பெரம்பலூர் அருகிலுள்ள வெள்ளனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தை சேர்ந்த செல்வராஜ் மனைவி முத்துலட்சுமி (வயது-43) என்பவர் தலைமை ஆசிரியையாக உள்ளார்.
இவர் இப்பள்ளியில் 3-ம் வகுப்பு பயிலும் பெரியசாமி என்பவரின் மகன் கோபி(வயது-8) என்ற மாணவன் சரியாகப் படிக்கவில்லை என்பதால் கடந்த 1-ம் ஆசிரியர் மாணவனை தேதி குச்சியால் அடித்துள்ளார்.
இதைதொடர்ந்து, சனிக்கிழமை வீட்டிலிருந்த கோபியின் உடலில் காயம் இருப்பதைக் கண்ட அவரது பெற்றோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மாணவன் கோபியை சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறகு, இதுகுறித்து மாணவரின் தாய் இராஜேஸ்வரி பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், உதவி காவல் ஆய்வாளர் நாகவள்ளி வழக்குப் பதிந்து, தலைமை ஆசிரியை முத்துலட்சுமியை ஞாயிற்றுக் கிழமை கைது செய்தார்.
ஆசிரியை முத்துலட்சுமி மாணவனை அடித்த வழக்கில் கைது செய்யபடத்தை தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எலிசபெத் ஞாயிற்றுக்கிழமை இரவு உத்தரவிட்டுள்ளார்.
என் கருத்து :
மாணவர்களை அடிக்க கூடாது என அரசு ஆணை பிறப்பித்துள்ளது...இதனை வரவேற்கதகுந்த விசயம் என்றாலும் இந்த ஆணைகளை பல மாணவர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்பதே என் வேதனை..
கோழி மிதித்து எந்த குஞ்சும் முடமாகுவதில்லை அதுபோல ஆசிரியர் கண்டிப்பதால் எந்த மாணவரும் கெட்டுப்போவதில்லை...
நம் வாழ்வில் எத்தனையோ ஆசிரியர்களை கடந்து வந்துள்ளோம் ஆனால் நம்மீது அக்கறை எடுத்து அடித்து படிக்கவைத்த ஆசிரியர்களை இன்றும் நம் நினைவில் நீங்கா இடம் பிடித்துள்ளனை...
அதுபோல சில பள்ளிகளில் மணவர்களை கண்மூடித்தனமாக ஆசிரியர்கள் அடிக்கின்றனர் அது மிக எதிர்க்க வேண்டியது. எந்த கனியிலும் தட்டிக் கனிந்த பழம் தித்திப்பாக இருந்ததில்லை அப்படியே இனித்தாலும் உடலுக்கும் நல்லது அல்ல...அதுபோல் மாணவர்களை அடித்து திருத்துவதை விட அன்பால் திருத்தினால் அம்மாணவர்களின் வாழ்க்கை தானாக கனிந்த பழம் போல் தித்திப்பாகவும் இருக்கும் சமூகத்திற்கும் மிக நல்லவர்களாக இருப்பர்கள்...
நாளைய உலகம் நம் கையில்...
ReplyDeleteகற்றல்-கற்பித்தல் எனும் கல்வி தத்துவத்தில் தண்டனை எதிர்மறை விளைவினை ஏற்படுத்தும் என்பது உளவியலின் கருத்து...
இறுப்பினும் விசாரணை செய்வது நல்லது...
எதுவாக இருந்தாலும் வருங்கால ஆசிரியப்பெருமக்களுக்கு இந்நிகழ்ச்சி ஒரு நல்ல முன்னெச்சரிக்கை....
நன்றி...
Chennai la oru teacher I oru maanavan kuthi kondran
DeleteNam teacher samuthayam padu mosama poguthu
S....
DeleteIthuku naam sariyana mind counselling students-kku tharanum sir...
நாம தான் மைண்ட் கவுன்சிலிங் எடுக்கனும்.மாணவனை அடிப்பது முற்றிலும் தவறு.பல உளவியியல் முறைகள் உள்ளன மாணவனை எப்படி கையாளவேண்டும்.அடிப்பது நம் நாட்டிலே அதிகம் ஏன் என்றால் சமுதாயம் அப்படி.அது பள்ளியில் பிரதிபலிக்கிறது.என்னைப்பொறுத்தவரை மாணவனை படிக்க வைக்க முயற்சிக்க வேண்டுமே தவிர மாணவனை அடிக்க முயற்சிக்ககூடாது.அறிவில்லா ஆசிரியனே அடிக்கிறான்.அக்கரையுள்ள ஆசிரியன் அணுகுகிறான்
Delete