மதுரை, திருச்சியில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்க பரிசீலனை: துணை கமிஷனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2014

மதுரை, திருச்சியில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்க பரிசீலனை: துணை கமிஷனர்


மதுரை மற்றும் திருச்சியில்மேலும் கேந்திர வித்யாலயா பள்ளிகள் துவங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது," என கேந்திர வித்யாலயா பள்ளிகளின் சென்னை பிராந்திய துணை கமிஷனர் சலீம் தெரிவித்தார்.

மதுரையில் நமது நிருபரிடம் அவர் நேற்று கூறியதாவது: கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு விருப்பம் அடிப்படையில் தற்போது ஜெர்மன் மொழி கற்றுத்தரப்படுகின்றன. வெளிநாட்டு மொழிகள் கற்பதால், சம்மந்தப்பட்ட நாடுகளில் மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க வாய்ப்புக் கிடைக்கும்பட்சத்தில் அந்நாட்டின் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அவர்களுக்கு கிடைக்கின்றன.சென்னை பிராந்தியத்தில் மட்டும் 30 பள்ளிகளில் 400 மாணவர்கள் தற்போது ஜெர்மன் மொழி கற்றுவருகின்றனர். இந்தாண்டில், அகில இந்திய அளவில் இப்பள்ளிகள் 97.32 சதவிகிதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 45 கேந்திர வித்யாலயா பள்ளிகள் உள்ளன. திருச்சி தங்கமலை மற்றும் மதுரையில் கூடுதல் பள்ளிகள் துவங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் உரிய முறையில் இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி