அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி: மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2014

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி: மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - தினமணி

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் ஆங்கிலவழிக் கல்வி திட்டத்தின் கீழ், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் 199, அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகள் 5, அரசு நடுநிலைப் பள்ளி 1, நகராட்சி நடுநிலைப் பள்ளி 1, கள்ளர் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகள் 4 என மொத்தம் 210 நடுநிலைப் பள்ளிகளும், 1,186 தொடக்கப் பள்ளிகளும் உள்ளன.

தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் ஆங்கில வழிக் கல்வி, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஆங்கிலவழிக் கல்வி திட்டம் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த 2012-13 கல்வி ஆண்டு முதல், இத் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 2012ஆம் ஆண்டில், 5 பள்ளிகளில் 53 மாணவர்கள் ஆங்கிலவழிக் கல்வித் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். அடுத்த கல்வியாண்டில், இந்த எண்ணிக்கை 1,606ஆக உயர்ந்தது. நிகழாண்டில் (2014-15) 2,417 மாணவர்கள் ஆங்கிலவழிக் கல்வியில் சேர்ந்துள்ளனர்.

தங்கள் குழந்தைகளும் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற பெற்றோர்களின் எண்ணம், ஆங்கிலவழிக் கல்விக்கு ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறது. ஆனால், அரசுப் பள்ளிகளில் ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் மூலமே, ஆங்கிலவழிப் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதனால், கற்பிக்கும் திறனில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

NOTE 1 : இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது: தற்போதைய சூழ்நிலையில் சிறப்பாக செயல்படக்கூடிய இளம் ஆசிரியர்களின் எண்ணிக்கை, அரசுப் பள்ளிகளில் குறைவாக உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, ஆங்கிலவழிக் கல்விக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

NOTE 2: அதன்படி, அடுத்த கல்வியாண்டு முதல், இளம் ஆசிரியர்களோடு ஆங்கில வழிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் ஆங்கிலக் கல்வியின் தரம் உயரும்போது, மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துவிடும். இதன்மூலம், வீதிக்கு வீதி பள்ளிகள் தொடங்கி கட்டண வசூல் நடத்தும் தனியார்களின் நடவடிக்கைகளை தடுப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

பிரபல பள்ளிகளின் வாசலில் அதிகாலை முதல் காத்து நிற்க வேண்டிய நிலையும், குழந்தைகளின் சேர்க்கைக்காக தேர்வு எழுத வேண்டிய நிலையும் பெற்றோர்களுக்கு ஏற்படாது....

என் கருத்து :
நட்ப்பு ஆண்டிலேயே ஆங்கிலவழிக் கல்விக்கான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையெ பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் வாயிலாகவும், TETதேர்வர்களின் வாயிலாகவும் , நமக்காக சட்டசபையில் குரல் கொடுப்பவரின் வாயிலாகவும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றால்  TET தேர்வர்களாகிய நமக்கு பணியிடங்கள் அதிகரிக்கும்....

நம் எல்லோரின் நலனுக்காக நம்மால் முடிந்த அளவு முயற்சி எடுக்கலாமே!!!!

10 comments:

  1. நல்ல விசயம். தமிழை விரூம்பி படிப்பவர்கள் படிக்கட்டும்.தாய்மொழியாக இருந்தாலும் அதையும் கூட திணிக்க கூடாது.அவரவர் விருப்பத்திற்கு கல்விமுறை இருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. RAJALINGAM SIR BCM ABOVE 90 HOW MANY MEMBERS ?

    ReplyDelete
    Replies
    1. Theriyala sir....search pannittu irukken therinjathum post pantren....

      Delete
    2. சார் என்ன பன்றது நாம் முயற்சி எப்படி எடுப்பது அதான் தனியார் பள்ளி காரவுங்க அரசு அதிகாரியை கவனிச்சு அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வி இல்லாம பன்னபாக்குராங்களே

      Delete
    3. Good.....
      Balabharathi MLA avangala parthu intha koorikkaiye vaikkalamee....

      Delete
    4. sir tamilvazhi certificate old (padicha institute)is enfa or diet la vanganuma? pls inform sir

      Delete
    5. MR rajalingam sir this is Anthony Sammy .my friend weightage is 68.60 BC COMMUNITY physics major .any chance to him.

      Delete
  3. hi friends
    if you are in madurai, please help me to find O.C.P.M Hr.Sec.School ,Madurai. I am from nellai. please give the route& landmarks

    ReplyDelete
  4. yes sir, ontu cheruvom, ellorum chernthu kural koduppom..ankila vazhi kalvi enta peyaril thuvanki old teachers vaithu class eduppathu eppadi. thamilil than karppikkirange.. anal cholvathu ankila vazhi.. either choose separate teachers for english medium or hereafter dont use the word english medium. old teachers... old class... old books...only change in the name of the medium...english what an ironical situation? ... If gvt appoint teachers for English medium sure no of postings will be increased.. so many from us will get job....Sir, What I have to do for this...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி