பென்சில் தாத்தா வயசு 450 ! விகடன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2014

பென்சில் தாத்தா வயசு 450 ! விகடன்

தெரியுமா ஃப்ரெண்ட்ஸ்... நம்ம பென்சில் தாத்தாவுக்கு வயசு 450.
1564-ம் வருஷம், இங்கிலாந்தின் வடக்கே கும்பிரியா பகுதியில் இருக்கிற போரோடேல் (Borrowdale) என்ற இடத்தில், கிராஃபைட் படிவங்களைக் கண்டுபிடிச்சாங்க.

 இந்த கிராஃபைட் படிவங்களைச் செம்மறி ஆடுகளின் உடம்பில் அடையாளக் குறியீடு வைக்கும் மசியாகப் பயன்படுத்தினாங்க. 'இதை எழுதுவதற்கும் பயன்படுத்தலாம் போலிருக்கே’னு நினைச்சாங்க.

1565-ம் வருஷம், கானாட் வோன் கெஸ்னர் (Conrad von Gesner) என்ற ஜெர்மன்  அறிஞர்தான் இந்த கிராஃபைட்டில் முதன்முதலில் எழுதியதாகச் சொல்றாங்க. இவர், கிராஃபைட்டுக்கு மேலும் கீழும் மரக்கட்டையை வெச்சு எழுதியிருக்கார்.

போரோடெல் பகுதியில் கண்டுபிடிச்ச கிராஃபைட், ரொம்பவும் விலைமதிப்பானது என நினைச்ச இங்கிலாந்து அரசு, அதைப் பயன்படுத்த 1752-ல் சட்டபூர்வ அங்கீகாரம் கொடுத்தது. கிராஃபைட் படிவைத் திருடினால், சிறைத் தண்டனை கிடைக்கும்னு சட்டம் போட்டுது.

முதன்முதலில், ஜெர்மனியின் நுரெம்பர்க் (Nuremberg)  நகரில், பென்சிலைத் தயாரிச்சு விற்பனைக்கு அனுப்பினாங்க. கிராஃபைட், சல்ஃபர், ஆன்டிமணி (Antimony) கலந்து, இந்தப் பென்சில்களைத் தயாரிச்சாங்க.
ஆரம்பத்தில், பென்சில் மேலே இருக்கும் மரக்கட்டைக்கு, மஞ்சள் நிறத்தையே பயன்படுத்தினாங்க. அப்புறம்தான், பல வண்ணங்களில் வந்தது.
undefined

உருளை வடிவில் இருந்த பென்சிலை மேஜை மீது வைக்கிறப்ப, வேகமாக உருண்டு விழுந்துவிடும். இதைத் தடுக்க, அறுங்கோண வடிவில் தயாரிக்க ஆரம்பிச்சாங்க. இப்போ, முக்கோண வடிவத்திலும் பட்டையாகவும் பென்சில்கள் வருது. போதாததுக்கு, பேனா மாதிரி செட்-அப்பில் லெட் பென்சில்கள் கிடைக்குது.

பென்சிலுக்குப் பின்னாடி, ரப்பரை இணைச்சு, டூ இன் ஒன் பென்சிலை உருவாக்கியவர், ஜமைக்காவில் பிறந்த ஹெய்மன் லிப்மேன் (Hymen Lipman) . 1858-ம் வருஷம், இந்த வகை பென்சில்கள் வந்தது.
undefined
1565-ல் பிறந்த கறுப்புத் தாத்தாவுக்கு இப்போ, கலர் கலராக நிறையப் பேரன்கள், பேத்திகள். ஆனாலும், ஸ்கூலுக்குப் போகும் கே.ஜி. சுட்டிகளில் ஆரம்பிச்சு, பலரும் நிறையப் பயன்படுத்துறது இந்த 450 வயசு தாத்தாவைத்தான்.
ஹேப்பி பர்த்டே பென்சில் தாத்தா!   

6 comments:

  1. Mani sir அவர் புகைப்படம் உள்ளதா????

    ReplyDelete
    Replies
    1. பென்சில் கண்டுபிடிக்கப் பட்ட காலத்தில் புகைப் பட கருவி இல்லை sir

      Delete
  2. அருமை மணி Sir good information thank you

    ReplyDelete
  3. Urakkathirkum irakkamillai nammai Uranga vaikka........

    ReplyDelete
  4. Migavum nandri sir...
    Aththudan thanglish il eluthiyatharku mannikavum.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி