1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம் -கல்விமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2014

1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம் -கல்விமலர்

சிவகங்கை: தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் 150 அரசு பள்ளிகளுக்கு தேவையான 1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம் உள்ளதாக, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



நடப்பு கல்வியாண்டில் (2014-15) ஒவ்வொரு மாவட்டத்திலும் தரம் உயர்த்துவதற்கு தகுதியான அரசு உயர்,மேல்நிலை பள்ளிகளின் பட்டியல்களை மாவட்ட கல்வித்துறை அலுவலகங்கள் தயாரித்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பியது. இந்த பட்டியலின் அடிப்படையில் 100 அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாகவும், 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலையாகவும் தரம் உயர்த்தப்படும் என, சட்ட சபையில் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கு 3 அல்லது 5 பள்ளி மேல்நிலையாகவும் 2 உயர்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர வாய்ப்பு உள்ளது.

மேல்நிலைக்கு தலைமை ஆசிரியர் உட்பட 10 புதிய காலியிடமும், உயர்நிலையில் தலைமை ஆசிரியர் உட்பட 6 புதிய ஆசிரியர்களும் என, 1,300 பேர் நியமிக்கப்படுவர்.

கவுன்சிலிங் மூலமே தரம் உயரும் பள்ளிகளின் காலியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க திட்ட மிட்டுள்ளது. அதே நேரத்தில் டி.ஆர்.பி., மூலம் தேர்வான ஆசிரியர்களை நியமிக்கும் திட்டமும் உள்ளது. இத்திட்டம் இல்லாத பட்சத்தில் மாறுதல் கவுன்சிலிங் ஆக., இறுதி வாரம் அல்லது அடுத்தமாதம் நடத்தப்படலாம் என கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

23 comments:

  1. ஓட்ஸ் என்னும் அரக்கன்..

    இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ் என்பது அத்தியாவசிய உணவு என ஆகிவிட்டது. அதுவும் நீரிழிவு நோயாளிகள்,உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.

    10 ஆண்டுகளுக்கு முன்வரை நம்நாட்டில் ஓட்ஸ் இல்லை. ஆனால் இன்று ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகளுக்கு விற்பனை ஆகிறது. இதற்கு பின்னால் பன்னாட்டு வணிக மோசடி உள்ளது.

    ஓட்ஸ் ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாகவும் கொஞ்சம் ஐரோப்பிய நாடுகளிலும் விளையும் ஒரு பயிர்.அதை அப்படியே உணவாக சாப்பிட முடியாது. சில வழிமுறைகளில் தட்டையாக மாற்றப்படுகிறது. அதையும் நம்ம ஊர் உணவு போல அதிக அளவில் எடுத்துக்கொள்ள முடியாது. சில கிராம் மட்டுமே (ஒரு ஸ்பூன்) எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுகிறோம். அதிலும் சத்து எதுவும் கிடையாது. பசியை கட்டும் குணம் மட்டுமே இதற்கு உண்டு.

    அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸ்-ஐ விட நம் ஊர் ராகியில் பல மடங்கு சத்து உள்ளது. சுமார் ஒரு கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் க்கு சமம். ஒரு கிலோ ராகி மாவு 35 ரூபாய். 4 கிலோ ஓட்ஸ் 140*4= 560 ரூபாய்.

    எங்கோ ஆஸ்திரேலியாவில் விளையும் ( அவர்கள் அதிகம் சாப்பிடுவது இல்லை )ஓட்ஸை நாம் சாப்பிடுவதில் MNC கொள்ளை உள்ளது. சில ஆண்டுகளாக போலி விளம்பரங்கள் மூலமும் ,மருத்துவர் மூலம் கட்டாயப் படுத்தியும் நம்மை அடிமை ஆக்கிவிட்டன.[குறிப்பாக பெப்சி நிறுவனத்தின் QUAKER பிராண்ட். குளிர்பான தொழிலில் இந்திய நிறுவனங்களை ஒழித்ததுபோல உணவில் இந்திய பாரம்பரிய உணவுகளை ஒழிக்கப் பார்க்கிறது.]

    அங்கிருந்து இங்கு வர ஆகும் எரிபொருள் செலவு, MNC நிறுவனங்களின் கொள்ளை லாபம் எல்லாம் சேர்த்து பயனற்ற பொருளை நம் தலையில் கட்டுகின்றன.
    அதைவிட ராகி,கம்பு,சோளம்,திணை,வரகு,சாமை .. எல்லாம் பலமடங்கு சத்துள்ளவை. விலையும் குறைவு.
    சிந்தியுங்கள்.......

    ReplyDelete
  2. P.G. TRB EXAM - ANSWER KEY PROBLEM !!!
    PRE PLANNED MURDER !!!

    1). How 42/many questions can be typeset error in Tamil Subject?

    2). How all subjects have "Answer key problems"?

    3). Eventhough error occurs, why does it take 1 year to get solution?

    4). TET has many problems. That is somewhat acceptable.

    5). P.G.TRB has only answer key problem.

    6). No interest in welfare of students and teachers.

    7). No timely judgement.

    8). Delay is made voluntarily by xyz. That is to be contemned.

    ReplyDelete
  3. NO PRIORITY FOR >90 !!!

    "No one is affected by anybody"!!!

    Note: I am taking 3 persons as examples and noting down their marks. I prepare their rank list according to both TET mark and Weight age mark. Finally, I conclude who are the "JOB GETTER"

    Name : Ambiga
    Tet : 95 (37.99)
    B.ed. : 50 % (7.50)
    Deg. : 50 % (7.50)
    +12. : 50 % (5.00)
    ================
    Weight age = 57.99
    ================
    Name : Banupriya
    Tet : 90 (36.00)
    B.ed. : 80 % (12.00)
    Deg. : 80 % (12.00)
    +12. : 80 % (8.00)
    ================
    Weight age = 68.00
    ================
    Name : Chitra
    Tet : 85 (33.99)
    B.ed. : 90 % (13.50)
    Deg. : 90 % (13.50)
    +12. : 90 % (9.00)
    ================
    Weight age = 69.99
    ================

    Analysis :

    1). TET mark alone does not determine one's rank.
    2). One's rank is determined by all 4 factors (tet, b.ed, degree and +2).
    3). "No one is affected by anybody".
    4). So, relaxation can not be cancelled.
    5).So, priority can not be given for >90.


    RESULT REPORT !!!

    Rank list according to TET Mark !!!

    First Rank : Ambiga. (95)
    Second Rank : Banupriya. (90)
    Third Rank. : Chitra. (85)

    Rank List according to Weight age !!!

    First Rank : Chitra. (69.99)
    Second Rank : Banupriya. (68.00)
    Third Rank. : Ambiga. (57.99)

    ReplyDelete
  4. Alagana katturai....arumaiyaana karuthukal...thodara vaalthukkal nanbare...

    ReplyDelete
  5. All kalviseithi friends good morning and peaceful Sunday....

    ReplyDelete
  6. Note this line !!!

    அதே நேரத்தில் டி.ஆர்.பி., மூலம் தேர்வான ஆசிரியர்களை நியமிக்கும் திட்டமும் உள்ளது. இத்திட்டம் இல்லாத பட்சத்தில் மாறுதல் கவுன்சிலிங் ஆக., இறுதி வாரம் அல்லது அடுத்தமாதம் நடத்தப்படலாம்

    Dangerous line !!!

    இத்திட்டம் இல்லாத பட்சத்தில்

    ReplyDelete
  7. Erkanave trb pg & tetla pass pannavangala vachu podunga sir

    ReplyDelete
  8. ஞாயிறு வணக்கம்

    ReplyDelete
  9. Being vetti all days are sunday to me...happy sunday morning.

    ReplyDelete
  10. pls sir paper 2 mbc maths list prepare pannunga sir.

    ReplyDelete
  11. Friends, next group 4 eppo?
    Therinja sollunga?

    ReplyDelete
  12. Sariyana yosanai sir
    Anth 1300 postinga yerkanave CV mudichavangaluku podunga sir. CV MUDICHUTTU ARASU VELAI KIDAIKUM ENDRU PRIVATE VELAI VITTU VEETIL SUMMA IRUKIROM. PLEASE PUT POSTING FOR ALL CV COMPLETED CANDIDATES IN PG TRB AND GIVE MORE POSTING IN TET CANDIDATES.

    ReplyDelete
  13. pls sir paper 2 maths SCA list prepare pannunga sir.

    ReplyDelete
  14. Tet la pass aagi listla name ilathavangalukku munnurimai tharappaduma?

    ReplyDelete
  15. managaratchi,nagaratchi,nalaththurai pallikalil vacancy illaiya pallikalvidurai ematrukiratha

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி