22 தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய விருது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2014

22 தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய விருது

தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்கள் 2013-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு 3 ஆசிரியைகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


இவர்களுக்கு, ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, விருதுகளை நேரில் வழங்குகிறார். விருதுடன், ரூ.25 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்படும்.

இதுதொடர்பாக, விருது பெறும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனியே மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
தேசிய விருது பெறும் ஆசிரியர்களின் விவரம்:

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள்
1. டி.ஆரோக்கிய மேரி - தலைமை ஆசிரியர், புனித ஆனிஸ் தொடக்கப் பள்ளி, மேற்கு மாதா கோயில் தெரு, ராயபுரம், சென்னை.
2. என்.சம்பங்கி - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கந்தநேரி, அணைக்கட்டு ஒன்றியம், வேலூர் மாவட்டம்.
3. எஸ்.கந்தசாமி - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கப்பை கிராமம், வல்லம் வட்டம், செஞ்சி தாலுகா, விழுப்புரம் மாவட்டம்.
4. எஸ்.செல்வராஜூ - பட்டதாரி ஆசிரியர், ஆனந்தராஜூ அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி, மரைநாயநல்லூர், வேதாரண்யம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.
5. என்.நடராஜன் - தலைமை ஆசிரியர், அரசு ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப் பள்ளி, சிக்கல்நாயக்கன்பேட்டை, திருப்பனந்தாள், தஞ்சாவூர் மாவட்டம்.
6. பி.ஆன்ட்ரூஸ் - தலைமை ஆசிரியர், சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளி, உறையூர், திருச்சி மாவட்டம்.
7. பி.டெரன்ஸ் - தலைமை ஆசிரியர், ஆர்.சி. அமலராக்கினி நடுநிலைப் பள்ளி, குளித்தலை, கரூர் மாவட்டம்.
8. கே.நளினி - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தாரவைதோப்பு, பாம்பன், மண்டபம் ஒன்றியம், ராமநாதபுரம் மாவட்டம்.
9. எஸ்.முத்தையா - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கே.செம்பட்டி, உசிலம்பட்டி, மதுரை மாவட்டம்.
10. கே.உதயகுமார் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சின்னகொண்டாலம்பட்டி, பனைமரத்துப்பட்டி ஒன்றியம், சேலம் மாவட்டம்.
11. நசிருதீன் - தலைமை ஆசிரியர், உருது பெண்கள் நகராட்சி நடுநிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம்.
12. கே.ஆர்.ராமகிருஷ்ணன் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வெள்ளாளப் பாளையம் (எண் 1), கோவை மாவட்டம்.
13. வி.பி.தாமஸ் - தலைமை ஆசிரியர், பாரத மாதா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, உப்பட்டி, நீலகிரி மாவட்டம்.
14. ஏ.விநாயக சுந்தரி - தலைமை ஆசிரியர், சங்கரகுமார் தொடக்கப் பள்ளி, சங்கரலிங்கபுரம், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.
15. எஸ்.ராமசாமி - தலைமை ஆசிரியர், ஸ்ரீ வேணுகோபால விலாச அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, விஸ்நாம்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.

இடைநிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்
16. ஆர்.நீலகண்டன் - தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, புதுப்பேட்டை, வேலூர்.
17. சஷி சுவரண்சிங் - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், பதிப்பக செம்மல் கே.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம், சென்னை.
18. எஸ்.கஸ்தூரி - தலைமை ஆசிரியர், நகராட்சி மேல்நிலைப் பள்ளி, ஜமீன் பல்லாவரம், சென்னை.
19. எஸ்.ஆதியப்பன் - தலைமை ஆசிரியர், எம்.எஃப்.எஸ்.டி. மேல்நிலைப் பள்ளி, சௌகார்பேட்டை, சென்னை.
20. எம்.செல்வசேகரன் - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், தி கிரசன்ட் மேல்நிலைப் பள்ளி, ஆவணியாபுரம், ஆடுதுறை, தஞ்சாவூர் மாவட்டம்.
21. ஆர்.கஸ்தூரி - பட்டதாரி ஆசிரியர், மார்னிங் ஸ்டார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, செங்குந்தபுரம், கரூர் மாவட்டம்.
22. என்.பாலுசாமி - தலைமை ஆசிரியர், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, பீளமேடு, கோவை.

6 comments:

  1. விருது வழங்க படுகிறதா? வாங்கப்படுகிறதா?
    பலர் மன்னிக்கவும்...
    இது சிலருக்கு மட்டும் பெருந்தும்

    ReplyDelete
  2. விருது வழங்கபடுகிறதா? வாங்க படுகிறதா?
    பலர் மன்னிக்கவும்...
    இது சிலருக்கு மட்டும் பெருந்தும்

    ReplyDelete
  3. விருது வழங்கபடுகிறதா? வாங்க படுகிறதா?
    பலர் மன்னிக்கவும்...
    சிலருக்கு இது பொருந்தும்

    ReplyDelete
  4. விருது வழங்கபடுகிறதா? வாங்க படுகிறதா?
    பலர் மன்னிக்கவும்...
    சிலருக்கு இது பொருந்தும்

    ReplyDelete
  5. விருது வழங்கபடுகிறதா? வாங்க படுகிறதா?
    பலர் மன்னிக்கவும்...
    சிலருக்கு இது பொருந்தும்

    ReplyDelete
  6. விருது வழங்கபடுகிறதா? வாங்க படுகிறதா?
    பலர் மன்னிக்கவும்...
    சிலருக்கு இது பொருந்தும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி