போலி கையெழுத்து பயன்படுத்தி தலைமை ஆசிரியர்களுக்கு பணி ஆணை: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணிநீக்கம் -தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2014

போலி கையெழுத்து பயன்படுத்தி தலைமை ஆசிரியர்களுக்கு பணி ஆணை: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணிநீக்கம் -தினமணி

உயரதிகாரிக்கு தெரியாமல் போலியாக அவரது கையெழுத்தைப் பயன்படுத்தி தலைமை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் ஆணை வழங்கிய மொரப்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சீமான் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த மா.கணேசன் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் ஆணை போல தயாரித்து அவரது கையெழுத்தை போலியாக போட்டு தொங்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.பூபதி, சிந்தல்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் எ.ராஜேஸ்வரி ஆகியோருக்கு பணிமாறுதல் ஆணை வழங்கியுள்ளார்.

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவியை தவறான வழியில் பயன்படுத்தி அரசு ஊழியரின் நடத்தை விதிகளை மீறிய செயலுக்காக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரால் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றார் அவர்.

1 comment:

  1. சட்டத்தை மீறுகிற குற்றவாளிகளை, தன் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். அது என்ன தாற்காலிக பணியிடை நீக்கம்???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி