டா' என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 10 ஆண்டு கால பயணத்துக்கு பிறகு, அந்த விண்கலம், நேற்று '67பி/சுரியுமோவ்-ஜெராசிமெங்கோ' என்ற வால் நட்சத்திரத்தை அடைந்தது. 1969&ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இது, வேகமாக சுற்றிவரும் வால் நட்சத்திரம் ஆகும்.



வால் நட்சத்திரத்தை அடைந்த முதலாவது விண்கலம் ரோசட்டாவே ஆகும். இது, விண்வெளி வரலாற்றில் சாதனையாக கருதப்படுகிறது. ரோசட்டா விண்கலம், அங்கிருந்து பூமிக்கு சமிக்ஜைகளை அனுப்பி வருகிறது. அதன்மூலம், வால் நட்சத்திரத்தை பற்றி மேலும் பல்வேறு தகவல்களை விஞ்ஞானிகள் அறிந்து வருகிறார்கள். அதன் வடிவத்தை அறிந்துள்ளனர். 3 கி.மீ. நீளமும், 5 கி.மீ. அகலமும் கொண்ட ராட்சத பாறையாக அந்த வால் நட்சத்திரம் காணப்படுகிறது.

முன்பு கருதப்பட்டதுபோல, கால்பந்து வடிவத்தில் இல்லை. கழுத்தால் பிணைக்கப்பட்ட இரண்டு பகுதிகளைக்கொண்டு வாத்து போல காட்சி அளிக்கிறது. வால் நட்சத்திரம் பற்றிய இந்த ஆய்வில் சூரிய குடும்பம் குறித்த ரகசியங்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 comments:

  1. ரோசட்டா(ஸ்ரீ) விண்கலத்திற்க்கு வாழ்த்துக்கள்

    பல உண்மை செய்திகளை அறிய காத்துக்கொண்டு இருக்கிரோம்.

    ReplyDelete
  2. Dear friends,

    My weightage in paper 2 tamil major -63.22 and my community is BC. what I need to do ,if i didnt get the job this time?

    1.whether they will give priority to me in next time or
    2. if i write the exam next time and if my mark becomes less than this time or less than 82 what will be my new mark?
    3.whether i should not write the exam from next time onwards?
    Please let me give the solution to take the decision. Because I dont know the rules.

    Thanks and Regards
    Sivashankari.R

    ReplyDelete
  3. If u secure more marks in next examination that marks can be used for the post preference in next time...

    ReplyDelete
  4. ரோசட்டா(ஸ்ரீ) விண்கலத்திற்க்கு வாழ்த்துக்கள்

    பல உண்மை செய்திகளை அறிய காத்துக்கொண்டு இருக்கிரோம்.

    ReplyDelete
  5. Congratulations...we are eager to know about 67b...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி