பொறியியல் பணிக்கான கலந்தாய்வு 11ம் தேதி தொடக்கம்:டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2014

பொறியியல் பணிக்கான கலந்தாய்வு 11ம் தேதி தொடக்கம்:டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு.


பொறியியல் பணிக்கான கலந்தாய்வு வரும் 11ம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வில் (2009&13ல் அடங்கிய பதவி) நேரடி நியமனம் செய்யும் பொருட்டு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி நடந்தது. கடந்த ஜூலை 22ம் தேதி முதல் 25ம் தேதி வரையும் மற்றும் 28ம் தேதியும் நேர்காணல் நடந்தது. எழுத்து, நேர்காணல் தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய பட்டியல் கடந்த 30ம் தேதியும், தர வரிசைப்பட்டியல் 1ம் தேதியும் வெளியிடப்பட்டது.கட்டுமான பொறியியல் (சிவில்) பிரிவிற்கான தர வரிசைப்பட்டியலில் 325 விண்ணப்பதாரரும், கட்டுமான பொறியியல் அல்லாதோருக்கான தர வரிசைப்பட்டியலில் 104 விண்ணப்ப தாரரும் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. கலந்தாய்வு நடக்கும் நேரம் உள்ளிட்ட பிற விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதம் தனித்தனியாக விண்ணப்பதாரர்களுக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பங்கேற்க வேண்டும். அவ்வாறு வருகை தர தவறும் பட்சத்தில் கலந்தாய்வில் பங்கேற்க மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி