33 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடைகிறது, மங்கள்யான் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2014

33 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடைகிறது, மங்கள்யான்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்னும் 33 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடையும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

 மங்கள்யான்நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நோக்கில் மங்கள்யான் விண்கல திட்டத்தை இஸ்ரோ மேற்கொண்டது.ரூ.450 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்ட மங்கள்யான் விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. 
  
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த விண்கலம், எவ்வித பிரச்சினையும் இன்றி திட்டமிட்டபடி விண்வெளியில் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது.189 மில்லியன் கி.மீ.விண்கலம் ஏவப்பட்டது முதல் ஒவ்வொரு நாளும் இந்தியர்களின் மனதில் ஆவலை அதிகரித்து வரும் மங்கள்யான், தனது பயணத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. சுமார் 9 மாதங்களில் 189 மில்லியன் கிலோ மீட்டர்களை வெற்றிகரமாக கடந்து விட்ட மங்கள்யான், இன்னும் 90 லட்சம் கிலோ மீட்டர் செல்ல வேண்டும்.

இந்த தூரத்தையும் இன்னும் 33 நாட்களில் கடந்து விடும் என இஸ்ரோ நேற்று அறிவித்து உள்ளது. அதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 24-ந் தேதி செவ்வாய்கிரக சுற்று வட்டப்பாதையை மங்கள்யான் விண்கலம் சென்றடையும் என இஸ்ரோ அதிகாரிகள் சமூக வலைத்தளம் ஒன்றில் தெரிவித்து உள்ளனர்.

விண்வெளி ஆய்வில் மைல்கல்இஸ்ரோவின் லட்சிய திட்டமான மங்கள்யான் விண்கல திட்டம் வெற்றி பெற்றால், செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து விடும்.மேலும் இந்த திட்டம் இந்திய விண்வெளி ஆய்வு துறையில் மற்றொரு மைல்கல்லாகவும் விளங்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

8 comments:

  1. கேஸ் போடுவதற்க்கான நேரம் 31 தேதி யுடன் முடிவடைகிறது. அதற்கு மேல் யார் நினைத்தாலும் கேஸ் போட முடியாது. செப்டம்பர் முதல் வாரத்தில் ஓரு முடிவு தொரிந்துவிடும்.
    கேஸ்ல் பெயர் உள்ளவர்களுக்கு மட்டும் பணி இடம் ஒதுக்கப்படும்.
    வயிற்று வழி என்று Hospital செல்பவருக்குதான் மருந்து தர முடியும் என்பார்கள்.

    செப்டம்பர் முதல் வாரத்தில் கவுன்சிலிங் மற்றும் பணி நியமணம் நடைபெறும். யார் நினைத்தாலும் 71ஜிஒ மாற்றுவது கடினம். அனைவருக்கும் பணிநியமணம் உறுதி.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. Saravanan sir ethanal nengal sollavaruvathu? 90 above eduthu pathikka pattavarkalai case poda solringala? Nenga case pottu erukkingala?

    ReplyDelete
  3. MEETING IN CHENNAI !!

    ஆசிரியர் காலிப்பணியிட

    ஆய்வுக்கூட்டம் சென்னையில்

    ஆக.,26ல் நடக்கிறது!!

    ReplyDelete
  4. அனைத்து நண்பர்களுக்கும் காலை வணக்கம்

    மங்கள்யான்189 மில் கி.மீ ரை சிறிதும் ஓய்வெடுக்காமல் கடந்துக்கொண்டிருக்கிறது

    மங்களாயன் ஏவபட்ட அதேநாளில் தான் நமக்கும் தேர்வு முடிவு வந்தது
    இரண்டு வேகத்தையும் ஒப்பிட்டு பாருங்கள்

    ReplyDelete
  5. கேஸ் போட்டா உறுதியாக வேலை கிடைக்கும் என்பது பொய் . இதை யாரும் நம்ப வேண்டாம் . இது தற்போது ஒரு தொழிலாக நடைமுறையில் உள்ளது .

    ReplyDelete
    Replies
    1. yes sir you are very corect. case poda soluvathu avarkalin suyanalathirku. yarum emara vendam.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி