ஆசிரியர் பட்டயப் படிப்பு: இன்று முதல் விண்ணப்பம் - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2014

ஆசிரியர் பட்டயப் படிப்பு: இன்று முதல் விண்ணப்பம் - தினமணி

பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை வியாழக்கிழமை (ஆக.7) முதல் பெற்றுக் கொள்ளலாம் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஆகஸ்ட் 7 முதல் 14 வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே இடங்களில் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16-ஆம் தேதி இணையதளம் வாயிலாக நடத்தப்படும். விண்ணப்பதாரர் எந்த மாவட்டத்தில் விண்ணப்பித்தாரோ அந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கலந்தாய்வில் பங்கேற்கலாம். ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 600 இடங்களும், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,500 இடங்களும், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டில் 9 ஆயிரம் இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.

14 comments:

  1. Paper 2 final list in inakku varuma?

    ReplyDelete
  2. See dinamalar madurai edition 2nd page "all result is may be released this month last no sure"

    ReplyDelete
  3. porattam 2015 varai thodarum theruvil nirpom

    ReplyDelete
  4. இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு பட்டியலும் வெளியாகிவிடும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி