ஆசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடிகளை நீக்க வேண்டும்: 'தி இந்து' உங்கள் குரல் மூலம் ஒரு கோரிக்கை - தி இந்து (தமிழ்) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடிகளை நீக்க வேண்டும்: 'தி இந்து' உங்கள் குரல் மூலம் ஒரு கோரிக்கை - தி இந்து (தமிழ்)

ஆசிரியர் தகுதித் தேர்வு | கோப்புப் படம்: எம்.கோவர்தன்

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்களை முன்வைத்து நேர்காணல் நடைபெற்றுள்ளதால், அதற்குள் சீனியாரிட்டியையும், முன் அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் பலர். தவிர மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக தேர்வு நடத்தியதிலும் உள்ள குளறுபடிகளை நீக்கி சரியான முறையில் உரியவர்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.


இது பற்றி உங்கள் குரல் பகுதிக்கு பல அழைப்புகள் வந்துள்ளன. அதில் சம்பந்தப்பட்டவர்கள் சிலரிடம் பேசியதில் அவர்கள் கூறியதாவது:

கண்ணம்மா, பாலகிருஷ்ணன் உடுமலை:

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வின் மூலம் தேறியவர்களுக்கு தொடர்ந்து நேர்காணல் அழைப்பும் வந்தது. அதில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கென குறிப்பிட்ட மதிப்பெண் அளித்தனர் தேர்வாளர்கள். இதை கவனித்து எங்களைப் போன்ற சீனியர்கள் அதிர்ச்சியடைந்தோம்.

டிஇடி தேர்வு என்பதில், வெறுமனே பெறும் மதிப்பெண்ணை கணக்கிட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைத்து அதற்கு தனி மதிப்பெண்ணை அளிப்பதாக இருந்தால் பரவாயில்லை. அதை விட்டுவிட்டு இப்படி கணக்கிடுவது எந்த வகையில் நியாயம்? பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ளது போன்ற கல்வியும் இல்லை. மதிப்பெண் போடுவதும் இல்லை.

உதாரணமாக நான் (கண்ணம்மா) 90-92 ஆம் ஆண்டுகளில் பிஎட் படிக்கும் காலத்திலும், அதற்கு முன்பு பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போதும் ஒரு பாடத்தில் 80 மதிப்பெண் ஆசிரியர்கள் போடுவது என்பது குதிரைக் கொம்பு. அதே மதிப்பெண்ணை இப்போதுள்ள சுமாராக படிக்கக்கூடிய மாணவர்களே வாங்குவதும், நூற்றுக்கு நூறு, தொண்ணூறு மதிப்பெண்கள் ஏராளமான மாணவர்கள் பெறுவதும் சாதாரணமாக உள்ளது. அந்த வகையில் பள்ளி மதிப்பெண்ணை கணக்கிட்டால் எங்களை போன்ற சீனியர் ஆசிரியர்கள் யாருக்குமே பணி வாய்ப்பு கிடைக்காது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாங்கள் பதிவு செய்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த காலகட்டத்தில் நான்கு, ஐந்து தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக மாறி மாறி பணிபுரிந்து வெறும் ஆயிரம், ஐயாயிரம் சம்பளத்துக்கு கஷ்டப்பட்டுள்ளோம். அந்த அனுபவத்தையெல்லாம் கணக்கில் கொள்வதில்லை. சீனியர்களுக்கு 50 சதவீதம் என்று ஒதுக்கீடு செய்யலாம் அல்லவா? மேல்மட்டத்தில் பரீசிலனை செய்து முடிவு எடுக்கும் அளவுக்கு உங்கள் குரல் மூலம் தீர்வு வேண்டும் என்றனர்.

பெயர் வெளியிடவிரும்பாத மாற்றுத்திறனாளி ஆசிரியை ஒருவர் கூறியது:

கடந்த ஆகஸ்ட் மாதம் மாற்றுத் திறனாளிகளுக்காக டிஇடி சிறப்பு தகுதித் தேர்வு வச்சாங்க. அதில் தமிழ்நாடு முழுக்க 4500 பேர் எழுதியிருக்காங்க. ஒரு மாசம் கழிச்சு ரிசல்ட் வந்தது. சுமார் 900 பேர் தேர்ச்சி பெற்றிருந்தாங்க. தேர்வு எழுதுவதற்கு முன்பு 82 சதவீத மதிப்பெண் எடுத்தாலே அவர்களுக்கு வேலை என்று சொன்னார்கள். ஆனால் கடந்த ஜீலை 1,2 தேதிகளில் தமிழகத்தில் விழுப்புரம், சேலம், மதுரை உள்ளிட்ட நான்கு இடங்களில் எங்களுக்கு நேர்காணல் வைத்தார்கள். அதில் 10 வது, 12 வது படித்தபோது எடுத்த மதிப்பெண்களை வைத்து ஒரு குறிப்பிட்ட மதிப்பெண் போட்டுள்ளார்கள். இப்ப யாருக்கு வேலை என்பது மட்டும் புரியாத புதிராக உள்ளது.

போன வருஷம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தபோது அதில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டார்கள். அதில் மாற்றுத்திறானளிகள் உள்பட 43 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அவர்களுக்கே இதுவரை பணியிடம் நிரப்பவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடம் ஒதுக்கீடு என்கிறார்கள். தற்போது 10 ஆயிரம் பணியிடம் நிரப்பப் போவதாக தகவல்கள் உள்ளது. அப்படி பார்த்தால் மாற்றுத்திறனாளிகள் 3 சதவீதத்திற்கு 300 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். அந்த வாய்ப்பு இந்த முறை அல்லாமல் சென்ற முறை எழுதிய மாற்றுத்திறனாளிகளுக்குத்தான் முதல் இடமா? சீனியாரிட்டிபடி வருமா? ஒன்றுமே புரியவில்லை. கல்வித்துறை இதை தெளிவு படுத்தி அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உண்மை செய்தியை காண இங்கே சொடுக்கவும்...

43 comments:

  1. நிச்சயம்மாக ஆசிரியர் தேர்வில் நடைபெறும் குளறுபடிக்குஒரு முற்று புள்ளி வேண்ட்டும்

    ReplyDelete
    Replies
    1. சங்கமே கடைசியில் முற்றுபுள்ளி வைக்க மறந்து விட்டதே...

      Delete
    2. CONTINUED BELOW MR SRI TAMIL TYPING IS NOT EASY FOR SANGAM

      Delete
    3. கொஞ்ச நாட்களுக்கு தான் கஷ்டமாக இருக்கும் பழகிவிட்டால் மிக சுலபம்.. தமிழிலேயே முயற்சியுங்கள்...

      Delete
    4. Tamil medium MBC chemistry canditate please call me 7708572932

      Delete
    5. தேறியவர்களுக்கு தொடர்ந்து நேர் காணல் எங்கு வந்தது ???? தெளிவு படுத்தவும் .

      Delete
    6. ஒரு பரபரப்பில் சொல்ல மறந்துட்டன் கல்வி செய்திக்கு இனிய காலை வணக்கங்கள்

      Delete
  2. ஒரு வாரமாக இரவு கண் விழித்து பழக்கமாகி விட்டதால் இன்றும் உறக்கம் வர தயங்குகிறது நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. பருத்தி பால் குடியுங்கள்

      Delete
    2. வந்துடார்யாயா எங்க அண்ணே வரும்போதே எவ்ளோ பவர்

      Delete
    3. ஒரு வாரமாக தான் புலி வருதுனு கண் உறங்கல

      Delete
    4. அப்டியே இந்த பவர கிருஷ்ணாயில ஊத்தி எறியுங்கள் அண்ணாச்சி. .

      Delete
    5. Indeed nature is out of balance

      Delete
  3. IN.TRB WE KNOW IS FLOODED WITH MANY WORKS WITH INSUFFICIENT STAFF STRENGTH
    HOW TNPSC GOT A REJUNUVATION BY EX DGP NATRAJ SOME ONE LIKE HIM SHOULD HEAD TRB IN MINISTER LEVEL CADRE THEN ONLY ALL THIS PROBLEMS WILL COME TO AN END

    ReplyDelete
    Replies
    1. இன்னும் 2013 ஜூலை (டெட் க்கு முன்பு நடந்தது ) மாதம் நடந்த குரூப் 3 தேர்வுக்கு முடிவு வெளியிடப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

      Delete
  4. TNTET: கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமான ஆசிரியர் தேர்வு நியாயமானதா? தினமலர்
    இப்போது வருமோ, எப்போது வருமோ என்று பல்லாயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது அரசு பணிக்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியல்.

    இந்த தேர்வுப் பட்டியல், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையிலேயே வெளியிடப்படும் இந்தப் பட்டியலுக்கு எதிர்ப்பு உள்ளதையும் மறுக்க முடியாது.
    வேறு எந்த தகுதியையும் கருத்தில் கொள்ளாமல், வேறுமனே மதிப்பெண்களை மட்டுமே கருத்தில் கொள்வது நியாயமானதா என்ற குமுறல்கள், பட்டதாரிகள் மத்தியில் பரவலாக உள்ளது.

    இதுகுறித்து கல்விமலர் இணையதளத்திற்கு தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட, சில பெயர் குறிப்பிட விரும்பாத, அரசுப் பணியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சில பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க, TET என்ற தகுதித்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே எங்களுக்கு போதாத காலம் தொடங்கியது.

    ரு தரமான ஆசிரியரை மதிப்பிட, TET என்ற தேர்வு மட்டுமே சரியான ஒன்றா என்ற கேள்வி இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், அந்தப் பிரச்சினை கிடக்கட்டும். அந்த தேர்வையெழுதி, தேர்ச்சியும் பெற்றாகிவிட்டது.
    ஆனால், தேவைக்கும் அதிகமான ஆசிரியப் பட்டதாரிகள் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர், தகுதியானவர்களை தேர்வுசெய்ய, அரசு தரப்பில் கடைபிடிக்கும் நடைமுறைகள்தான் கொடுமையாக இருக்கின்றன.

    வெறுமனே மதிப்பெண் அடிப்படை என்பது எப்படி சரியாக இருக்கும். 12ம் வகுப்புத் தேர்வில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1000 மதிப்பெண்கள் பெறுவதற்கும், இன்று அந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இன்றைய நிலையில், 1100 மதிப்பெண்களை மிகவும் சாதாரணமாக பெறுகின்றனர் மாணவர்கள். அதற்கேற்ப நடைமுறைகள் மாறிவிட்டன.

    அதேபோல், பி.ஏ., ஆங்கில இலக்கியம் போன்ற பட்டப் படிப்புகளில், 10 ஆண்டுகளுக்கு முன்னால், 50% மதிப்பெண்கள் எடுப்பதே சிறப்பானதாக பார்க்கப்பட்டது. ஆனால், இன்றோ, 70% மதிப்பெண்களே சாதாரணம். நடைமுறைகள் அவ்வாறு மாறிவிட்டன. எனவே, மதிப்பெண்களை மட்டுமே வைத்து அளவிடுவது எந்த வகையில் நியாயம்?

    மேலும், சமூகநீதி சலுகைகளான, கலப்புத் திருமணம் புரிந்தோர், ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கான முன்னுரிமை சலுகைகளுக்கு மதிப்பில்லையா? வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து பல்லாண்டு காலம் காத்திருப்பவர்களுக்கு நீதி கிடைக்காதா?

    நாங்கள் TET தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, அரசுப் பணிக்குத் தேர்வு செய்யும்போது பின்பற்றப்படும் நடைமுறைகள்தான் சிக்கலானவைகளாக உள்ளன.

    எந்தவித நடைமுறை அறிவும், அனுபவமும் இல்லாத புதிதாக படிப்பை முடித்த ஆசிரியப் பட்டதாரிகள், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையிலான கட்-ஆப் என்ற நடைமுறையின் மூலம், தகுதியான ஆசிரியர்கள் என்ற பெயரில், பல மூத்த, அனுபவமிக்க, முன்னுரிமை தகுதிகளைப் பெற்று, TET தேர்விலும் தேர்ச்சிபெற்ற பட்டதாரிகளை புறந்தள்ளி, பணி வாய்ப்புகளைப் பெறுவது எந்த வகையில் நியாயம்?

    வெறுமனே, பாடப்புத்தக அறிவு மட்டுமே தகுதியான ஆசிரியர்களை உருவாக்கி விடுமா? எனவே, தயவுசெய்து, கட்-ஆப் அடிப்படையில் மட்டுமே பணி வாய்ப்பு என்ற நடைமுறையை கைவிட்டு, TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, பதிவு மூப்பு, முன்னுரிமை சலுகைகள், பணி அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே, பணி நியமனம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கையை அரசு தயவுகூர்ந்து பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

    ReplyDelete
    Replies
    1. http://www.kalviseithi.net/2014/08/blog-post_6.html

      காலைல நண்பர் மணியரசன் வெளியிட்ட செய்தியை தானே கொடுத்துள்ளீர்கள்...

      Delete
    2. KALLAPOTTI NIRAMPIDUM POLIRUKKE

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Tet, pgtrb,special tet,college proffessor போன்வற்றில் அதிக repair பார்ப்பதால் TRB: Total Repair Board

    ReplyDelete
  7. Marupadium muthalil eruntha ......AAAAAAVVv

    ReplyDelete
    Replies
    1. 50 - 50 chance kodukkalam. .experience certificate produce panna sonnal fraud certifics than pannuvarkal. so this syste m(weigtge ) quite ok .

      Delete
    2. i'm 42 yrs if i'm not selected means i never get a chance to enter into govt job.
      So Our CM will lookover this problem peacefully without any complications.

      Delete
  8. நண்பா , பவரூ.நித்திஂ
    What is your weigtage..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நன்றி பவரு நண்பா. .

      Delete
    3. 65.76 Eng MBC. Sathya ungaluthu solunga....

      Delete
  9. மாற்று திறனாளிகளின் வாழ்க்கை இனி மேல் தான் ஆரம்பம். அனைவருக்கும் (934_spl tet)பணி கிடைக்கும் என்று நம்பிக்கை வைப்போம்

    ReplyDelete
  10. என்னமோ நடக்குது
    மர்மமா இருக்குது...

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. No one will not take about our problem to CM knowledge. Seniors life is over. Politicians must write one exam and calculate their marks then they will appoint their post depends upon their marks. This is the only way to convey our problems.

    ReplyDelete
  13. அனைவருக்கும் இரவு வனக்கம்

    ReplyDelete
  14. +2 mark cancel pannunga. Ug & b.ed + tet vachi posting podunga sir

    ReplyDelete
  15. Pg economics pepara idhuvaraikum 3 vaatti thiruthiyaachu, 4 times list vittachu. Idhuku mela late panna panna fail aanavan ellaam pass panniduvaan. Pass aana naanga fail aaiduvom

    ReplyDelete
  16. Pg economics revised list vida vida en peru pinnaala poikitte irukku. Seekkaram posting podunga

    ReplyDelete
  17. Needhibathi oru pepera 3 vaatti thirutha vaikkaradhu needhiya?

    ReplyDelete
  18. Kaasu irukkavan case podaraan. fail aanaalum pass aaidaraan

    ReplyDelete
  19. Trb neenga innaiku pg candidatesku sandhoshamaana news solli irukkinga. Please seekkaram posting potrunga

    ReplyDelete
  20. Thank You for TRB..... Neenga enna step venalum eddunga... within this month posting podunga pa..... Sathiyama romba kevalama irukku ..... enda intha profession ku vanthom nu nenaikka vacharatheenga......

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி