டி.இ.ஓ., பதவி உயர்வு பரிந்துரை பட்டியலில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 46 பேருக்கு, சென்னையில் நாளை முதல், நிர்வாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பதவிக்கு முன்னுரிமை அடிப்படையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களில் சிலருக்கு நிர்வாக அனுபவம் இல்லாததால், அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தொய்வு ஏற்படுகிறது.
பதவி உயர்வு அளிக்கப்படுவதற்கு முன், இத்தலைமை ஆசிரியர்களுக்கு, சென்னை மாநில கல்வியியல் மேலாண்மை நிர்வாக பயிற்சி நிறுவனம் (குஐஉMஅகூ) மூலம், 15 நாட்கள் நிர்வாகப்பயிற்சி அளிக்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, நாளை முதல் ஆக.,16 வரையும், பின்னர் ஆக.,18 முதல் 22 வரையும் 11 நாட்களுக்கு, இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.இப்பயிற்சியில், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 19 பேர், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 27 பேர் என 46 பேர் கலந்து கொள்கின்றனர். இத்தகவல்கள், பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி