12,000 ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் வெளியீடு - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2014

12,000 ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் வெளியீடு - தினமணி


பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நியமனத்துக்கான முதன்மைத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

மொத்தம் 12 ஆயிரம் பேர் கொண்ட இந்தப் பட்டியல் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு மொத்தம் 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ஆம் தேதி நடைபெற்றது.இந்தத் தேர்வில் 935 பேர் தேர்ச்சி பெற்றனர்.


அதன்பிறகு, ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) அண்மையில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து முதன்மைத் தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

ஆனால், வழக்குகள் காரணமாக, பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த வழக்குகள் இப்போது முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கான 11 ஆயிரம் பேரைக் கொண்ட முதன்மை தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பட்டியல்: இதுபோல, ஆங்கிலம், கணிதம், வேதியியல், தாவரவியல், வரலாறு, நுண் உயிரியல் ஆகிய பாடங்களில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான 1,236 பேரைக் கொண்ட முதன்மைப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தமிழ், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம் நிறைவடைந்த நிலையில், நீதிமன்ற வழக்குகள் காரணமாக எஞ்சிய பாடங்களுக்கான முதன்மைத் தேர்வுப் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

விரைவில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான முதன்மை தேர்வுப் பட்டியலும் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்ததாக, இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 comments:

  1. முதன்மை தேர்வு பட்டியலை வெளியிட்டு இருக்கிறது எனில் PAPER-2 க்கு இரண்டாம் பட்டியல் வருமா?

    ReplyDelete
  2. விலங்கியல் பாடங்களில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம் நிறைவடைந்ததா ?????? Please reply me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி