பொதுத்தேர்வுகளை காரணம் காட்டி மாணவர்களின் விளையாட்டு வாய்ப்புகளை தடுக்ககூடாது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2014

பொதுத்தேர்வுகளை காரணம் காட்டி மாணவர்களின் விளையாட்டு வாய்ப்புகளை தடுக்ககூடாது.


பள்ளி கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பி உள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப போட்டிகளை நடத்த வேண்டும். வரும் அக்டோபர் 28ம் தேதி விளையாட்டு தினவிழாவை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும். சர்வதேச அளவில் விளையாட்டில் பதக்கம் பெறும் திறமை வாய்ந்தவர்களை கண்டறியும் நோக்கத்துடன் இளம்வயது சிறுவர், சிறுமியர் உடல்திறனை கண்டறிந்திட அவர்களை உரிய முறையில் தேர்வு செய்ய வேண்டும். ஆகஸ்ட்2ம் வாரத்திற்குள் உடல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். 6 முதல் 12ம் வகுப்பு வரை வாரத்திற்கு 2 உடற்கல்வி பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். விளையாட்டிற்கான இட ஒதுக்கீட்டில் 9, 10, 11, 12ம் வகுப்புகளில் பெறக்கூடிய விளையாட்டு சான்றிதழ்கள் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

எனவே, பொதுத்தேர்வுகளை காரணம் காட்டி மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தடை செய்யக்கூடாது. ஒவ்வொரு நிலையிலும் வெற்றிபெறும் அணிகள் அடுத்த போட்டிகளில் கண்டிப்பாக பங்கேற்க செய்ய வேண்டும். அவ்வாறு பங்கேற்க செய்ய தவறும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி