சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் அன்றும்-இன்றும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2014

சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் அன்றும்-இன்றும்

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்...

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது...

அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே...

- 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது...

- Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)...

- chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று...

- 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது...

- மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது...

- தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது...

- சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது...

- முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி...

- உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்...

- சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்...

- சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது...

- பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்...

- சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது...

- நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது(தி.நகர்)...

- புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது...

- அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்...

- 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை...

- முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது...

- மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது...

- பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது...

- சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது...

- திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது...

- பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது...

- தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது...

- வள்ளி சேரி பாக்கம் என்பதே மருவி பின்னால் வளசரவாக்கம் என மாறியது..!

76 comments:

  1. அருமையான முயற்சி.

    ReplyDelete
  2. அருமையான தகவல் Sri நண்பரே

    ReplyDelete
  3. அருமையான தகவல் நன்றி சீடரே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் சித்தம் குருவே...

      Delete
    2. Sri sir , I want to share this Reasoning oh chennai areas name into my fb page .so pls what should i do.

      Delete
  4. nithyananda sir and power sir u were vry humorous it makes us cool.. wat s ur real name sir?????

    ReplyDelete
    Replies
    1. Sunitha nice to hear these words but I can't reveal myself sry...

      Delete
    2. நித்தி பைனல் லிஸ்ட் எப்ப வரும்.
      கட்டம் என்ன சொல்லுது...............

      Delete
    3. உனக்கு டைம் சரியில்லனு சொல்லுது சிஷ்யா

      Delete
    4. கட்டத்த விட ஸ்வாமி ஜி க்கு கம்பி தானே நல்லா தெரியும்

      Delete
    5. போங்க ஸ்வாமி பரிட்சை எழுதுன எல்லாருக்குமே தான் நேரம் சரியில்ல

      Delete
    6. நல்லா பாருங்க சாமி.
      தாள் 1 ல 74 வெயிட்டேஜ் வாங்கிருக்கேன் சாமி....

      Delete
    7. தாள் 2. ல கோட்ட விட்டுடியே கோட்டசாமி

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. Cm அப்படீன்னா......
      சிங்கமுத்தா.

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. தெரிந்த ஊரைப்பற்றி தெரியாத தகவல்கள் ..சூப்பர் சார்..சூப்பர் .

    ReplyDelete
  7. Replies
    1. யோவ் பவரு நீர் அழைத்தால் மட்டும் ஸ்வாமி உடனே வருகிறார் நான் அழைத்தால் வர தயங்குகிறாறே ஏன்?????

      Delete
    2. இமான் அவர்கள் எல்லாம் என்னிடம் 10,000 ரூபாய் கொடுத்து என்னிடம் சீடர்களாக உள்ளனர் நீங்களும் அதை செய்யுங்கள் உடனே உங்கள் கண்களுக்கு காட்சி அளிப்பேன் குருவே சரணம்..

      Delete
    3. ஓ இது தான் நித்தி'யின் ரகசியமா???? ஸ்வாமி அவ்வளவு வசதி என்னிடம் இல்லை தாங்கள் பொறுமையாகவே பதிலளியுங்கள் அவசரமில்லை.....

      Delete
  8. குறிப்பு: இதை கவுண்டமணி வாய்ஸ்ல் படிக்காமல்
    முகேஷ் வாய்ஸ்ல் படிக்கவும்.

    என் பேரு முகேஷ். நான் போன வருடம் டெட் எக்சாம் எழுதினேன்
    தேர்ச்சி பெற்றும் கூட வெயிட்டேஜ் மற்றும் போஸ்டிங்காக ஒரு வரூடம்
    எந்த வேலைக்கும் போகாமல் காத்திருந்தேன்.
    இப்போது எடை அதிகரிப்பு, டயாபடிஸ்
    போன்ற பிரச்சனைக்கு ஆளானேன்.

    பொதுநலம் கருதி வெளியிடுவோர்
    மன்னாரன் கம்பெனி..........
    குறிப்பு:எங்களுக்கு எங்குமே கிளைகள் கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. எருமை எருமை ஸாரி அருமை அருமை (just for fun koundar Sir don't take it serious)

      Delete
    2. அண்ணாச்சி உங்க மீசை
      வளர்ந்ததா? இல்ல வரஞ்சதா?..

      Delete
    3. சூப்பரப்பு

      Delete
    4. கவுண்டரே நுண்ணோக்கி கொண்டு பார்த்தீரா????? இன்னும் வேறுபட்ட வேடங்களில் உள்ளேன்....

      Delete
  9. சிரீ நமக்கு மட்டுமே

    தகவல் அருமை. ..

    ReplyDelete
    Replies
    1. சத்தியமூர்த்தி ஜி
      அது ஸ்ரீ உங்களுக்காக மட்டுமே..

      Delete
  10. maalaimalar Facebook page la pathen anyway nice

    ReplyDelete
    Replies
    1. சத்தியமா அதே தான்...

      Delete
    2. Sri sir என் அலைப்பேசியில் Sri என்ற எழுத்து தமிழில் இல்லை ஏன்???

      Delete
    3. உள்நாட்டு சதியா இருக்கும் சிஷ்யா நன்றாக தேடு தேடினால் கிடைக்காதது ஏதும் இல்லை ...

      Delete
    4. Exhuththaani keys la ஃ பக்கத்தில் இருக்கு பாருங்க.....

      Delete
    5. ஐயகோ எங்கு தேடியும் கிடைக்கவில்லையே ஸ்வாமி!!!!!!

      Delete
    6. நித்தி அப்படியே பவரு
      எங்க இருக்கானு தேடி சொல்லு.

      Delete
    7. நான் என்ன டா ஜோசியக்காரன மை தடவி கண்டு பிடிக்க? நான் முற்றும் தூறந்தவன்...

      Delete
    8. ஆமா ஸ்ஸ்ஸ்வாமி நாங்க எல்லாருமே பாத்தோமே

      Delete
    9. Intha power konjam power ஏத்திகிட்டு இருந்தேன் ரசிகர்களே

      Delete
    10. டே சில நாட்களாக சரியாக
      தூக்கம் வர மாட்டேங்குது நித்தி. .

      Delete
    11. யோவ் இவ்வளவு நாள் எங்கப்பா இருந்தீங்க? உண்மையாகவே அருமை.

      Delete
    12. Ennathu முற்றும் துறந்தவணா அப்படியென்றால் நீ

      Delete
    13. பவரு அண்ணே .பத்து மணிக்கப்புறம் பவரு எங்கயுமே கிடைக்காதே .உங்களுக்கு மட்டும் எங்கணே கிடைச்சது ?

      Delete
    14. This comment has been removed by a blog administrator.

      Delete
    15. Imman John சார் நீங்கள் எந்த மாடல் மொபைல் பயன்படுத்துகிறீர்கள்...

      Delete
    16. சார் நீங்கள் உங்கள் அலைபேசியில் "செல்லினம்" கொண்டு தட்டச்சு செய்யுங்கள் அதில் ஸ்ரீ வருகிறது... எளிமையாகவும் இருக்கும்...

      Delete
  11. Sri sir, what happened to our Government, seriously is Govt afraid on cases filed on various benches?????

    ReplyDelete
  12. புலம் என்பது இடத்தைக் குறிக்கும்.......மாம்புலம் என்பதே மருவி மாம்பலம் ஆயிற்று எனவும் கேள்விபட்டேன்..... (from7th tamil book)

    ReplyDelete
  13. நன்றி ஸ்ரீ அவர்களே.........இதை அப்படியே 6ம் வகுப்பு நாடும் நகரமும் பாடத்திற்கு பயன்படுத்தி கொள்வேன்..........

    ReplyDelete
  14. இரவு வணக்கம் நண்பர்களே. மீண்டும் நாளை சந்திப்போம். நாளை குற்றாலம் வர விரும்புகிறவர்கள் வரலாம் நண்பர்களே. நுழைவுக்கட்டணம் 96******88 என்ற எண்ணுக்கு 230 ரீசார்ஜ் பண்ணிவிடவும்!!!!!!!!!!

    ReplyDelete
  15. Ooradangia nerathilium Ottap panthayamaa........?
    (En imaigalukku)

    ReplyDelete
    Replies
    1. கவிதை கவிதை. சாமானியன் சார் சூப்பர்

      Delete
    2. நீங்கள் ஹைக்கூ முயற்சி பண்ணுங்கள் நண்பரே

      Delete
    3. யாரப்ப அது சாமானியன்

      Delete
    4. Dear imman sir... Thanks sir.... Intha samaanianin varigalai paaratavum oru jeevan irukiratho... Nandri sir... Muyarsi seigiren

      Delete
    5. Power sir.... Pal set ah kalati vachitu vanga soli podren.....
      ( fun)

      Delete
  16. Dear friends, If you have a function/party at your home and when you see lots of food may get wasted, Pls don't hesitate to call 1098 (IN INDIA ONLY) - child help line. They will come and collect the food. Please circulate this message which can help feed many children. PLEASE DON 'T BREAK THIS CHAIN, "Helping hands are better than Praying Lips"...

    ReplyDelete
  17. ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன்
    இறந்து விட்டான்.
    அவன் அதை உணரும் போது கையில்
    ஒரு பெட்டியுடன்
    கடவுள் அவன் அருகில் வந்தார்.
    கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான
    நேரம்
    நெருங்கி விட்டது......."
    ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா?
    இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய
    திட்டங்கள் என்ன ஆவது?"
    "மன்னித்துவிடு மகனே........உன்னைக்
    கொண்டு செல்வதற்கான
    நேரம் இது........."
    "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
    "உன்னுடைய உடைமைகள்........."
    "என்னுடைய உடைமைகளா!!!....
    ...அதாவது என்னுடைய
    பொருட்கள், உடைகள், பணம்,.............?"
    "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........
    அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."
    "என்னுடைய நினைவுகளா?............."
    "அவை கண்டிப்பாக
    உன்னுடையது கிடையாது.........
    அவை காலத்தின் கோலம்........"
    "என்னுடைய திறமைகளா?..........."
    "அவை கண்டிப்பாக
    உன்னுடையது கிடையாது.........
    அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."
    "அப்படியென்றால் என்னுடைய குடும்பமும்
    நண்பர்களுமா?......"
    "மன்னிக்கவும்...........
    குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான
    வழி.........."
    "அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"
    "உன் மனைவியும் மக்களும்
    உனக்கு சொந்தமானது கிடையாது.........
    அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர
    ்கள்............"
    "என் உடல்?..........."
    "அதுவும் உன்னுடையது கிடையாது..........
    உடலும் குப்பையும் ஒன்று........."
    "என் ஆன்மா?"
    "இல்லை........அது என்னுடையது.........."
    மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து
    அந்தப்
    பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்
    ளாகிறான்........
    காலி பெட்டியைக் கண்டு..........
    கண்ணில் நீர் வழிய கடவுளிடம்
    "என்னுடையது என்று
    எதுவும் இல்லையா?" எனக் கேட்க,
    கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ
    வாழும்
    ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.
    வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.
    ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக
    வாழ்வதுடன்,
    நல்ல செயல்களை மட்டும் செய்.
    எல்லாமே உன்னுடையது என்று நீ
    நினைக்காதே........"
    * ஒவ்வொரு நொடியும் வாழ்
    * உன்னுடைய வாழ்க்கையை வாழ்
    மகிழ்ச்சியாக வாழ மறக்காதே.......
    * அது மட்டுமே நிரந்தரம்.......
    * உன் இறுதிக் காலத்தில் நீ எதையும்
    உன்னுடன்
    கொண்டு போக முடியாது.............

    ReplyDelete
    Replies
    1. Nice comment.,

      Thank u mr.ATOZ...
      வாழ்க்கையின் முடிவு அவ்வளவுதான்...

      Delete
  18. கத்தரிக்காய் கத்தரிக்காய்
    பவரு அடிச்சா கத்தரிக்காய் நித்தி. ..

    ReplyDelete
  19. Power naan poweru,
    Eppavume naan periya toweru,
    Nithyavuku irrukku sugaru,
    Koundarku irruku periya Vayiru,
    Eppavume naan top gearu

    ReplyDelete
    Replies
    1. வருது காதுல ரத்த ரிவரு

      Delete
  20. யாராவது கூறுங்களேன்.

    பவருக்கும் நித்திக்கும் உள்ள ஒரு ஒற்றுமை. ......
    (இரவு வணக்கம். நாளை சந்திப்போம்)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி