3 முதுகலை பாடங்களுக்கு புதிய பட்டியல் வெளியீடு - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2014

3 முதுகலை பாடங்களுக்கு புதிய பட்டியல் வெளியீடு - தினமலர்

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், முதுகலை ஆசிரியர் தேர்வில், இயற்பியல், பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கு, மாற்றி அமைக்கப்பட்ட புதிய சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டு உள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் நியமிக்கும் பணி, ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. தமிழ் பாடத்திற்கு மட்டும் பணி நியமனம் நடந்துள்ளது. உடற்கல்வி இயக்குனர், மைக்ரோ - பயாலஜி, புவியியல், விலங்கியல், பயோ - கெமிஸ்ட்ரி ஆகிய, ஐந்து பாடங்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இயற்பியல், பொருளியல் மற்றும் வணிகவியல் தேர்வு விடைகளில், சில மாற்றங்களை, டி.ஆர்.பி., செய்தது.

அதனடிப்படையில், புதிய சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. இந்த மூன்று பாடங்களில், ஏற்கனவே, 259 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக, 49 பேர், பட்டியலில் இடம்பெற்று உள்ளனர். இவர்களுக்கு, வரும் 14ம் தேதி, விழுப்புரம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

8 comments:

  1. இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு பட்டியலும் வெளியாகிவிடும்.

    ReplyDelete
  2. ஆசிரிய நண்பர்களே,
    கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், 90 மற்றும் அத‌ற்கு மேல் எடுத்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும்,
    இதுதான் நீதி, 5% தளர்வு கொடுப்பதை இப்போதும் யாரும் எதிர்ப்பதில்லை, இதில் கூட அனைத்து வகுப்பினரும் எப்படி சமமாக கருதப்பட முடியும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும், பழங்குடியினரயும் எப்படி ஒன்றாக கருத முடியும், அனைவருக்கும் 5% தளர்வு தான் எப்படி சரியாக இருக்கும்,
    இதே 5% தளர்வை முதலில் 2012 ல் நடந்த இரு தேர்விற்க்கும் வழ்ங்கியிருக்க வேண்டும் ஆனால் வழங்கவில்லை, தற்போதும் ஒன்றும் காலம் கடந்துபோகவில்லை, அவர்க‌ளின் அனைத்து விவரங்களும் வாரியம் வசம் இருக்கும், அவர்களுக்கு தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, தற்போது அறிவித்துள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் (11000+4000) அவர்களைக்கொண்டுதான் பணி நியமனம செய்ய வேண்டும் இதுதான் சமூக நீதி, நியாயம்.

    தற்போது நடந்த தேர்வில் கூட 5% தளர்வு என்பது வரவேற்கதக்க ஒன்றுதான், அதனை வாரியம் முறைப்படி, தகுதித்தேர்வு அறிவிப்பின்போதே அறிவித்திருந்தால், இவ்வளவு குழப்பம் தேவையில்லாத ஒன்று,
    இந்த பிரச்சனையே வந்திருக்க வாய்ப்பு இல்லை,இதே 5% தளர்வை அடுத்த தேர்விலிருந்து நடைமுறை படுத்தினால் யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை, எல்லோரும் அதற்கு தயாராகிவிடுவார்கள்,
    தற்போது வாரியம் திணறுவதற்கு காரணம் இந்த 5% தான்.இதை பற்றிய வழ்க்குதான் நீதிமன்றத்தில் உள்ளது,

    நீதிமன்றம் 90 மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் இந்த குழப்பம் முடிவிற்கு வரும்,

    இல்லையெனில், குழப்பம் தொடரும், எப்படியெனில் மாறாக தீர்ப்பு வரும் பட்சத்தில் 60% மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தயார் நிலையில் உள்ளோம்,
    1.பணி நியமனத்தில் 90 மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்களுக்கு முன்னுரிமை
    2.இந்த வழக்கு முடியும் வரை தேர்வு வாரியம் எந்த ஒரு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடுவதற்கும் , பணி நியமனத்திற்கும்,
    அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடுவதற்கும் தடை கோருவோம்

    மேலும் இந்த வெயிட்டேஜ் முறையானது மூத்த ஆசிரியர்களுக்கு எதிராது. எனவே இந்த முறையும் மாற்றபட வேண்டிய ஒன்று. 5% ரிலாக்ஷேசன் மற்றும் GO 71 வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அனைவரும் இந்த வழக்கு தொடரும் போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் . நமது இந்த போராட்டம் தான் நமது உரிமைகளை பெற்றுத்தரும்.

    மேலும் வழக்கு தொடர தேவையான உதவிகளுக்கு
    9944766642
    9944358034
    9442186176

    ReplyDelete
    Replies
    1. Mr***** 5% relaxation la nanum bathika patu erukan en mark 96 but weightge low indha relaxation aala 100 Peru, enaivida adhiga wtg varuthu... but relaxation case already eruku thana IPO ena seiya mudium?

      Delete
  3. யாரும் கேஸ் போட வேண்டாம் .

    ReplyDelete
  4. யாரும் கேஸ் போட வேண்டாம் .

    ReplyDelete
  5. யாரும் கேஸ் போட வேண்டாம் .

    ReplyDelete
  6. Case potu potu than inum posting podama irukirom....posting sekrama podanumam ivaga caseum poduvagalam....enna sir ithellam....ovoru listum varum pothu puthusu puthusa case pota epdi sir posting poduvaga...eppa case podama irukegalo appa than namaku posting...

    ReplyDelete
  7. Who got 103 in bc physics.contact 9791526060

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி