தமிழகத்தின் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை இல்லை:மனிதவள மேம்பாட்டு அமைச்சக அறிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2014

தமிழகத்தின் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை இல்லை:மனிதவள மேம்பாட்டு அமைச்சக அறிக்கை.


"தமிழகத்தில், 15 சதவீத அரசு பள்ளிகளில், அதாவது, 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை" என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 5,720ல், 1,442 பள்ளிகள், பெண்கள் பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையதளத்தில்...

நாடு முழுவதும், மாநில வாரியாக, அதில், ஒவ்வொரு மாவட்ட வாரியாக உள்ள அரசு பள்ளிகள் எண்ணிக்கை, அதில், எத்தனை ஆண்கள் அரசு பள்ளிகளில், கழிப்பறை வசதி இல்லை; எத்தனை அரசு பெண்கள் பள்ளிகளில், கழிப்பறை வசதி இல்லை என்ற புள்ளி விவரங்கள், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில், வெளியிடப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தில் மொத்தம் உள்ள, 37,002 அரசு பள்ளிகளில் 1,442 பெண்கள் பள்ளிகளிலும், 4,278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.17 ஆயிரம் கோடி

இதன்படி, மொத்த அரசுப்பள்ளிகளில், 15.45 சதவீத பள்ளிகளில், கழிப்பறை வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013 - 14ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித் துறைக்கு நடப்பாண்டில் 17 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளிலும், அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருந்தும், அரசு பள்ளிகளில் அடிப்படையான கழிப்பறை வசதியே முழுமையான அளவிற்கு நிறைவேற்றப்படவில்லை என்பது மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரம் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 30ம் தேதி சட்ட சபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

எது சரி?

அதில், அனைத்துப் பள்ளிகளிலும் 100 சதவீதம் கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும் என்பதற்காக, கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், கழிப்பறை வசதிகள் இல்லாத, 2,057 பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது என முதல்வர் தெரிவித்தார். ஆனால், மத்திய அரசு அறிக்கையில், கழிப்பறை வசதி இல்லாத 5,720 பள்ளிகள் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில், எந்த புள்ளி விவரம் சரியானவை என தெரியவில்லை.

கல்வித்துறை கருத்து என்ன?

கல்வித்துறை வட்டாரம் தெரிவித்த கருத்து: பட்ஜெட்டில், அதிக நிதி ஒதுக்கப்படுவதாக தெரிந்தாலும், 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிதி, சம்பளத்திற்கே செலவாகி விடுகிறது. மீதமுள்ள நிதி, மாணவர்களுக்கான இலவச திட்டங்களுக்கு போய்விடுகிறது.

ஆர்.எம்.எஸ்.ஏ., (மத்திய இடை நிலைக் கல்வி திட்டம்) மற்றும் எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்) ஆகியவற்றுக்காக, மத்திய அரசு வழங்கும் நிதியைக் கொண்டுதான், ஓரளவிற்கு, அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகளில், கழிப்பறை வசதி ஏற்படுத்த, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.

கழிப்பறை இல்லாத பள்ளிகள் விவரம்

மாவட்டம் - மொத்த பள்ளிகள் - பெண்கள் பள்ளி - ஆண்கள் பள்ளி

சென்னை - 332 0 0

கோவை - 1,963 70 270

கடலூர் - 1,417 24 82

தர்மபுரி - 1,362 92 134

திண்டுக்கல் - 1,305 182 84

ஈரோடு - 1,791 43 134

காஞ்சிபுரம் - 1,425 8 51

கன்னியாகுமரி - 518 0 5

கரூர் - 805 0 236

கிருஷ்ணகிரி - 1,669 36 259

மதுரை - 1,230 161 222

நாகை - 919 16 32

நாமக்கல் - 995 27 234

பெரம்பலூர் - 940 40 198

புதுக்கோட்டை - 1,533 73 286

ராமநாதபுரம் - 1,062 67 150

சேலம் - 1,728 60 299

சிவகங்கை - 1,111 55 161

தஞ்சாவூர் - 1,370 16 38

நீலகிரி - 429 8 35

தேனி - 528 21 7

திருவள்ளூர் - 1,454 81 130

திருவாரூர் - 930 9 22

தூத்துக்குடி - 704 17 69

திருச்சி - 1,272 40 116

நெல்லை - 918 62 138

திருவண்ணாமலை - 1,968 11 110

வேலூர் - 2,229 32 257

விழுப்புரம் - 2,116 161 390

விருதுநகர் - 979 30 129

4 comments:

  1. An aptitude test awaits aspiring teachers in Gujarat
    Transparency and an end to manipulation can be expected in the selection ofteachers and head masters now as Gujarat government has introduced Teachers Aptitude Test (TAT) in their recruitment process.

    The test will carry 70 per cent weightage, while educational qualifications will have 30 %. The test will be conducted by the Gujarat Secondary and Higher Secondary Education Board (GSHSEB), Gandhinagar, at least once every year.

    A body called the Gujarat State Secondary and Higher Secondary School Educational Staff Recruitment Selection Committee will function as the selection committee.

    The body will ascertain the number of posts of head masters and teachers for which recruitment is to be made, from the inputs given by the respective district education officers.

    The selection committee will be headed by the commissioner of schools. The vice-chairman of GSHSEB, a state government officer of deputy secretary rank, educationists and representatives of the school management associations will be its members.

    Hasmukh Adhia, principal secretary of state education department said that TAT has been introduced to eliminate possible malpractices in the teachers' recruitment.

    "Earlier, there were many complaints about irregularities and corruption.Now, the process will be transparent as candidates will be judged on their performance in the test and their educational qualifications. There will be no personal interviews and the selection committee will prepare the merit list of the applicants," he said.

    Giving details of the test Adhia said, "Total marks of TAT will be 250. There will be two papers. A paper of 150 marks will check aptitude of applicants to become teachers. It will also check their general knowledge, language skills, etc. This paper will be common for all the candidates."

    "The second paper of 100 marks will be of the subject in which the candidates have got their degrees,” he said

    ReplyDelete
  2. ஐ நான்தானே முதல் கமெண்ட் //////

    ReplyDelete
  3. GUJARAT GOVERNMENT'S TET POLICY

    The test will carry 70 per cent weightage, while educational qualifications will have 30 %.

    Total marks of TAT will be 250. There will be two papers. A paper of 150 marks will check aptitude of applicants to become teachers.

    The second paper of 100 marks will be of the subject in which the candidates have got their degrees,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி